பல்சர் பைக்கை புதுசா வாங்க போறீங்களா? இந்த சலுகையை பற்றி தெரிஞ்சிக்கோங்க!!

பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto), இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களுள் ஒன்று. 2-வீலர்களில் இருந்து கமர்ஷியல் வாகனங்கள் வரையில் பஜாஜ் நிறுவனத்தில் இருந்து தற்சமயம் விற்பனை செய்யப்படுகின்றன. 2-வீலர்களை பொறுத்தவரையில், பஜாஜ் நிறுவனத்தின் அடையாளமாக இருப்பது பல்சர் பைக்குகள் ஆகும். 125சிசி-இல் இருந்து 400சிசி வரையில் பல்வேறு விதமான பல்சர் பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலத்தை முன்னிட்டு பல்சர் பைக்குகளுக்கு அசத்தலான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் வருட இறுதியில் வரும் தீபாவளி, தசரா உள்ளிட்ட பண்டிகை காலத்தின்போது தான் மக்கள் நிறைய பேர் புதிய வாகனங்களை வாங்குகின்றனர். இதனால், சரியாக இந்த நேரம் பார்த்து தள்ளுபடி மற்றும் சலுகைகளை அறிவித்து விற்பனையை அதிகரிக்க ஆட்டோமொபைல் நிறுவனங்கள் முயற்சிக்கின்றன. அந்த வகையில், இந்த வருடத்திலும் ஏகப்பட்ட ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தீபாவளி சலுகைகளை அறிவித்துள்ளன.

bajaj auto announces festive offer

அந்த வரிசையில், பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அதன் அதிரடியான பண்டிகை கால சலுகைகளை அதன் பல்சர் பைக்குகளுக்கு அறிவித்துள்ளது. இதன்படி, பல்சர் பைக்குகளை வாங்கும்போது அதிகப்பட்சமாக ரூ.10,000 வரையிலான பணத்தை மிச்சப்படுத்தலாம். இதில் ரூ.5,000 வரையிலான பணம் தள்ளுபடி அடங்குகிறது. இந்த ரூ.5,000 வரையிலான பணம் தள்ளுபடியை பல்சர் 125 கார்பன் ஃபைபர், என்.எஸ்125, என்150, என்160, என்.எஸ்200 மற்றும் என்250 பைக்குகளை வாங்கும் வாடிக்கையாளர்கள் பெறலாம்.

இது இல்லாமல் குறுகிய காலத்திற்கான ரூ.5,000 பணம் தள்ளுபடியையும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால், இந்த குறுகிய கால ரூ.5,000 பணம் தள்ளுபடியை பெற வேண்டுமெனில் டீலர்ஷிப் ஷோரூமில் பைன் லேப்ஸ் மெஷின்ஸ் வாயிலாக நீங்கள் எச்.டி.எஃப்.சி கிரெடிட் கார்ட்டில் பல்சர் பைக்கை வாங்க வேண்டும். இந்த இரு பணம் தள்ளுபடியையும் சேர்த்துதான் ரூ.10,000 வரையிலான பணம் தள்ளுபடி என பஜாஜ் ஆட்டோ அறிவித்துள்ளது.

எச்.டி.எஃப்.சி கிரெடிட் கார்டை பயன்படுத்தி வாங்காத வாடிக்கையாளர்களுக்கு மேற்கூறப்பட்ட பல்சர் பைக்குகள் ரூ.5,000 வரையிலான பணம் தள்ளுபடி உடன் மட்டுமே கிடைக்கும். இருப்பினும், அமேசான், ஃப்ளிப்கார்ட்டில் பல்சர் பைக்குகளை வாங்குவோர் இந்த ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் வழங்கும் சலுகைகளை பெறலாம். ஃப்ளிப்கார்ட் நிறுவனம் பஜாஜ் பல்சர் பைக்குகளுக்கு அதிரடியான சலுகைகளை பண்டிகை காலத்தை முன்னிட்டு அறிவித்துள்ளதாக ஏற்கனவே நமது செய்தித்தளத்தில் கூறியிருந்தோம்.

பண்டிகை கால சலுகைகள் குறித்து பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தலைவர் சரங் கனாதே கூறுகையில், "புதிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ள பல்சர் பைக்குகளுக்கு 2024 ஒரு முக்கியமான ஆண்டாகும். எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு இந்த சூப்பரான பண்டிகை சலுகையை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். பல்சர் பைக்குகள் எப்போதும் செயல்திறன் மற்றும் ஸ்டைலுக்கு ஒத்ததாக உள்ளது.

bajaj auto announces festive offer

இப்போது இந்த கணிசமான சேமிப்புகளுடன் நாங்கள் அதை இன்னும் அணுகக்கூடியதாக ஆக்குகிறோம். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிகப்பட்ச மதிப்பை வழங்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை இந்த முன்முயற்சி மீண்டும் உறுதிப்படுத்துகிறது. மேலும், இந்த கொண்டாட்ட நேரத்தில் பல்சரை சொந்தமாக வைத்திருப்பதன் மகிழ்ச்சியை அதிக ரைடர்ஸ் அனுபவிக்க அனுமதிக்கிறது" என்றார்.

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் முதன்முதலாக 2001ஆம் ஆண்டில் அதன் முதல் பல்சர் பைக்கை அறிமுகம் செய்தது. இந்த 2024ஆம் ஆண்டில் அப்கிரேட் செய்யப்பட்ட பல்சர் பைக்குகளில் ப்ளுடூத் கனெக்ட்டிவிட்டி உடன் டிஜிட்டல் கன்சோல், எல்இடி ஹெட்லேம்ப்கள், நேவிகேஷன் மற்றும் யுஎஸ்பி சார்ஜிங் துளைகள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சந்தையில் விற்பனையில் உள்ள பஜாஜ் பல்சர் பைக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இருப்பினும் அதற்கேற்ப பல்சர் பைக்குகளின் விற்பனை எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் இவ்வாறான சலுகைகள் மூலம் விற்பனையை மேலும் அதிகரிக்கவும் ஒருபக்கம் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, September 30, 2024, 21:06 [IST]
English summary
Bajaj auto announces festive offer on upgraded pulsar bikes check all details here
மேலும்... #bajaj auto #bajaj pulsar #diwali #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+