ஓலாவுக்கு சவால்விடும் பஜாஜ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்... விற்பனை குவியுது- கஸ்டமர்ஸ் கூட்டம் ஷோரூம்களில் அலை மோதுது

பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto), இந்தியாவின் முன்னணி 2-வீலர் நிறுவனங்களுள் ஒன்று. எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்யும் மிகவும் சில முன்னணி நிறுவனங்களுள் ஒன்று. 2020ஆம் ஆண்டில் பஜாஜ் ஆட்டோ அதன் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. இந்த நிலையில், சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. இதன் மூலமாக, சந்தையில் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு உண்டான தேவையை அறிய முடிகிறது. அப்படி என்ன சாதனை இது என்பதையும், இந்த பஜாஜ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம். வாங்க.

பஜாஜ் சேத்தக் (Bajaj Chetak), மார்க்கெட்டில் பிரபலமான மற்றும் பரீட்சையமான ஸ்கூட்டரின் பெயரின் பெயர். ஏனெனில், 1970, 80 சமயங்களில் மிகுந்த வரவேற்பை பெற்றுவந்த ஸ்கூட்டர். இதன் காரணமாகவே, தனது முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு சேத்தக்கின் பெயரை பஜாஜ் ஆட்டோ சூட்டியது. அதேபோல், பழமையான சேத்தக் ஸ்கூட்டர் கொண்டிருந்த கிட்டத்தட்ட அதே தோற்றத்தில் புதிய சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டது.

bajaj chetak sales crossed milestone

இவ்வாறு சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஒவ்வொரு விஷயத்தையும் பஜாஜ் நிறுவனம் கவனமாகவும், ஸ்பெஷலாக செயலாற்றினாலும், 2020 ஜனவரிக்கு பின் வந்த கொரோனா வைரஸ் பரவலை பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தால் முன்கூட்டியே அறிய முடியவில்லை. இருப்பினும், கொரோனா வைரஸ் பரவலுக்கு பின் பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை சூடுப்பிடிக்க ஆரம்பித்தது.

இந்த நிலையில், சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனையில் வெற்றிக்கரமாக 2 இலட்சம் என்கிற பிரம்மாண்ட மைல்கல்லை பஜாஜ் சேத்தக் நிறுவனம் கடந்துள்ளது. அதாவது, 4.5 வருடங்களில் 2 லட்சம் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆரம்பத்தில், முதல் 1 லட்ச சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்ய பஜாஜ் நிறுவனத்துக்கு 4 வருடங்கள் தேவைப்பட்டது. அதாவது, 1 லட்சம் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை என்கிற மைல்கலை கடந்த 2023ஆம் ஆண்டு இறுதியில்தான் பஜாஜ் நிறுவனம் கடந்திருந்தது.

bajaj chetak sales crossed milestone

அதற்குள்ளாக, தற்போது 2 லட்சம் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் என்கிற மைல்கல் தாண்டப்பட்டுள்ளது. அதாவது, கடந்த 6- 7 மாதங்களில் 1 லட்சம் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. சராசரியாக, கடந்த 6 மாதங்களில் ஒவ்வொரு மாதத்திலும் 16 ஆயிரத்தில் இருந்து 17 ஆயிரம் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 2024 ஜூன் மாதத்திலும் 16,691 சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பஜாஜ் விற்பனை செய்துள்ளது.

2023 ஏப்ரல் மாதத்தில் இருந்து கடந்த 2024 மார்ச் மாதம் வரையில் சுமார் 1 லட்சத்து 15,627 சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதே 12 மாத காலக்கட்டத்தில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் விற்பனை செய்த மொத்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை எண்ணிக்கையை காட்டிலும் இது 7,733 அதிகமாகும். அதேபோல், டிவிஎஸ் மோட்டார் நிறுவனமும் 2023 ஏப்ரல் - 2024 மார்ச் வரையில் 74,269 ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்க்ட்டர்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

bajaj chetak sales crossed milestone

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அதிகம் விற்பனை செய்வதில் இந்திய அளவில் 2வது இடத்தில் பஜாஜ் ஆட்டோ உள்ளது. முதலிடத்தில் ஓலா எலக்ட்ரிக் உள்ளது. 2024 ஏப்ரல், மே, ஜூன் என கடந்த 3 மாதங்களில் மொத்தம் 40,854 சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கடந்த 2023ஆம் ஆண்டில் இதே 3 மாதங்களில் விற்பனை செய்யப்பட்ட சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை காட்டிலும் சுமார் 96% அதிகமாகும். அதாவது, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சேத்தக் இ-ஸ்கூட்டர்களின் விற்பனை ஆனது டபுள் மடங்கு அதிகரித்துள்ளது.

2901, அர்பன் மற்றும் ப்ரீமியம் என 3 விதமான வேரியண்ட்களில் தற்சமயம் பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை செய்யப்படுகிறது. இதில், 2901 வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.95,998 ஆகவும், அர்பன் வேரியண்ட்டின் விலை ரூ.1.23 லட்சமாகவும், ப்ரீமியம் வேரியண்ட்டின் விலை ரூ.1.47 லட்சமாகவும் தற்சமயம் உள்ளன. இதில் விலை குறைவான 2901 வேரியண்ட் சமீபத்தில்தான் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உண்மையை சொல்ல வேண்டுமென்றால், ஆரம்பத்தில் பஜாஜ் சேத்தக்கின் விற்பனை மிகவும் மோசமாக இருந்தது. இது அவ்வளவுதான், தோல்வி அடைந்த ஸ்கூட்டர் என்றெல்லாம் கூட சொன்னார்கள். அந்த சமயத்தில் குறைக்கடத்திகளுக்கு உலகளவில் பற்றாக்குறை இருந்தது இப்போதுவரையில் ஞாபகத்தில் உள்ளது. அந்த பற்றாக்குறை சரியான பின்பு பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனையில் ஏற்றம் மட்டுமே உள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, July 27, 2024, 13:19 [IST]
English summary
Bajaj chetak electric scooter sales crossed 2 lakhs milestone
மேலும்... #bajaj auto #electric scooter #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X