ஃப்ளிப்கார்ட்டில் விற்பனைக்கு வந்த பஜாஜ் பைக்குகள்.. ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கை இதுல வாங்கிக்க முடியுமா..
இந்தியாவின் முன்னணி இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் பஜாஜ் (Bajaj)-ம் ஒன்றாகும். இந்த நிறுவனமே தற்போது ஃப்ளிப்கார்ட் (Flipkart) உடன் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த இணைவின் வாயிலாக நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளும் ஃப்ளிப்கார்ட்டில் விற்பனைக்குக் கிடைக்கும் சூழல் உருவாகி இருக்கின்றது. ஆமாங்க, நிறுவனத்தின் அனைத்து டூ-வீலர் மாடல்களையும் இனி பஜாஜ் ஷோரூம்களை அடுத்து ஃப்ளிப்கார்ட்டிலும் வாங்கிக் கொள்ள முடியும். ஆனால், ஃப்ரீடம் 125 சிஎன்ஜி (Freedom 125 CNG) பைக் மட்டுமே வாங்க முடியாது. அது ஃப்ளிப்கார்ட் தளத்தில் பட்டியலிடப்படவில்லை.
பிளாட்டினா 100, சிடி110எக்ஸ், பிளாட்டினா 110, பல்சர் 125, பல்சர் என் 150, பல்சர் 125, பல்சர் என்எஸ் 200, அவென்ஜர், பல்சர் 150, பல்சர் என்எஸ் 125, பல்சர் என் 250, பல்சர் என்எஸ் 160, பல்சர் 220 எஃப், டோமினார் 200 மற்றும் டோமினார் 400 ஆகிய பைக் மாடல்கள் இப்போதைக்கு ஃப்ளிப்கார்ட்டில் பட்டியலிடப்பட்டு உள்ளன.

விரைவில் உலகின் முதல் சிஎன்ஜி பைக் மாடலாக அறியப்படும் ஃப்ரீடம் 125 சிஎன்ஜியும் ஃப்ளிப்கார்ட்டில் இணைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. பஜாஜ் - ஃப்ளிப்கார்ட் இணைவைத் தொடர்ந்து வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், இரண்டு சக்கர வாகனங்களின் விலையில் ரூ. 5 ஆயிரம் உடனடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.
இதுதவிர, 12 மாதங்களுக்கு கூடுதல் கட்டணம் இல்லா இஎம்ஐ திட்டத்தையும் அது அறிவித்து இருக்கின்றது. இத்துடன், வங்கி அட்டைகளுக்கான சில சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட என அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால், இந்த சலுகை குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
முதல் கட்டமாக 25 நகரங்களில் மட்டுமே ஃப்ளிப்கார்ட் வாயிலான தனது விற்பனையை பஜாஜ் தொடங்கி இருக்கின்றது. விரைவில் இன்னும் பல முக்கிய நகரங்களை அது இணைக்க இருக்கின்றது. ஆனால், உலகின் முதல் சிஎன்ஜி பைக் ஃப்ளிப்கார்ட்டில் இணைக்கப்படாதது பலருக்கு சோகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.
மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இந்த பைக்கை சமீபத்திலேயே பஜாஜ் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. கடந்த 5ஆம் தேதி அன்றே இது அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது. இது அரங்கேறி பல நாட்கள் ஆகியும், சில தினங்களுக்கு முன்னரே நாடு முழுவதிலும் இந்த வாகனத்திற்கான புக்கிங் பணிகள் தொடங்கின.
முன்னதாக குஜராத் மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மட்டுமே ஃப்ரீடம் 125 பைக்கிற்கான புக்கிங்குகள் தொடங்கின. இதேபோல், டெலிவரியும் புனேவிலேயே முதலில் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. கடந்த 17 ஆம் தேதி அன்றே இதன் டெலிவரி பணிகள் தொடங்கின. அன்றைய தினமே நாடு முழுவதிலும் இந்த பைக்கிற்கான புக்கிங் பணிகள் தொடங்கப்பட்டன.
பஜாஜ் ஃப்ரீடம் சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் இரண்டிலும் இயங்கும். இது ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 101 கிமீ மைலேஜையும், பெட்ரோலில் இயங்கும்போது 60 கிமீ வரையிலும் மைலேஜை வழங்கும். மேலும், ஒட்டுமொத்தமாக மூன்று விதமான வேரியண்டுகளில் இந்த பைக் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. இதன் ஆரம்ப விலை ரூ. 95 ஆயிரம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பஜாஜ் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே நாடு முழுவதிலும் உள்ள வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டும், தன்னுடைய தயாரிப்புகளை நாட்டின் அனைத்து மூலைகளுக்கும் கொண்டு சேர்க்கும் விதமாக நிறுவனம் ஃப்ளிப்கார்ட்டின் தன்னுடைய தயாரிப்புகளை விற்பனைக்கு பட்டியலிட்டு இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








