பஜாஜ் சேத்தக்கின் எந்த தேர்வை வாங்கலாம்!.. 3இல் எது பெஸ்ட்? விலை அதிகமானதை விட குறைவானதையே வாங்கலாமா!

யாருமே எதிர்பார்த்திராத சர்ப்ரைஸாக பஜாஜ் (Bajaj) நிறுவனம் அதன் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Chetak Electric Scooter) மாடலில் மிகவும் விலை குறைவான புதிய தேர்வை நேற்று (ஜூன் 7) விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. சேத்தக் 2901 எனும் தேர்வையே அது விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. நிறுவனத்தின் இந்த செயலால் அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கி இருக்கின்றார். எந்த ஒரு முன் அறிவிப்போ அல்லது ஆர்பாட்டமும் இன்றியே இந்த விலை குறைவான தேர்வை பஜாஜ் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

சந்தையின் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கிலேயே அது விலை குறைவான வேரியண்டை சேத்தக்கில் அறிமுகம் செய்திருக்கின்றது. அத்துடன், பட்ஜெட் விலை எலெக்ட்ரிக் டூ-வீலர் விரும்பிகளையும் கவர வேண்டும் என்பதும் இதன் அறிமுகத்திற்கு பின்னால் இருக்கும் மற்றுமொரு காரணமாக பார்க்கப்படுகின்றது. புதிய ஆப்ஷனின் அறிமுகத்தால் தற்போது பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் மூன்று விதமான விருப்பங்களில் விற்பனைக்குக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது.

Bajaj chetak electric scooter

அதாவது, புதிய தேர்வான சேத்தக் 2901, சேத்தக் அர்பேன், சேத்தக் பிரீமியம் ஆகிய மூன்று தேர்வுகளிலேயே அது தற்போது விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த மூன்று தேர்வுகளுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதாவது, எந்தெந்த வேரியண்டில் என்னென்ன மாதிரியான சிறப்பு வசதிகளை பஜாஜ் வழங்கி இருக்கின்றது என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

சேத்தக் 2901 வேரியண்ட் பற்றிய விபரங்கள்: இதையே நேற்றைய தினம் பஜாஜ் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலிலேயே மிக மிக விலை குறைவான தேர்வு இதுவே ஆகும். இதற்கு அறிமுகமாக ரூ. 95,998 விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் மட்டுமே ஆகும்.

இந்த மாடல் 2.8 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 123 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 63 கிமீ ஆகும். எல்இடி மின் விளக்குகள், ஈகோ மோட் மற்றும் டிஜிட்டல் திரை உள்ளிட்டவை இதில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

அதுவே கூடுதலாக ரூ. 3 செலுத்தினால் டெக் பேக் (Tec Pac) வசதி வழங்கப்படும். இதன் வாயிலாக ஸ்போர்ட்ஸ் மோட், ஹில் ஹோல்ட், ரிவர்ஸ் மோட், கால் மற்றும் மியூசிக்கைக் கண்ட்ரோல் செய்தல் மற்றும் ஸ்மார்ட்போன் இணைத்தல் ஆகியவற்றைச் செய்ய முடியும்.

மொத்தமாக ஐந்து விதமான நிற தேர்வுகளில் சேத்தக் 2901 விற்பனைக்குக் கிடைக்கும். இபோனி பிளாக் மெட் (Ebony Black Met), ரேசிங் ரெட் (Racing Red), சைபர் ஒயிட் (Cyber White), அசுரே ப்ளூ (Azure Blue) மற்றும் லைம் யெல்லோ (Lime Yellow) ஆகியவையே அவை ஆகும்.

சேத்தக் அர்பேன்: ஆரம்ப நிலை தேர்வான 2901 மற்றும் பிரீமியம் இந்த இரண்டு மாடல்களுக்கும் இடையில் இது நிலை நிறுத்தப்பட்டு உள்ளது. இதற்கு அதிகபட்சமாக விலை ரூ. 1,23,319 நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

இந்த தேர்வை ஒட்டுமொத்தமாக நான்கு ஆப்ஷன் வழங்கப்படுகின்றன. அவை மேட் கிரே, சைபர் ஒயிட், ப்ரூக்ளின் பிளாக் மற்றும் இண்டிகோ மெட்டாலிக் ஆகும். இந்த மாடலில் 2.9 kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதில் ஓர் முழு சார்ஜில் 113 கிமீ தூரம் வரை மட்டுமே பயணிக்க முடியும்.

இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 63 கிமீட்டராக உள்ளது. இந்த ஸ்கூட்டருடன் சேர்த்து பஜாஜ் வழங்கும் டெக் பேக்கைத் தேர்ந்தெடுத்தால், ஸ்போர்ட் மோட், ரிவர்ஸ் மோட், ஹில் ஹோல்ட் மற்றும் ஃபோப் கீ ஆகியவற்றைக் கூடுதலாக பெற்றுக் கொள்ள முடியும். இதற்கு ரூ. 8 ஆயிரம் கூடுதலாக செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

சேத்தக் பிரீமியம்: இதுவே சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உயர்மட்ட வேரியண்ட் ஆகும். இதன் விலை ரூ. 1 லட்சத்து 47 ஆயிரத்து 243 ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே. இதில் ஓர் முழு சார்ஜில் 126 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 73 கிமீ ஆகும்.

இந்த வேரியண்டிற்கும் டெக் பேக் வழங்கப்படுகின்றது. இதற்கான டெக் பேக்கின் விலை ரூ. 9 ஆயிரம் ஆகும். இதில் ஹில் ஹோல்ட், ரிவர்ஸ் மோட், ஸ்மார்ட்போன் இணைப்பு, பிளிங்கர்கள், அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் எச்சரிக்கை மற்றும் நேவிகேஷன் போன்ற சிறப்புகளைப் பெற்றுக் கொள்ள முடியும். இந்த தேர்வை மூன்று வண்ணங்களில் வாங்கிக் கொள்ள முடியும். ப்ரூக்ளின் பிளாக், ஹேஸ்லெனட் மற்றும் இண்டிகோ ப்ளூ ஆகியவை அவை ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான தேவை அதிகரித்துக் காணப்படுகின்றது. இதனைக் கருத்தில் கொண்டே ஓலா, டிவிஎஸ் ஐக்யூப் மற்றும் ஏத்தர் எனெர்ஜி ஆகியவற்றிற்கு போட்டியாக பஜாஜ்-ம் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலில் விலை குறைவான தேர்வை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, June 8, 2024, 16:48 [IST]
English summary
Bajaj chetak electric scooter all 3 variants explainded
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+