சிஎன்ஜி பைக்கை அடுத்து சிபிஜி-இல் ஓடும் பைக்கும் வரபோது! பெட்ரோல விட ரொம்ப கம்மி விலையில் பைக்கை ஓட்டிக்கலாம்!
உலகிலேயே முதல் முறையாக சிஎன்ஜி (Compressed Natural Gas) பைக்கை அறிமுகப்படுத்திய பெருமையைக் கொண்டிருக்கின்றது நம்முடைய இந்திய நிறுவனமான பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto). இதுவே ஃப்ரீடம் 125 () எனும் சிஎன்ஜியில் இயங்கும் பைக்கை இந்த உலகிற்கு முதல் ஆளாக அறிமுகப்படுத்தியது. மிகவும் குறைவான விலையில் இதனை பஜாஜ் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. ரூ. 95 ஆயிரமே இதன் ஆரம்ப விலை ஆகும். இதேபோல் இதன் அதிகபட்ச விலை ரூ. 1.10 லட்சம் மட்டுமே ஆகும். இரண்டுமே எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும்.
இந்த நிலையிலேயே பஜாஜ் நிறுவனம் சிஎன்ஜி பைக்கைத் தொடர்ந்து தற்போது சிபிஜி (Compressed Bio-Gas)-யில் இயங்கும் டூ-வீலரையும் விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. புனேவில் நடைபெற்ற அமுல் கிளீன் ஃப்யூவல் பயோ சிஎன்ஜி கார் ரேலி (Amul Clean Fuel BioCNG Car Rally) நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சிஇஓ-வான ராஜீவ் பஜாஜ்-ஜே இந்த தகவலை கூறியிருக்கின்றார்.

இதுகுறித்து அவர் கூறியாதவது, "சிஎன்ஜி வாகனங்கள் சிபிஜி-க்கும் ஏற்றவையாகக் காட்சியளிக்கின்றன. இவ்வாறு மாற்றும் பணியிலேயே அமுல் ஈடுபட்டு வருகின்றது. இது நிலைத்தன்மைக் கொண்ட போக்குவரத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும். இந்த பணிகள் வெற்றியடையும் பட்சத்தில் விரைவில் சிபிஜியில் இயங்கும் வாகனங்கள் பயன்பாட்டிற்கு வந்துவிடும்" என்றார்.
அமுல் நிறுவனம் பயோ சிஎன்ஜி-யை உற்பத்தி செய்யும் பணயிலியே ஈடுபட்டு வருகின்றது. மாட்டு சாணத்தில் இருந்தே பயோ எரிவாயுவை உற்பத்தி செய்யும் பணியிலேயே அந்த நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. இதன் ஆலை குஜராத் மாநிலம் பனஸ்கந்தா பகுதியில் அமைந்திருக்கின்றது. விரைவில் அமுல் நிறுவனம் நாடு முழுக்க வாகனங்களுக்கான சிபிஜி மையங்களையும் அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இது நடக்கும் பட்சத்திலேயே பஜாஜ் அதன் சிஎன்ஜி வாகனங்களை சிபிஜியிலும் இயங்கும் வகையில் தயார் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இந்த பணிகள் நடக்க 2 அல்லது 3 ஆண்டுகள் வரை ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், சிஎன்ஜி-யை போலவே சிபிஜியும் மலிவான விலையிலேயே விற்பனைக்கு வரும் என கூறப்படுகின்றது.
குறிப்பாக, பெட்ரோலை விட மிக குறைவான விலையிலேயே அது விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால்தான் சிபிஜி வாகனங்கள் மீதான எதிர்பார்ப்பு தற்போது பலமடங்காக அதிகரித்துக் காணப்படுகின்றது. ஏற்கனவே, பஜாஜ் நிறுவனம் எலெக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி வாகன பிரிவில் சற்றே வலுவான ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றது.
இந்த மாதிரியான சூழலிலேயே இந்த பிராண்டு பிற மாற்று திறனால் இயங்கும் வாகனங்களை விற்பனைக்குக் கொண்டு வருவதிலும் தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றது. நிறுவனம் மின்சார இரண்டு சக்கர வாகன பிரிவில் சேத்தக் எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலையும், சிஎன்ஜி பிரிவில் ஃப்ரீடம் 125 பைக் மாடலையுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
விரைவில் மின்சார வாகன பிரிவில் மேலும் சில மாடல்களை அது இணைக்க இருப்பது குறிப்பிடத்தகுந்தது. அதாவது சந்தையில் நிலவி வரும் கடும் போட்டியைச் சமாளிக்கும் பொருட்டு பஜாஜ் விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டு உள்ளது.
இப்போதைய நிலவரப்படி இந்தியாவின் எலெக்ட்ரிக் டூ-வீலர் பிரிவை மிகப் பெரிய அளவில் ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. இதற்கு அடுத்தபடியான இடத்திலேயே டிவிஎஸ் (TVS) மற்றும் பஜாஜ் (Bajaj) போன்ற மற்ற பிராண்டுகள் இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சிஎன்ஜி இயங்கும் டூ-வீலருக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு மிக சிறந்த உதாரணமாக ஃப்ரீடம் 125 இருக்கின்றது. இந்த பைக்கை போலவே சிஎன்ஜியில் இயங்கும் ஸ்கூட்டர்களும் விற்பனைக்கு வர இருக்கின்றன. டிவிஎஸ்-ஸே உலகின் முதல் சிஎன்ஜியில் இயங்கும் ஸ்கூட்டரை விற்பனைக்குக் களமிறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.


Click it and Unblock the Notifications








