1 லட்ச ரூபாய்க்குள் ஸ்டைலான புதிய பஜாஜ் பல்சர் பைக்!! இதைவிட கம்மியான விலையில் கிடைக்குறது ரொம்ப கஷ்டம்!

பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனத்திற்கு அடையாளமே அதன் பல்சர் பைக்குகள் தான் என சொன்னால், அது மிகையில்லை. இதன் காரணமாகவே, மார்க்கெட்டில் விற்பனையில் உள்ள பல்சர் பைக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், அவ்வாறு அறிமுகம் செய்யப்படும் பல்சர் பைக்குகளை அவ்வப்போது அப்டேட் செய்வதையும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மறந்தது இல்லை. அந்த வகையில் தற்போது பல்சர் என்125 (N125) பைக் மேம்படுத்தப்பட்ட தோற்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய பல்சர் என்125 பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பஜாஜ் ஆட்டோ, இந்தியாவின் முன்னணி 2-வீலர் நிறுவனங்களுள் ஒன்று. 3-வீலர்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் பணியிலும் பஜாஜ் ஆட்டோ ஈடுப்பட்டு வருகிறது. 2-வீலர்களை பொறுத்தவரையில், ஏற்கனவே கூறியதுபோல் பல்சர் பைக்குகள் பஜாஜ் ஆட்டோவின் மிகுந்த நம்பிக்கைக்கு உரியவைகளாக உள்ளன. இதன் வெளிப்பாடாகவே, புது, புது பல்சர் பைக்குகளை அறிமுகம் செய்வதை பஜாஜ் ஆட்டோ வாடிக்கையாக கொண்டுள்ளது.

new bajaj pulsar n125 launched

அதாவது, வெவ்வேறான தோற்றங்களில் பல்சர் பைக்குகள் தற்சமயம் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த வகையில் சில வருடங்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட பல்சர் பைக் தான் என்125 ஆகும். பல்சர் என்250 பைக்கின் அடிப்படையிலான 125சிசி பைக்காக பல்சர் என்125 அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், பல்சர் என்125 பைக்கை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மேம்படுத்தி அறிமுகம் செய்துள்ளது.

புதிய பல்சர் என்125 பைக்கின் தோற்றத்தை பற்றி சொல்ல வேண்டுமென்றால், பைக்கின் ஒட்டுமொத்த வடிவத்தில் பஜாஜ் ஆட்டோ சிறு சிறு மாற்றங்களை செய்துள்ளது. இதனால், புதிய என்125 பைக் பார்ப்பதற்கு சூப்பர்மோட்டார்ட் பைக்குகளை போன்று, மேல்பக்கத்தில் படகு போன்ற வடிவத்தை கொண்டுள்ளது. இதன் மூலமாக, ஜாலியான பயணத்தை பெறுவது மட்டுமின்றி, நகர்புற சாலைகளிலும் இந்த பைக்கை தைரியமாக பயன்படுத்தலாம்.

new bajaj pulsar n125 launched

பைக்கை சுற்றிலும் நிறைய இடங்களில் ஷார்ப்பான லைன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஓட்டும்போது ரைடரின் கால்முட்டிகளை கணக்கச்சிதமாக பிடித்துக்கொள்ளும் வகையில் பெட்ரோல் டேங்க் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, அந்த அளவிற்கு பெட்ரோல் டேங்க் பருத்த வடிவத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இருப்பினும், பைக்கின் எடை குறைவாகவே உள்ளது. டேங்க் நிரம்ப பெட்ரோல் உடன் பைக்கின் எடை 125 கிலோ ஆகும்.

ஏற்கனவே கூறியதுபோல், பைக்கின் மேல்பகுதி படகு போன்று வளைவாக கொடுக்கப்பட்டுள்ளதால், புதிய பல்சர் என்125 பைக் எதிர்காற்றில் எளிதாக நுழைந்து செல்லும் என கூறப்படுகிறது. பல்சர் என்125 பைக்கில் பொருத்தப்படுகின்ற 124.58சிசி என்ஜின் அதிகப்பட்சமாக 8500 ஆர்பிஎம்-இல் 12 பிஎஸ் மற்றும் 6000 ஆர்பிஎம்-இல் 11 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

new bajaj pulsar n125 launched

மேலும், இந்த பல்சர் பைக்கில் ஸ்டார்டர் ஜெனரேட்டர் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. தரையில் இருந்து பல்சர் என்125 பைக்கின் டிரைவர் சீட் ஆனது 795மிமீ உயரத்தில் உள்ளது. தரையில் இருந்து பைக்கின் அடிப்பகுதி ஆனது 198மிமீ உயரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. தொழிற்நுட்ப அம்சங்களை பொறுத்தவரையில், ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டியை பல்சர் என்125 கொண்டுள்ளது.

இதன் மூலமாக மொபைல் போனுக்கு வரும் குறுஞ்செய்திகள் மற்றும் அழைப்புகளை பைக்கின் திரை வாயிலாக கட்டுப்படுத்துவதுடன், மைலேஜ் குறித்த தெளிவாக விபரங்களையும் பெறலாம். பைக்கிற்கு முன்பக்கத்தில் சிறந்த பிரகாசத்திற்காக எல்இடி ஹெட்லேம்ப் பொருத்தப்பட்டுள்ளது. புதிய பல்சர் என்125 பைக்கின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.94,707 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அதன் பல்சர் பைக்குகளை அவ்வப்போது அப்டேட் செய்வது வாடிக்கையான ஒன்றுதான். தற்போது பல்சர் என்125 பைக் அப்டேட் செய்யப்பட்டு இருப்பது அதன் விற்பனையை இந்த பண்டிகை காலத்தில் மேம்படுத்தும். புதிய பல்சர் என்125 பைக்கிற்கு ஏதேனும் சலுகைகள் கிடைக்குமா என்பதை அறிய அருகில் உள்ள பஜாஜ் டீலர்ஷிப் ஷோரூமை தொடர்பு கொள்ளவும்.

More from DriveSpark

Article Published On: Monday, October 21, 2024, 20:56 [IST]
English summary
Bajaj auto launches new pulsar n125 bike in india check price features all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X