பஜாஜ் வாகனங்கள் தான் வெளிநாடுகள் முழுக்க... லாபத்திற்கு மேல் லாபம் குவிக்கும் பக்கா இந்திய கம்பெனி!!

பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto), புனேவில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டுவரும் முன்னணி இந்திய ஆட்டோமொபைல் நிறுவனம். இரு சக்கர வாகனங்கள் மட்டுமின்றி, 3-சக்கர வாகனங்கள் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் பணியிலும் பஜாஜ் ஆட்டோ ஈடுப்பட்டு வருகிறது. இதன் மூலமாக இந்தியாவில் தவிர்க்க முடியாத ஆட்டோமொபைல் நிறுவனங்களுள் ஒன்றாக பஜாஜ் விளங்குகிறது. இத்தகைய நிறுவனத்தில் இருந்து கடந்த 2024 ஆகஸ்ட் மாதத்தில் எத்தனை வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பது குறித்த விபரங்களை இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம், வாங்க.

நடந்து முடிந்த ஆகஸ்ட் மாதத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் 2-வீலர் மற்றும் கமர்ஷியல் வாகனங்கள் என அனைத்தின் விற்பனையும் கணிசமாக அதிகரித்துள்ளது. பஜாஜ் 2-வீலர்கள் விற்பனையை மட்டும் பார்த்தால், கடந்த மாதத்தில் மொத்தம் 3 லட்சத்து 35,178 பஜாஜ் 2-வீலர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

bajaj 2-wheelers sales increased

அதுவே 2023ஆம் ஆண்டில் இதே ஆகஸ்ட் மாதத்தில் 2 லட்சத்து 85,031 இரு சக்கர வாகனங்களை மட்டுமே பஜாஜ் நிறுவனத்தால் விற்பனை செய்ய முடிந்தது. இந்த வகையில் பார்த்தால், பஜாஜ் 2-வீலர்கள் விற்பனை 18% அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட 3 லட்சத்து 35,718 பஜாஜ் 2-வீலர்களில் 2 லட்சத்து 8,621 இரு சக்கர வாகனங்கள் உள்நாட்டில், அதாவது இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டவை ஆகும்.

2023 ஆகஸ்ட்டில் 1 லட்சத்து 60,820 இரு சக்கர வாகனங்களை மட்டுமே உள்நாட்டில் பஜாஜ் விற்பனை செய்திருந்தது. கடந்த மாதத்தில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பஜாஜ் 2-வீலர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 26,557 ஆகும். இதற்கு இணையாக, 2023 ஆகஸ்ட்டிலும் 1 லட்சத்து 24,211 இரு சக்கர வாகனங்களை இந்தியாவில் உற்பத்தி செய்து பஜாஜ் நிறுவனம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருந்தது.

bajaj 2-wheelers sales increased

ஆட்டோ ரிக்‌ஷா உள்ளிட்ட பஜாஜ் கமர்ஷியல் வாகனங்களை பொறுத்தவரையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மொத்தமாக 62,626 கமர்ஷியல் வாகனங்களை பஜாஜ் விற்பனை செய்துள்ளது. 2023 ஆகஸ்ட்டில் 56,617 வாகனங்கள் மட்டுமே விற்கப்பட்டு இருந்தன. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட 62,626 கமர்ஷியல் வாகனங்களில் 45,206 இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டவை ஆகும். மீதி 17,420 வாகனங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை ஆகும்.

2023 ஆகஸ்ட் மாதத்தில் 44,280 கமர்ஷியல் வாகனங்களை இந்தியாவிலும், 12,337 வாகனங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் பஜாஜ் செய்திருந்தது. பஜாஜ் 2-வீலர்கள் மற்றும் கமர்ஷியல் வாகனங்கள் என ஒட்டுமொத்தமாக பார்த்தால், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 3 லட்சத்து 97,804 வாகனங்களை பஜாஜ் ஆட்டோ விற்பனை செய்துள்ளது. இதில் உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்டவை 2 லட்சத்து 53,827 மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை 1 லட்சத்து 43,977 ஆகும்.

bajaj 2-wheelers sales increased

2023 ஆகஸ்ட் மாதத்தில் 3 லட்சத்து 41,648 வாகனங்களை மட்டுமே பஜாஜ் ஆட்டோவால் ஒட்டுமொத்தமாக விற்பனை செய்ய முடிந்தது. இதில், உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்டவை 2 லட்சத்து 5,100 மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை 1 லட்சத்து 36,548 ஆகும். ஒட்டுமொத்தமாக கடந்த 5 மாதங்களில் (2024 ஏப்ரல்- ஆகஸ்ட்), 15 லட்சத்து 83,636 வாகனங்களை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

இதில், இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட 9 லட்சத்து 59,965 வாகனங்களும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட 6 லட்சத்து 23,671 வாகனங்களும் அடங்குகின்றன. கடந்த 2023ஆம் ஆண்டில் இதே ஏப்ரல்- ஆகஸ்ட் மாதத்தில் 14 லட்சத்து 43,201 வாகனங்களை மட்டுமே பஜாஜ் விற்பனை செய்திருந்தது. இதில் உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்டவை 8 லட்சத்து 45,741 மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை 5 லட்சத்து 97,460 ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதில் இருந்து பார்த்தால், பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் விற்பனை நாளுக்கு நாள் குறிப்பிட்ட வேகத்தில் அதிகரித்து வருவதை அறிய முடிகிறது. குறிப்பாக, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பஜாஜ் வாகனங்களுக்கு டிமாண்ட் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல், இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கையும் மெதுவாக அதிகரித்து வருகிறது.

More from DriveSpark

Article Published On: Sunday, September 8, 2024, 20:27 [IST]
English summary
Bajaj 2 wheelers sales increased to 18 percent check all details here
மேலும்... #bajaj auto #bike sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X