75 ஆண்டுகால பஜாஜ் நிறுவனத்துக்கு டஃப் கொடுக்கும் ஓலா! இவர்கிட்ட இருந்து இந்த வார்த்தை வருவது பெரிய விஷயம்!!
ஓலா எலக்ட்ரிக் (Ola Electric), இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் குறுகிய காலத்தில் முதலிடத்தை பிடித்த நிறுவனமாக உள்ளது. 2021ஆம் ஆண்டில் மார்க்கெட்டில் நுழைந்த ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், தற்போதைக்கு இந்தியாவின் டாப்-10 2-வீலர் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாக உள்ளது. ஓலா எலக்ட்ரிக்கின் இந்த அபரிதமான வளர்ச்சி, பஜாஜ் ஆட்டோ போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு கூட தலைவலியாக அமைந்துள்ளது. அதன் வெளிப்பாடாக, ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் வளர்ச்சியை அமோதிக்கும் விதமாக பஜாஜ் ஆட்டோவின் நிர்வாக இயக்குனர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதனை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவில் கடந்த வருடங்களில் இருந்து பல்வேறு இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் முளைத்துள்ளன. அவ்வாறு, 2021ஆம் ஆண்டில் மார்க்கெட்டுக்கு வந்த நிறுவனம்தான் ஓலா எலக்ட்ரிக் ஆகும். பெங்களூரை சேர்ந்த மற்றுமொரு இவி ஸ்டார்ட்-அப் நிறுவனமாக ஓலா எலக்ட்ரிக் களம்புகுந்தது. இந்த நிறுவனத்தின் பிரம்மாண்ட தொழிற்சாலை நமது தமிழ்நாட்டில் ஓசூரில் உள்ளது.

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் மார்க்கெட்டிற்கு வரும் முன்பே பல இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் அறிமுகமாகி இருந்தன; தற்போதும் புது, புது நிறுவனங்கள் வந்துக் கொண்டுதான் இருக்கின்றன. இருப்பினும், ஓலா எலக்ட்ரிக் மட்டும் குறுகிய காலத்தில் அதிகப்படியான வளர்ச்சியை கண்டிருப்பதற்கு காரணம், இந்த நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் கவர்ச்சிக்கரமான தோற்றம் ஆகும்.
அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பே ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் தோற்றம் மக்களை கவர ஆரம்பித்துவிட்டது. மேலும், ஸ்கூட்டரை புக் செய்யும் கஸ்டமர்களுக்கு விரைவாக டெலிவிரி கொடுப்பதற்காக பெரிய அளவிலான தொழிற்சாலையை ஆரம்பத்தில் இருந்தே ஓலா எலக்ட்ரிக் கொண்டுள்ளது. இவ்வாறு, ஆரம்பத்தில் இருந்தே ஒவ்வொரு விஷயத்தையும் சரியாக செய்துவரும் ஓலா எலக்ட்ரிக்கின் வளர்ச்சி முன்னணி 2-வீலர் நிறுவனங்களுக்கும் தலைவலியாக அமைந்துள்ளது.
இதனை வெளிக்காட்டும் வகையில், "ஓலா ஒரு குறிப்பிடத்தக்க நிறுவனமாக இருக்கும் அதேவேளையில், சேத்தக் சந்தையில் ஒரு ஃபயரான பிராண்ட் என்பதை குறிக்கிறது" என பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ் தெரிவித்துள்ளார். தனியார் செய்தி சேனல் ஒன்றிற்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் பேசிய ராஜீவ் பஜாஜ், "கடந்த 2.5 வருடங்களாக எலக்ட்ரிக் சேத்தக் குழுவில் இருக்கும் எனது மகன் ரிஷப் இன்று காலையில், டிசம்பர் வாகன் பதிவு தரவுகளின் அடிப்படையில், எங்கள் மின்சார ஸ்கூட்டர் சேத்தக் இப்போது இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் மின்சார ஸ்கூட்டராக உள்ளதாகவும், 3வது ஸ்கூட்டர் அல்ல எனவும் தெரிவித்தார்" என கூறியவர், இதன் காரணமாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் ஓலா எலக்ட்ரிக் தங்களை விட சிறந்த நிறுவனம் என கூற முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
இதில், சேத்தக் என இவர் குறிப்பிடுவது என்னவென்றால் பஜாஜ் ஆட்டோவின் ஒரேயொரு ஸ்கூட்டர் மற்றும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரான சேத்தக்கை ஆகும். 2020ஆம் ஆண்டு துவக்கத்தில் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட பஜாஜ் சேத்தக்கின் விற்பனை கடந்த 5 வருடங்களாக, ஏற்றம் இறக்கமாய் இருந்து வருகிறது. ஏனெனில், இந்த ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்ட சில மாதங்களிலேயே கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துவிட்டது.
அதன்பின், டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை அதிகரித்ததினால் பஜாஜ் சேத்தக்கின் விற்பனை குறைந்தது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் கண்டுவந்த சேத்தக்கின் விற்பனை 2021 ஆகஸ்ட்டில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுகத்திற்கு பின் அடிவாங்க துவங்கியது. ஆனால், இந்த டிசம்பர் மாத விற்பனையில் ஓலாவை பஜாஜ் முந்தியிருப்பதை ராஜீவ் பஜாஜின் பேட்டியின் மூலம் அறிய முடிகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராஜீவ் பஜாஜ் அவர்கள் இந்த டிசம்பர் மாதத்தில் ஓலாவை முந்தியுள்ளோம் என கூறினாரோ தவிர்த்து, எத்தனை ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்கிற விபரங்களை எல்லாம் தெரிவிக்கவில்லை. அதுமட்டுமின்றி, இந்த டிசம்பர் மாத துவங்கி இன்னும் 10 நாட்கள் கூட முழுமையாக நிறைவடையவில்லை.


Click it and Unblock the Notifications








