எத்தனாலில் இயங்கும் டூ-வீலரையும் அறிமுகம் செய்ய போறாங்களா! சிஎன்ஜியை அடுத்து புதிய அதிரடிக்கு தயாராகும் பஜாஜ்!
இந்தியா பசுமை இயக்கத்தை நோக்கி மிக வேகமாக நகர்ந்துக் கொண்டிருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே, இயக்கத்திற்கு பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை தேவைப்படாத மாற்று வாகனங்களின் பயன்பாடு நாட்டில் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது. இந்தியாவின் இந்த தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்டே பஜாஜ் (Bajaj) நிறுவனம் அதன் டூ-வீலர்களை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. அந்தவகையில், சமீபத்தில் உலகின் முதல் சிஎன்ஜி (CNG) பைக்கை பஜாஜ் நிறுவனம் நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. ஃப்ரீடம் 125 (Freedom 125) பைக்கையே அது விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது.
இதைத் தொடர்ந்து தற்போது பஜாஜ் நிறுவனம் எத்தனாலில் இயங்கும் டூ-வீலர்களையும் விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. நிறுவனம் அதன் முதல் எத்தனாலில் இயங்கும் டூ-வீலரை வரும் செப்டம்பர் மாதத்திலேயே அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதுகுறித்த தகவல்களே தற்போது வெளியாகி உள்ளன.

நிறுவனத்தின் மூத்த அதிகாரியான ராஜீவ் பஜாஜ்-ம் இந்த தகவலை உறுதிப்படுத்தியிருக்கின்றார் என்பது கவனிக்கத்தகுந்தது. நடப்பு நிதியாண்டு முடிவடைவதற்குள் நிறுவனம் அதன் முதல் எத்தனால் டூ-வீலரை விற்பனைக்குக் கொண்டு வந்துவிடும் எனவும் அவர் தெரிவித்து இருக்கின்றார். இதுகுறித்து அவர் பேட்டியளித்த நேர்காணல் வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன.
ஆனால், எந்த நாளில் அது விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என்கிற துள்ளியமான விபரம் வெளியாகவில்லை. மேலும், எந்த மாடலை இது எத்தனாலில் இயங்கும் டூ-வீலராக விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது என்பது பற்றிய அதிகாரப்பூர்வ விபரங்களும் வெளியாகவில்லை. நிறுவனம் அதன் முதல் சிஎன்ஜி பைக் மாடலான ஃப்ரீடம் 125-யைப் போல புதுமுக வாகனமாகவும் இதனை விற்பனைக்குக் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால், இதுபற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ வார்த்தையும் பஜாஜ் தரப்பில் வெளியாகவில்லை. இருப்பினும், நிறுவனம் தற்போது விற்பனையில் உள்ள ஏதேனும் தன்னுடைய புகழ்பெற்ற பைக் மாடலையே எத்தனாலில் இயங்கும் வாகனமாக விற்பனைக்குக் கொண்டு வரும் என நம்பப்படுகின்றது. இவ்வாறு செய்வதனால் நிறுவனத்தினால் மிகப் பெரிய அளவில் உற்பத்தி செலவைக் குறைத்துக் கொள்ள முடியும்.
மேலும், எத்தனால் டூ-வீலர் விலை குறைவாகவும் அதனால் விற்பனைக்குக் கொண்டு வர முடியும். வாகன உலகின் யூகிப்பின்படி பல்சர் வரிசையிலேயே நிறுவனத்தின் முதல் எத்தனால் பவர்டு டூ-வீலர் விற்பனைக்குக் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏனெனில், கடந்த 2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்-போவில் பஜாஜ் நிறுவனம் பல்சர் என்எஸ்160 மாடலை தழுவி உருவாக்கியிருந்த ஃப்ளக்ஸ் ஃப்யூவல் (Bajaj Pulsar NS160 Flex Fuel) டூ-வீலரை காட்சிப்படுத்தியிருந்தது.
இதன் அடிப்படையிலேயே நிறுவனத்தின் முதல் ஃப்ளக்ஸ் ஃப்யூவல் டூ-வீலராக பல்சர் விற்பனைக்குக் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த வாகனத்தையே வருகின்ற ஜனவரி மாதத்தில் நடைபெற இருக்கும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2024-லும் காட்சிப்படுத்த பஜாஜ் நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது.
இதற்கு முன்னதாக ஓர் ஒத்திகையைப் போல இந்த பைக் வருகின்ற செப்டம்பர் மாதத்தில் வெளியீடு செய்யப்பட இருக்கின்றது. இந்த வெளியீட்டின் வாயிலாக பஜாஜ் என்ன மாதிரியான ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் பைக்கை விற்பனைக்குக் கொண்டு வரும் என்பதை துள்ளியமாக அறிந்துக் கொள்ள முடியும். குறிப்பாக, அதில் இடம் பெற இருக்கும் சிறப்பம்சங்களைப் பற்றியும் அன்றைய நாளில் அறிந்துக் கொள்ள முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இப்போதே சிஎன்ஜி பைக் அதன் கால் தடத்தைப் பதித்து உள்ளது. விரைவில் டிவிஎஸ் அதன் சிஎன்ஜி ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த நிலையிலேயே பஜாஜ் நிறுவனம் தன்னுடைய அடுத்த புராஜெக்டான எத்தனால் பவர்டு பைக்கை விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான பணியில் களமிறங்கி இருக்கின்றது. பெட்ரோலைவிட மிக மிக குறைவான விலைக் கொண்டதே எத்தனால் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








