வீட்டுக்கு வீடு சிஎன்ஜி பைக்கை வாங்கலாம்! தரை மட்ட ரேட்டுக்கு புது பைக் வரப்போகுது!

பஜாஜ் நிறுவனம் சமீபத்தில் உலகின் முதல் சிஎன்ஜி பைக்காக தனது ஃப்ரீடம் 125 என்ற பைக்கை அறிமுகப்படுத்தியது. இந்த பைக்கிற்கான புக்கிங் தற்போது நடந்து வருகிறது. ஒவ்வொரு நகரம் வாரியாக இதன் புக்கிங் விரிவுபடுத்தப்பட்டு புதிதாக வாகனம் வாங்குபவர்களை கவர்ந்து புக்கிங் செய்யப்பட்டு வருகிறது. இதன் டெலிவரிகள் அடுத்த மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பஜாஜ் நிறுவனம் அடுத்த சிஎன்ஜி பைக்கை வெளியிட தயாராகி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இன்று பெட்ரோல் விலை அதிகமாக இருப்பதால் மக்கள் பலர் அதிக மைலேஜ் விரும்பும் பைக்குளை எதிர்பார்க்கிறார்கள். பெட்ரோல் பங்கில் அதிக மைலேஜ் தரும் வகையில் தற்போது பிஎஸ் 6 கட்டுப்பாடுகளுடன் உருவாக்குவது கடினமாக இருக்கிறது. இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மாற்று வழியை யோசிக்க துவங்கி விட்டார்கள். இதற்கிடையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் ஒரு பக்கம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

bajaj cng bike

இந்நிலையில் பெட்ரோல் இன்ஜினியிலேயே சிஎன்ஜி எரிபொருளை பயன்படுத்தி கார்களில் உள்ளதை போல பைக்குகளிலும் சிஎன்ஜி மூலம் இயங்கும் பைக்குகளை உருவாக்க பஜாஜ் நிறுவனம் திட்டமிட்டு இதற்கான ஏற்பாடுகளை செய்தது. இதற்கான சோதனைகள் அனைத்தும் அனைத்தும் வெற்றி அடைந்த நிலையில் தற்போது பஜாஜ் நிறுவனம் உலகின் முதல் சிஎன்ஜி பைக்காக பிரீடம் 125 என்ற பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த பைக்கிற்கான புக்கிங் ஏற்கனவே துவங்கி விட்டது. பலர் இந்த பைக்கை புக் செய்து வருகிறார்கள். பஜாஜ் நிறுவனம் எதிர்பார்த்ததைவிட இந்த பைக்குக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு இருப்பதால் இந்த பைக் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் இந்த பைக்கின் டெலிவரி துவங்குகிறது. இந்நிறுவனம் செய்துள்ள கணிப்பின்படி மாதம் 20 ஆயிரம் பைக்குகள் தற்போது டெலிவரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 40 ஆயிரமாக மாறும் எனவும் விரைவில் மாதம் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பைக்குகள் இந்தியாவில் விற்பனையாகி விடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பஜாஜ் நிறுவனத்தின் தலைவர் ராஜீவ் பஜாஜ் சமீபத்தில் ஊடகங்கள் மத்தியில் பேசிய போது பஜாஜ் நிறுவனம் அடுத்த சிஎன்ஜி பைக்கை வெளியிட தயாராகி வருவதாக தெரிவித்து இருந்தார்.

இது குறித்து நாம் விசாரித்த போது இது பஜாஜ் நிறுவனத்தின் குறைந்த விலை சிஎன்ஜி பைக்காக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதாக தெரிகிறது. அதாவது பஜாஜ் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள பைக் 125 சிசி இன்ஜின் கொண்ட பைக்காக இருக்கிறது. புதிதாக நிறுவனம் 100 சிசி இன்ஜினில் இப்படியாக சிஎன்ஜி சிலிண்டரை பொருத்தி விற்பனைக்கு அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

இதன்மூலம் அதிக மைலேஜ் தரும் சிஎன்ஜி பைக்காக இந்த பைக் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன் விலையும் குறைவாக இருப்பதால் மக்கள் பலர் இந்த பைக்கை வாங்க ஆர்வமாக இருப்பார்கள் என எதிர்பார்க்கலாம்0 பெட்ரோல் பைக்கின் விலைக்கு போட்டியாக இந்த பைக் களமிறங்கும் பட்சத்தில் நிச்சயம் இதன் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது போக பஜாஜ் நிறுவனம் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் புதிய பிளாட்ஃபார்மை உருவாக்கியது. இந்த ஸ்கூட்டர் தொடர்ந்து சிறப்பாக இந்திய மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. ஒட்டுமொத்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் 18 சதவீதம் மார்க்கெட் பங்கை வைத்துள்ளது. இந்நிலையில் பண்டிகை காலத்திற்குப் பிறகு பஜாஜ் நிறுவனம் சேர்த்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் குறைந்த விலை அறிமுகப்படுத்தவும் வாய்ப்பு உள்ளது.

பஜாஜ் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் எலெக்ட்ரிக் பைக் தான் நல்ல மவுசு இருக்கும் என எதிர்பார்க்கிறது. இதன் காரணமாக நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிக்க தான் அதிக ஆர்வம் காட்டுகிறது. எலெக்ட்ரிக் பைக் மீது பெரிய ஆர்வம் இந்நிறுவனம் காட்டவில்லை. எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் பைக்களும் நல்ல வரவேற்பை பெற்றால் இந்நிறுவனம் எலெக்ட்ரிக் பைக்குகளையும் தயாரிக்க தயாராகிவிடும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் உள்ள வாகன வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் விலையை மிக முக்கியமான விஷயமாக பார்க்கிறார்கள். அவர்கள் பெட்ரோல் வாகனத்தில் சிஎன்ஜி வாகனத்தை ஒப்பிடும்போது சிஎன்ஜி வாகனத்தின் விலை அதிகமாக இருந்தால் அதை வாங்க தயங்குகிறார்கள் இதை கருத்தில் கொண்டு பஜாஜ் நிறுவனம் குறைந்த விலையில் சிஎன்ஜி பைக்கை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது நிச்சயம் மிகப்பெரிய வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 28, 2024, 12:12 [IST]
English summary
Bajaj affordable cng bike new details
மேலும்... #Bajaj CNG Bike #bajaj auto #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+