லக்கி பாஸ்கர் ஓட்டுன ஸ்கூட்டர் 20ம் தேதி அறிமுகமாகுது! இதை வாங்குனா உங்களுக்கு கோடி கணக்குல பணம் கிடைக்குமா?
இந்தியாவில் எலெக்ட்ரிக் டூவீலர் ஸ்கூட்டர் மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில், பல வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்த தொடங்கியுள்ளன. பஜாஜ் நிறுவனம் ஏற்கனவே சேர்த்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனை செய்து வரும் நிலையில், அதை அப்டேட் செய்து புதிய வடிவமைப்பில் அதை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை தான் இங்கே காண போகிறோம்.
இந்திய மார்க்கெட்டில் ஓலா ஏத்தர் போன்ற நிறுவனங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்திய பின்பு மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மீதான ஈர்ப்பு அதிகமாகியுள்ளது. இதனால் பெட்ரோல் ஸ்கூட்டருக்கு இணையாக தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூடர்களும் மிக அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன. இந்நிலையில் பஜாஜ் நிறுவனமும் ஏற்கனவே சேத்தக் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனை செய்து வருகிறது.

பஜாஜ் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் புதிதாக அப்டேட் செய்து அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. இதன்படி வரும் டிசம்பர் மாதம் 20ம் தேதி முற்றிலுமாக புதிதாக வடிவமைக்கப்பட்ட பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பல்வேறு வேரியண்ட்களில் விற்பனைக்கு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பஜாஜ் நிறுவனம் இந்த புதிய சேத்தக் எலெக்ட்ரிக் பிளாட்பார்ம் ஒன்றை உருவாக்கி இருந்தது. இது குறித்து அறிவிப்பு ஏற்கனவே ஒரு சில மாதங்களுக்கு முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், புதிய சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எந்த ஃபிளாட்பார்மில் தான் உருவாக்கி விற்பனைக்கு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

இதன்படி புதிதாக உருவாக்கப்படும் சேர்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தற்போது உள்ள சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விட எடை குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் பெர்ஃபார்மென்ஸ் மற்றும் ரேஞ்ச் ஆகியவையும் அதில் மேம்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
தற்போது விற்பனையாகி வரும் பஜாஜ் செய்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒருமுறை சார்ஜ் போட்டால் அதிகபட்சம் 137 கிலோமீட்டர் வரை தான் ரேஞ்ச் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. புதிதாக அப்டேட் செய்யப்பட உள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பல்வேறு மேம்பட்ட தொழில்நுட்பங்கள் உட்படுத்தப்பட உள்ளன. முக்கியமாக பேட்டரி தொழிற்நுட்பங்களில் பல்வேறு மாற்றங்களும் பெரிய பேட்டரி பேக்கும் உட்புகுத்தப்பட வாய்ப்பு இருக்கிறது. இதனால் இதன் ரேஞ்ச் அதிகமாவதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.
பஜாஜ் நிறுவனத்தின் சேர்த்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பெட்ரோல் ஸ்கூட்டரில் பெட்ரோல் டேங்க் இருக்கும் இடத்தில் தான் தற்போது பேட்டரியை பொருத்தியுள்ளது. இதனால் அதிக பொருட்களை எடுத்துச் செல்வது சிரமமாக இருக்கிறது. இதையடுத்து புதிதாக அப்டேட் செய்துள்ள சேஸிசில் ஃப்ளோர் போர்டு பகுதியில் பேட்டரியை பொருத்த அந்நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதனால் அதிகமான பொருட்களை எடுத்துச் செல்ல பூட் வசதி கிடைக்கும் வகையில் புதிதாக வரவுள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
புதிதாக வரவுள்ள சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வடிவமைப்பை பொறுத்தவரை தற்போது உள்ள ஸ்கூட்டரின் அடிப்படை வடிவமைப்பு அப்படியே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு சில மாற்றங்கள் மட்டுமே இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மேலும் புதிய கலர் ஆப்ஷன்களிடம் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது போக தற்போது விற்பனையாகி வரும் ஸ்கூட்டரில் இல்லாத புதிய அம்சங்களும் புதிய ஸ்கூட்டரில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
தற்போது உள்ள சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் போலவே இந்த ஸ்கூட்டரிலும் பல்வேறு வேரியண்ட்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதன் மூலம் பல்வேறு விதமான வாடிக்கையாளர்களை அந்நிறுவனம் கவர முடியும். குறைந்த விலை ஸ்கூட்டர்கள் முதல் அதிக விலை வரை இந்த ஸ்கூட்டர்கள் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் விற்பனையை அதிகப்படுத்தவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
பஜாஜ் நிறுவனம் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்திய போது பெரிய அளவில் வரவேற்பு இல்லை என்றாலும், படிப்படியாக அதன் விற்பனை அதிகரித்து இந்திய மார்க்கெட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்துள்ளது. எதிர்நிலையில் இதன் விற்பனை அதிகரிப்பதற்காக தான் பல்வேறு அப்டேட்களை நிறுவனம் செய்து வருகிறது. நிச்சயம் இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விற்பனை அதிகமாகும் என அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் டூவீலர் மார்க்கெட் மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. எதிர்காலத்தில் ஸ்கூட்டர்கள் என்றால் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தான் விற்பனையாகும் என்ற பேச்சு மக்கள் மத்தியில் இருக்கும் நிலையில், பஜாஜ் நிறுவனம் அப்டேட் செய்வதன் மூலம் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க முடிவு செய்துள்ளது. இந்த முடிவு நிச்சயம் வரவேற்க வேண்டியது தான்.


Click it and Unblock the Notifications








