ஓலா, ஆக்டிவா.. இந்த டூ-வீலர்களை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. விரைவில் அறிமுகமாகிறது ஆஸ்திரேலியா பிராண்ட்!

வாகனங்களுக்கான மிகப் பெரிய சந்தையாக இந்தியா விளங்குகின்றது. குறிப்பாக, இரண்டு சக்கர வாகனங்களுக்கு நாட்டில் மிகப் பெரிய அளவில் வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே வெளிநாட்டு நிறுவனம் இந்தியாவில் கால் தடம் இருப்பதாகவும், அது தமிழ்நாட்டில் முதலீடு செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

சென்னையில் உள்ள நந்தம்பாக்கத்தில் சமீபத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் பன்னாட்டு முதலீட்டை ஈர்க்கும் விதமாக இந்த மாநாடு தமிழகத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா உட்பட வெளிநாடுளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் சிலவும் கலந்துக் கொண்டன.

Tac ev tn

அந்தவகையில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டிஏவி (TAV) நிறுவனமும் தமிழகத்தில் நடைபெற்ற இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துக் கொண்டது. இந்த பங்களிப்பைத் தொடர்ந்து அது தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான ஒப்பந்தத்திலும் கையொப்பம் போட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிறுவனம் சுமார் 10 மில்லியன் ஆஸ்திரேலியா டாலர் மதிப்பில் இந்தியாவில் முதலீடு செய்ய திட்டமிட்டு இருக்கின்றது.

டிஏவி, மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமாகவே இந்தியாவில் கால்தடம் பதிக்க இருக்கின்றது. இந்த நிறுவனம் இந்தியாவில் சுமார் 25 ஆயிரம் யூனிட்டுகள் தொடங்கி 1 லட்சம் யூனிட்டுகள் வரையில் எலெக்ட்ரிக் இரண்டு சக்கர வாகனங்களை அடுத்த மூன்று ஆண்டுகளில் தயாரிக்க திட்டமிட்டு உள்ளது.

Tac ev

Note: Images are representative purpose only தன்னுடைய முதல் எலெக்ட்ரிக் பைக்கை மிக மிக குறைவான விலையில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக டிஏவி அறிவித்து இருக்கின்றது. மேலும், இது ஓர் மிட்-டிரைவ் அம்சம் கொண்ட ஃபேமிலிக்கான இ-வாகனமாக இருக்கும் என்றும் தன்னுடைய அறிக்கையில் டிஏவி கூறி இருக்கின்றது.

டிஏவி ஓர் மைக்ரோ-மொபிலிட்டி நிறுவனம் ஆகும். தொடக்கத்தில் வழக்கமான பெட்ரோல் டூ-வீலர்களை மின்சார வாகனமாக மாற்றுவதற்கான இ-பைக் கிட்களை உருவாக்கும் பணியிலேயே களமிறங்கியது. இந்த நிலையிலேயே பிந்தைய நாட்களில் அது இ-வாகன உற்பத்தியைக் கையில் எடுத்தது. மேலும், இது இந்திய மின்சார இருசக்கர வாகன உற்பத்தியாளர்களை தங்களை மேம்படுத்திக் கொள்ளவும் உதவ இருப்பதாக தெரிவித்து இருக்கின்றது.

ஆஸ்திரேலிய இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனத்தைப் போலவே, இதே ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த சுகாதார தொழில்நுட்பம் நிறுவனம் ஒன்றும் இந்தியாவில் அதன் கால் தடத்தைப் பதித்து இருக்கின்றது. இதுபோன்று இன்னும் பல முதலீடுகளை சமீபத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் வாயிலாக தமிழகம் கவர்ந்திருக்கின்றது.

இதுதவிர, ஹூண்டாய் மற்றும் ராயல் என்பீல்டு போன்ற நிறுவனங்கள் தங்களின் முதலீடுகளை கூடுதலாக்க இருப்பதாகவும் இந்த மாநாட்டில் தெரிவித்து இருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே டிஏசி-யும் அதன் தமிழக முதலீட்டை உறுதிப்படுத்தி இருக்கின்றது. இதன் வாயிலாக டிஏசி நிறுவனமும் விரைவில் இந்தியாவின் மின்சார இருசக்கர வாகன பிரிவில் அதன் மிக சிறந்த போட்டியாளனாக பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது என்ன மாதிரியான திறன் கொண்ட மற்றும் வசதிக் கொண்ட இ-பைக்கை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது என்பது பற்றிய விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. அதேவேளையில், இப்போது விற்பனையில் இருக்கும் மின்சார இருசக்கர வாகனங்களைவிட அதிக சிறப்பம்சங்களைத் தாங்கியதாகவும், மலிவு விலைக் கொண்டதாகவும் அது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக இந்த பிரிவில் ஓலா நிறுவனமே தலைவனாக விளங்கிக் கொண்டிருக்கின்றது. ஓலாவின் இந்த பதவியை தட்டி பறிக்கும் நோக்கிலேயே உலக நிறுவனங்கள் இந்தியாவில் கால் தடம் பதித்துக் கொண்டிருக்கின்றன. டிஏசி-யின் வருகையும் இதை நோக்கியதாகவே இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 10, 2024, 16:35 [IST]
English summary
Australian e bike firm tac inks mou in tn
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X