எல்லா பல்சரையும் தூக்கி சாப்பிட கூடிய புதிய பல்சரை களமிறக்கும் பஜாஜ்.. எப்போது தெரியுமா?

இந்தியாவில் 300 சிசி முதல் 500 சிசி வரை திறன் கொண்ட மோட்டார்சைக்கிள்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு மிக சிறந்த உதாரணமாக ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை கூறலாம். இதேபோல், கேடிஎம் ட்யூக் 390, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310, ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மற்றும் ஜாவா 42 உள்ளிட்ட மோட்டார்சைக்கிள்களுக்கும் நல்ல வரவேற்பு இந்தியர்கள் மத்தியில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இந்த மாதிரியான சூழல் இந்தியாவில் நிலவிக் கொண்டிருக்கின்ற இந்த வேளையில், முன்னணி இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பஜாஜ் (Bajaj) பெரிய எஞ்சின் கொண்ட புதிய பைக் மாடலை வெளியீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பல்சர் (Pulsar) வரிசையிலேயே அந்த பெரிய மோட்டார் கொண்ட மாடல் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

Bajaj pulsar ns 200

குறிப்பு: படம் உதாரணத்திற்கு வழங்கப்பட்டது. ஆனால், இதுபற்றிய துள்ளியமான அறிவிப்பை இன்னும் பஜாஜ் வெளியிடவில்லை. அதேவேளையில், பஜாஜ் நிறுவனத்தின் சிஇஓ சிறிய குறிப்பை மட்டும் சூசகமாக வெளியிட்டு இருக்கின்றார். விரைவில் பஜாஜ் நிறுவனத்திடம் இருந்து இதுவரை இல்லாத பெரிய பல்சரை எதிர்பார்க்கலாம் என்றே அவர் தெரிவித்து இருக்கின்றார்.

இதன்வாயிலாகவே நிறுவனம் பெரிய எஞ்சின் கொண்ட பல்சர் பைக் வர இருப்பது உறுதியாகி இருக்கின்றது. இது பல்சர் பைக்கிற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் விதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியர்கள் பலரின் மனம் கவர்ந்த பைக் மாடலாக பல்சர் இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

ஆனால், இந்த பைக் மாடலில் அது சிறிய எஞ்சின் தேர்வை மட்டுமே இப்போதைக்கு விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், பல்சர் என்150, பல்சர் 250, பல்சர் என்எஸ்200, பல்சர் ஆர்எஸ்200, பல்சர் என்எஸ்160, பல்சர் 150, பல்சர் என்எஸ்125, பல்சர் 125 மற்றும் பல்சர் 220எஃப் ஆகிய மாடல்களையே அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இவை அனைத்தைக் காட்டிலும் பெரிய எஞ்சின் கொண்ட புதிய பல்சரே வரும் நாட்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. அது பஜாஜ் டோமினார் 400 பைக்கிற்கு இணையானதாக இருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது. இம்மாத இறுதியிலேயே அது அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. அன்று அந்த புதிய பல்சர் எது? அதில் என்ன மாதிரியான திறன் கொண்ட மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது என்பது துள்ளியமாக தெரிய வந்துவிடும்.

ஆகையால், பல்சர் பிரியர்கள் வரும் மார்ச் 31 வரை காத்திருப்பது தற்போது அவசியமாக மாறி இருக்கின்றது. இந்த பல்சர் பைக் மட்டுமின்றி பஜாஜ் நிறுவனம் மற்றுமொரு பல்சர் பைக்கையும் விற்பனைக்கு களமிறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அது அப்டேட் செய்யப்பட்ட 2024 என்25 பைக்காக இருக்கும் என தெரிகின்றது.

இதில் முன் பக்கத்தில் யுஎஸ்டி ஃபோர்க்கையும், புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரையும் பஜாஜ் வழங்கி இருப்பது குறிப்பிடத்தகுந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்னர்கூட இந்த வாகனம் சாலையில் சோதனையோட்டம் செய்யப்படும்போது தரிசனம் வழங்கியது என்பது கவனிக்கத்தகுந்தது. அப்போதில் இருந்தே இந்த வாகனம் பல்சர் பைக் பிரியர்களின் எதிர்பார்ப்பை கவர தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பஜாஜ் நிறுவனத்தின் மூத்த அதிகாரி வெளியிட்டு இருக்கும் சூசகமான இந்த பதில் பல்சர் பைக் காதலர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருக்கின்றது. மேலும், இரண்டு சக்கர வாகன காதலர்கள் மத்தியிலும் இந்த தகவல் வேகமாக பரவிக் கொண்டிருக்கின்றது. ஆகையால், புதிய பெரிய எஞ்சின் கொண்ட பல்சர் பைக் விற்பனைக்கு வரும்பட்சத்தில் நல்ல விற்பனை வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Friday, March 8, 2024, 14:18 [IST]
English summary
Bajaj ceo hinted biggest pulsar ever launch in the pipeline
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+