ஓலா எல்லாம் ஓரமா போ! கம்மி ரேட்ல பஜாஜ் சேத்தக் எலெக்டரிக் ஸ்கூட்டர் வரப்போகுது!

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனையை அதிகரிப்பதற்காக பஜாஜ் நிறுவனம் தற்போது குறைந்த விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. இதன்படி இந்நிறுவனம் விரைவில் ரூபாய் ஒரு லட்சத்திற்கும் குறைவான விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மத்திய அரசு விரைவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்காக வழங்கும் மானியத்தை குறைக்க திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரித்து வரும் ஓலா, ஏத்தர் போன்ற நிறுவனங்கள் தற்போது குறைந்த விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. மத்திய அரசு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மானியங்களை நிறுத்திவிட்டால் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகமாகும்.

bajaj chetak affordable scooter

இதனால் தற்போதைய எலெக்ட்ரிக் வாகனங்களில் குறைந்த விலையில் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்திவிட்டால் விற்பனை பெரிய அளவு பாதிக்காமல் தொடர்ந்து எலெக்ட்ரிக் வாங்க தயாரிப்பு நிறுவனங்கள் சிறப்பான விற்பனையில் இருக்க முடியும் என்பதால் இந்த யுக்தியை கையாண்டு வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது பஜாஜ் நிறுவனமும் இணைந்துள்ளது. இந்நிறுவனம் விரைவில் ரூபாய் ஒரு லட்சத்திற்கும் குறைவான விலையில் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டர் விற்பனையிலிருந்து வந்தாலும் இதன் விலை சற்று அதிகமாக இருக்கிறது. அதற்கு ஏற்றார் போல் சிறந்த பெர்ஃபார்மென்ஸை வெளிப்படுத்தும் ஸ்கூட்டராக இது தற்போது மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டருக்கு மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு இருக்கிறது. தொடர்ந்து சிறப்பான விற்பனையை சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பெற்று வரும் நிலையில், அதன் குறைந்த விலை வெர்ஷன் விற்பனை அறிமுகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

bajaj chetak affordable scooter

இதனால் தற்போது இருக்கும் பேட்டரி மற்றும் மோட்டார் ஆகிய ஆப்ஷன்களை குறைத்து குறைவான பேட்டரி பவரில் குறைவான மோட்டார் திறனுடன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை குறைந்த விலையில் பஜாஜ் நிறுவனம் சேர்த்தக் பேரிலேயே அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் ஸ்கூட்டரின் விலையை குறைப்பதற்காக அதில் உள்ள எல்சிடி கண்ட்ரோல்களை மோனோகிரோம் ஸ்கிரீன்களாக மாற்றி வெளியிடவும் அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

மத்திய அரசு வழங்கி வரும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மானியம் என்பது வரும் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதன் பின்பு தேர்தல் வருவதால் ஜூலை 31ஆம் தேதி வரை இதே திட்டத்தை நீடிக்க ரூபாய் 500 கோடியை அரசு ஒதுக்கி உள்ளது. அதன் பின்பு புதிய அரசு வந்து எடுக்கும் முடிவுக்கு ஏற்ப எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மானியம் என்பது வழங்கப்படுமா அல்லது நிறுத்தப்படுமா என்ற தகவல் நமக்குத் தெரியவரும்.

bajaj chetak affordable scooter

இந்த மானியம் நிறுத்தப்படுவதற்கு முன்பே குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை மார்க்கெட்டில் பஜாஜ் நிறுவனம் அறிமுகப்படுத்திவிட்டால், அதற்குள் அந்த ஸ்கூட்டருக்கு நல்ல பெயர் என்பது கிடைத்துவிடும் என்பதால் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்திலேயே அறிமுகப்படுத்த பஜாஜ் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.

தற்போது மார்க்கெட்டில் டிவிஎஸ் ஐ கியூப், ஏத்தர் 450s, மற்றும் ஓலா எஸ் ஒன் எக்ஸ் ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் குறைந்த விலையில் ஸ்கூட்டர்களாக விற்பனையாகி வருகின்றன. அந்த ஸ்கூட்டருக்கு போட்டியாக பஜாஜ் நிறுவனமும் தனது சேர்த்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை குறைந்த விலையில் அறிமுகப்படுத்த அதிகமான வாய்ப்புகள் உள்ளன.

தற்போது பஜாஜ் நிறுவனத்திற்கு நாடு முழுவதும் 200 டீலர் ஷிப்புகள் இருக்கின்றன. இந்த டீலர்ஷிப்கள் மூலமே அந்நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. விரைவில் அதை 500 டீலர்ஷிப்களாக மாற்றவும் அந்நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. தற்போது பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தான் இந்தியாவிலேயே அதிகமாக விற்பனையாகும். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பஜாஜ் நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் காலடி தடத்தை வைத்தது முதல் மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றது. குறிப்பாக சேத்தக் என்ற பழைய மொபாட்டின் பெயரை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வைத்து மக்களின் கவனத்தை ஈர்த்தது. தற்போது இதில் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமானால் நிச்சயம் ஓலா, ஏத்தர் போன்ற நிறுவனங்களுக்கு கடும் போட்டியை தரும் வகையில் இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Monday, March 25, 2024, 7:00 [IST]
English summary
Bajaj chetak affordable scooter launch soon
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X