3 மணி நேரத்தில் 0-80 சதவீதம் சார்ஜ் செய்யலாம்.. பஜாஜ் சேத்தக் 35 சீரிஸ் விற்பனைக்கு அறிமுகம்.. விலை இவ்ளோதானா!

பிரபல இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பஜாஜ் (Bajaj), இந்தியாவின் மின்சார இரண்டு சக்கர வாகன (Electric Two Wheeler) பிரிவில் தன்னுடைய பங்களிப்பை வகிக்கும் விதமாக சேத்தக் (Chetak) எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) மாடலை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே சேத்தக் இ-ஸ்கூட்டர் மாடலில் நிறுவனம் புதிய 35 சரீஸ்-ஐ விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது, டிவிஎஸ்.

மொத்தமாக மூன்று விதமான வேரியண்டுகளில் இது இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. சேத்தக் 3501 (Chetak 3501), சேத்தக் 3502 (Chetak 3502) மற்றும் சேத்தக் 3503 (Chetak 3503) ஆகியவையே அந்த வேரியண்டுகள் ஆகும். இவற்றில் தற்போது முதல் இரண்டின் விலைகள் மட்டுமே அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.

Bajaj auto launches chetak 35 series

விரைவில் மூன்றாவது தேர்வின் விலையும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அறிமுகமாக 3501-க்கு ரூ. 1.27 லட்சம் விலையும், 3502-க்கு ரூ. 1.20 லட்சம் விலையும் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இவை அனைத்து எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன் ரோடில் இதை விடை சற்று அதிகமாகவே இதன் விலை இருக்கும்.

இந்திய மின்சார இரண்டு சக்கர வாகன பிரியர்களை முழுமையாக வளைத்துப் போட வேண்டும் என்கிற நோக்கிலேயே இந்த புதிய சீரிஸை பஜாஜ் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. சுலபமான ரைடிங் அனுபவம், பெரிய பூட் ஸ்பேஸ், குறைவான நேரத்தில் சார்ஜ் ஆகும் திறன் என ஏகப்பட்ட வசதிகளுடன் இந்த புதிய சீரிஸ் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றது.

விரிவாக சொல்ல வேண்டும் என்றால் ஓர் முழு சார்ஜில் 153 கிமீ வரையிலான ரேஞ்ச் திறன், 3 மணி நேரத்திலேயே பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜாகும் திறன் மற்றும் 35 லிட்டர் ஸ்டோரேஜ் ஆகிய வசதிகளுடனேயே புதிய சேத்தக் 35 சீரிஸ் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு உள்ளது.

இதன் அதிகபட்ச் ரேஞ்ச் 3.5 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. தொடர்ந்து, அட்வான்ஸ்டு ரைடிங் அனுபவத்தை வழங்கும் விதமாக இந்த ஸ்கூட்டருடன் 'டெக்-பேக்' (TecPac) எனும் அம்சத்தையும் வழங்க இருப்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. இதன் வாயிலாக பன்முக நவீன கால வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

உதாரணமாக, நேவிகேஷன், மியூசிக் கன்ட்ரோல், ஆவணங்களைச் சேகரித்து வைக்கும் வசதி, செல்போனுக்கு வரும் அழைப்பை நிர்வாகிக்கும் திறன் உள்ளிட்டவற்றை செய்துக் கொள்ள முடியும். இதுதவிர, ரிமோட் இம்மொபிலைசேஷன், வீட்டுக்குள் நாம் நுழையும் வரை வெளிச்சத்தை தரும் வசதி, ஜியோ ஃபென்சிங் மற்றும் திருட்டை தவிர்க்கும் வசதி உள்ளிட்டவற்றையும் பெற்றுக் கொள்ள முடியும்.

இத்துடன், மிக முக்கியமாக விபத்தை உணரும் வசதியும் இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. ஆகையால், இதில் மிகவும் அட்வான்ஸ்டான ரைடு அனுபவம் கிடைக்கும் என்பதில் சந்தேகமும் இல்லை. இதேபோல், ரைடர்களின் பாதுகாப்பிற்காக ஸ்கூட்டருக்கான பேட்டரி பேக்குகள் கால் வைக்கும் ஃப்ளூரில் நிலை நிறுத்தியிருக்கின்றனர்.

டிவிஎஶ் நிறுவனம் டிசம்பருக்கு பின்னரே இதன் டெலிவரி பணிகளைத் தொடங்க திட்டமிட்டு இருக்கின்றது. முதலில் சேத்தக் 3501 வேரியண்டின் டெலிவரி பணிகளே தொடங்கப்பட உள்ளது. இதற்கு பின்னரே சேத்தக் 3502 மற்றும் 3503 ஆகியவற்றின் டெலிவரி பணிகளும் நாட்டில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இப்போதைய நிலவரப்படி இந்தியாவின் மின்சார இரண்டு சக்கர வாகன பிரிவில் ஓலா எலெக்ட்ரிக்-இன் ஆதிக்கமே மிகப் பெரிய அளவில் உள்ளது. இந்த மாதிரியான சூழலிலேயே அதற்கு டஃப் கொடுக்கும் விதமாக பஜாஜ் நிறுவனம் புதிய சேத்தக் 35 சீரிஸை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, December 20, 2024, 15:40 [IST]
English summary
Bajaj auto launches chetak 35 series with 3 variants at starting rs 1 27 lakh
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+