பஜாஜ் இதுக்கு மேல என்ன தான் செய்யும்... பைக்கை கம்மியான விலையில் கொண்டுவந்தும் பெருசா யூஸ் இல்ல!!
பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto), இந்தியாவின் முன்னணி 2-வீலர் நிறுவனங்களுள் ஒன்று என்பதை கூற வேண்டியதில்லை. பல்சர் என்கிற மிக பிரபலமான பைக்குகளின் விற்பனையை பஜாஜ் பெரிதும் நம்பியுள்ளது. இதன் காரணமாகவே மார்க்கெட்டில் புதிய, புதிய பல்சர் பைக்குகள் தொடர்ச்சியாக அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சமீபத்தில் 400சிசி-இல் கூட பல்சர் பைக் அறிமுகம் செய்யப்பட்டதை கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். இது மட்டுமில்லாமல் வேறு சில 400சிசி பைக்குகளும் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படுகின்றன.
இந்தியாவில் விலை குறைவான பைக்குகளை வாங்க ஒருபக்கம் பெரிய கூட்டம் இருக்கும் அதேவேளையில், பிரீமியம் தரத்திலான பைக்குகளை வாங்கவும் நிறைய கஸ்டமர்கள் நம் நாட்டிலும் விரும்ப ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக, 350சிசி-400சிசி-இல் கடந்த சில வருடங்களில் பல்வேறு பைக்குகள் வந்துள்ளன. அவற்றுள் பெரும்பாலானவை ராயல் என்ஃபீல்டில் இருந்துதான் வந்தவை தான்.

ஆனால், அதேநேரம் புனேவை சேர்ந்த பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தில் இருந்தும் சில 400சிசி பைக்குகள் சமீப காலத்தில் விற்பனைக்கு வந்துள்ளன. இதன்படி, பஜாஜ் பல்சர் மற்றும் டோமினார் பைக்குகள் 400சிசி என்ஜின் உடன் விற்பனை செய்யப்படுகின்றன. பஜாஜ் ஆட்டோ உடன் கூட்டணியில் உள்ள டிரையம்ப், கேடிஎம் மற்றும் ஹஸ்க்வர்னா நிறுவனங்களில் இருந்தும் 400சிசி பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
டிரையம்ப் மோட்டார்சைக்கிளில் இருந்து பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஆண்டில் விலை குறைவான டிரையம்ப் பைக்காக அறிமுகம் செய்யப்பட்ட ஸ்பீடு 400 மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் பைக்குகளும், கேடிஎம்-இல் இருந்து ட்யூக், அட்வென்ச்சர் மற்றும் ஆர்சி பைக்குகளும், ஹஸ்க்வர்னாவில் இருந்து ஸ்வார்ட்பிளேன் பைக்குகளும் 400சிசி-இல் விற்பனை செய்யப்படுகின்றன.

இவை மொத்தமாக கடந்த 2024 செப்டம்பர் மாதத்தில் 7,059 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்த பைக்குகள் 6,296 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்க்கும்போது, பஜாஜ் ஆட்டோவின் 400சிசி பைக்குகளின் விற்பனை 12.12%, அதாவது 763 யூனிட்கள் அதிகரித்துள்ளது.
ஆனால், இந்த ஆண்டு ஆகஸ்ட் உடன் ஒப்பிடுகையில் செப்டம்பரில் 400சிசி பஜாஜ் பைக்குகளின் விற்பனை 3.38%, அதாவது 247 யூனிட்கள் குறைந்துள்ளது. 400சிசி பஜாஜ் பைக்குகள் என்றால் அதில் பஜாஜ் பைக்குகள் மட்டுமில்லாமல் டிரையம்ப், கேடிஎம் மற்றும் ஹஸ்க்வர்னா பைக்குகளும் அடங்குகின்றன. பஜாஜ் ஆட்டோவில் இருந்து 400சிசி பல்சர் பைக்காக பல்சர் என்.எஸ்400இசட் அறிமுகம் செய்யப்பட்டது.

ஆனால், பல்சர் என்.எஸ்400இசட் ஒன்றும் அதிகம் விற்பனையாகும் பஜாஜ் 400சிசி பைக் கிடையாது. பல்சர் என்.எஸ்400இசட் அறிமுகம் செய்யப்பட்ட சமயத்தில் இருந்தே இந்த பைக்கிற்கு பெரியதாக வரவேற்பு கிடைக்காமல் இருந்து வருகிறது. பஜாஜ் கூட்டணியில் இருந்து அதிகம் விற்பனையாகும் பைக்காக டிரையம்ப்பின் 400சிசி பைக்குகளான ஸ்பீடு 400 மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் உள்ளன.
இவை இரண்டும் கடந்த செப்டம்பர் மாதத்தில் 3,411 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் உண்மையில், 2023 செப்டம்பரை விட இந்த எண்ணிக்கை குறைவாகும். ஏனெனில் அந்த மாதத்தில் 4,508 400சிசி பைக்குகளை பஜாஜ் விற்பனை செய்திருந்தது. ஆனால், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 3,328 பைக்குகளை மட்டுமே டிரையம்ப் விற்பனை செய்திருந்தது. பஜாஜ் பல்சர் என்.எஸ்400இசட் பைக்குகள் 2,122 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பஜாஜ் கூட்டணியில் இருந்து விற்பனை செய்யப்பட்ட 400சிசி பைக்குகளில் கிட்டத்தட்ட 50% பைக்குகள் டிரையம்ப் நிறுவனத்துடையது என்பது ஆச்சிரியமாக உள்ளது. இது இந்தியாவில் டிரையம்ப் நிறுவனத்திற்கு அதிகரித்துவரும் வரவேற்பை காட்டுகிறது. மேலும், டிரையம்ப் ஸ்பீடு டி4 என்கிற மேலும் விலை குறைவான பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், வரும் மாதங்களில் டிரையம்பின் விற்பனை எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









