பெட்ரோல் பைக்குகளை எல்லாரும் மொத்தமா மறக்க போறாங்க! பஜாஜ் நிறுவனத்துக்கு எவ்வளவு தாராள மனசு!!
பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனத்திற்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்திய மார்க்கெட்டிற்கும் சமீபத்திய ஆச்சிரியமான பைக் என்றால், அது பஜாஜ் ஃப்ரீடம் 125 ஆகும். ஏனெனில், உலகின் முதல் சிஎன்ஜி பைக் ஆக ஃப்ரீடம் 125 விளங்குகிறது. இந்த பைக்கை சிஎன்ஜி அல்லது பெட்ரோலில் இயக்கலாம். இதன் காரணமாகவே இந்த பைக்கிற்கு வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், வருகிற 2025ஆம் ஆண்டை முன்னிட்டு இந்த பைக்கின் விலை அதிகரிக்கப்படும் என எதிர்பார்த்தால், மாறாக ஃப்ரீடம் 125 பைக்கின் விலையை பஜாஜ் ஆட்டோ குறைத்துள்ளது. அதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
இந்தியாவில் சிஎன்ஜி வாகனங்களுக்கு சிறப்பான மார்க்கெட் உருவாகி வருகிறது. இதற்கு முக்கிய காரணம், மாருதி சுஸுகி எனலாம். ஏனெனில், பல்வேறு விதமான சிஎன்ஜி கார்களை மாருதி சுஸுகி அறிமுகம் செய்துள்ளது. அதேபோல், ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்களும் சிஎன்ஜி கார்களை விற்பனை செய்து வருகின்றன.

சிஎன்ஜி கார்கள் மட்டுமின்றி, சிஎன்ஜி ஆட்டோ ரிக்ஷாக்கள் போன்ற வாகனங்களும் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. இருப்பினும், சிஎன்ஜி பைக் என்பது இந்தியா மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகிற்கும் புதியது ஆகும். அப்படியொரு அசத்தலான காரியத்தை தான் பஜாஜ் ஆட்டோ செய்துள்ளது. உலகின் முதல் சிஎன்ஜி பைக்காக பஜாஜ் ஃப்ரீடம் 125 கடந்த 2024 ஜூலை மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
எதிர்பார்த்ததை போன்று, குறுகிய காலத்திலேயே இந்த பைக்கிற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. நடந்து முடிந்த கடந்த நவம்பர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஃப்ரீடம் 125 பைக்கின் எண்ணிக்கை இன்னும் வெளிவரவில்லை. இதற்கு முந்தைய அக்டோபர் மாதத்தில் சுமார் 30 ஆயிரத்து 51 பஜாஜ் ஃப்ரீடம் 125 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டன.

இதன் மூலமாக, அந்த மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட பஜாஜ் 2-வீலர்களில் 4வது இடத்திற்கு ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக் முன்னேறியது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 19 ஆயிரத்து 639 ஃப்ரீடம் 125 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், அதற்கடுத்த அக்டோபர் மாதத்தில் விற்பனை எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இவ்வாறு மாதத்திற்கு மாதம் விற்பனையில் முன்னேற்றம் கண்டுவரும் ஃப்ரீடம் 125 பைக்கின் விலையை தற்போது பஜாஜ் குறைத்துள்ளது.
இதன்படி, இந்த சிஎன்ஜி பைக்கின் எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.5,000மும், மிட்-வேரியண்ட்டின் விலை ரூ.10,000மும் குறைத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இதனால், பஜாஜ் ஃப்ரீடம் 125 பைக்கின் ஆரம்ப விலை ரூ.89,997ஆக குறைந்துள்ளது. இந்த விலையில் டிரம் பிரேக் உடன் இந்த பைக் கிடைக்கும். மிட்-வேரியண்ட்டின் விலை ரூ.95 ஆயிரமாக குறைந்துள்ளது.

ஃப்ரீடம் 125 பைக்கின் மிட்-வேரியண்ட்டிலும் டிரம் பிரேக் தான் கிடைக்கும் என்றாலும், இந்த வேரியண்ட்டில் எல்இடி விளக்குகளை பெறலாம். மற்றப்படி, இந்த சிஎன்ஜி பைக்கின் டாப் வேரியண்ட்டின் விலையில் (ரூ.1.10 லட்சம்) எந்த மாற்றமும் இல்லை. இந்த டாப் வேரியண்ட்டில் எல்இடி விளக்குகளுடன் இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் கிடைக்கும்.
ஃப்ரீடம் 125 பைக்கின் விலை குறைப்பு பங்கு சந்தையில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பை 2% குறைத்துள்ளது. தற்சமயம் இந்த புனே நிறுவனத்தின் பங்கு விலை ரூ.8,983 ஆகும். கடந்த செப்டம்பர் மாதத்தில் பஜாஜின் பங்கு மதிப்பு ரூ.12,774ஆக இருந்தது. அதன்பின், தீபாவளி சமயத்தில் பல்சர் பைக்குகளில் கொண்டுவரப்பட்ட விலை குறைப்பினாலும், தற்போது ஃப்ரீடம் 125 பைக்கில் கொண்டுவரப்பட்டுள்ள விலை குறைப்பினாலும் பஜாஜின் பங்கு மதிப்பு குறைந்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட 5 மாதங்களில் பைக்கின் விலை கணிசமாக குறைக்கப்பட்டு இருப்பது சற்று ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. விலை குறைப்பை காரணம் காட்டி பைக்கில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் இந்த நடவடிக்கை, நிச்சயமாக ஃப்ரீடம் 125 பைக்கின் விற்பனையை அதிகரிக்கும்.


Click it and Unblock the Notifications









