இந்தியாவுல ஒரு பய கூட இந்த பைக்கை வாங்கல! ஆனா வெளிநாட்டுல இந்த பைக்குக்கு செம டிமாண்ட்!
பஜாஜ் நிறுவனம் இந்தியாவில் தயாரித்து விற்பனை செய்த பைக் ஒன்று இந்திய மக்களால் பெரிதாக விரும்பப்படாவிட்டாலும் வெளிநாட்டு மக்களால் அதிகம் விரும்பப்படுவதால் இந்த பைக் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால் இந்தியாவில் இந்த பைக்கின் விற்பனை இல்லை. என்ன பைக் இது? எதற்கு இந்த பைக்குக்கு வெளிநாட்டில் அவ்வளவு வரவேற்பு இருக்கிறது? என்ற விபரங்களை காணலாம் வாருங்கள்.
சந்தையில் பஜாஜ் நிறுவனம் சிறந்த மைலேஜ் கொண்ட பைக் தயாரிக்கும் முதன்மையான நிறுவனமாக இருக்கிறது. இந்திய மார்க்கெட்டில் பஜாஜ் பைக்குகளுக்கு நல்ல டிமாண்ட் இருக்கிறது. பஜாஜ் நிறுவனத்தின் பைக்குகள் என்றால் இந்திய மக்கள் மத்தியில் நல்ல பெயர் இருக்கிறது. இதனால் நிறுவனத்திற்கு தொடர்ந்து சிறப்பான விற்பனை இருந்து வருகிறது. பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் மற்றும் பிளாட்டினா ஆகிய பைக்குகள் சிறப்பான விற்பனையில் உள்ளன.

இதில் பிளாட்டினா பைக் தான் நல்ல மைலேஜ் கொடுக்கும் பைக். ஆனால் இதில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்றால் இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகும் பஜாஜ் பல்சர் மற்றும் பிளாட்டினா ஆகிய பைக்குகள் எல்லாம் வெளிநாட்டு மார்க்கெட்டில் தோல்வி அடைந்த பைக்குகளாக உள்ளன. இந்த பைக்குகள் எல்லாம் இந்தியாவில் மட்டுமே அதிகமான விற்பனையில் உள்ளன. வெளிநாடுகளில் இந்த பைக்குகள் பெரிய அளவில் விற்பனையில் இல்லை.
இந்த பைக்குகள் எல்லாம் எப்படி இந்தியாவில் வரவேற்பு பெற்று வெளிநாடுகளில் தோல்வி அடைந்ததோ அதேபோல பஜாஜ் நிறுவனத்தின் மற்றொரு பைக் இந்தியாவில் தோல்வியை சந்தித்து வெளிநாடுகளில் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. ஆம் பஜாஜ் நிறுவனத்தின் பாக்ஸர் என்ற பைக் தான் அது. இந்த பைக் இந்தியாவில் தற்போது விற்பனையில் இல்லை. ஆனால் வெளிநாடுகளில் சிறப்பாக விற்பனையாகி வருகிறது.

பஜாஜ் நிறுவனம் செய்த ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 49.04 சதவீத ஏற்றுமதி இந்த பஜாஜ் பாக்ஸர் பைக் தான். கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மொத்தம் 52,196 பைக்குகள் பஜாஜ் நிறுவனத்தால் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை என்பது அந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த எண்ணிக்கையில் 49.04 சதவீதமாகும். கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த விற்பனையுடன் ஒப்பிடும்போது 31.35% விற்பனை சரிவு தான்.
சமீப காலமாக பஜாஜ் பல்சர் பைக்குக்கு வெளிநாடுகளில் நல்ல மவுசு கிடைத்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் மொத்தம் 26,431 பல்சர் பைக்குகள் ஏற்றுமதி ஆகியுள்ளன. இது கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாத விற்பனை ஏற்றுமதியுடன் ஒப்பிடும்போது 24.46சதவீதம் அதிகமாகும். அதே நேரம் பஜாஜ் சிடி மற்றும் பஜாஜ் டிஸ்கவர் ஆகிய பைக்குகளின் ஏற்றுமதியும் கணிசமான அளவு அதிகரித்துள்ளது. பஜாஜ் சிடி பைக் 16,836, டிஸ்கவர் பைக் 7392 எண்ணிக்கையிலும் ஏற்றுமதி ஆகியுள்ளன.

பஜாஜ் நிறுவனத்தின் டோமினார் மற்றும் பிளாட்டினா ஆகிய பைக்குகளும் ஏற்றுமதியாகி வருகின்றன. இது முறையே 2,344 டோமினார் பைக்குகளும் 1,861 பிளாட்டினா பைக்கிலும் ஏற்றுமதயாகி உள்ளன. ஒட்டுமொத்த ஏற்றுவதில் பஜாஜ் நிறுவனம் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5.21% வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்நிறுவன மொத்தமாக 1,08,062 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது கடந்த ஆண்டு நடந்த விற்பனையை விட 5,578 வாகனங்கள் குறைவாகும்.
பஜாஜ் நிறுவனம் இந்தியாவில் வாகனங்களை விற்பனை செய்வதை விட வெளிநாடுகளில் வாகனங்களை இந்தியாவில் தயாரித்து விற்பனை செய்வதில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் வெளிநாட்டில் தான் விற்பனையாகி வருகின்றன. இந்தியாவிற்கு இது மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியாக இருக்கிறது. பஜாஜ் நிறுவனம் இந்திய மண்ணில் தயாரித்த வாகனங்களை வெளிநாடுகளில் அதிகம் விற்பனை செய்து வருகிறது.
பாக்ஸர் பைக் இன்றளவும் வெளிநாடுகளில் சிறப்பான வரவேற்பை பெற்று விற்பனையாகி வருகின்றன. இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகி வரும் பல்சர் மற்றும் பிளாட்டினா பைக் வெளிநாட்டில் பெரிய அளவில் வரவேற்பு இல்லாமல் இருக்கிறது. இது நிச்சயம் ஒரு வியக்கத்தக்க முரணாக தான் நமக்கு தெரிகிறது. இருந்தாலும் நிதர்சனமான உண்மை இதுதான் மார்க்கட் என்பது ஒவ்வொரு நாட்டிற்கும் மாறிக்கொண்டே இருக்கும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பஜாஜ் நிறுவனம் வாகனங்களை தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருவது நிச்சயம் மிகப்பெரிய வளர்ச்சியை இந்திய பொருளாதாரத்திற்கு ஏற்படுத்தி தரும். இந்தியாவில் இதனால் அதிகமான நபர்கள் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். வெளிநாடு மூலம் இந்தியாவிற்கு ஏகப்பட்ட பணம் வருகிறது. பஜாஜ் நிறுவனத்தின் இந்த முயற்சியை நிச்சயம் பாராட்ட வேண்டும்.


Click it and Unblock the Notifications









