அமைச்சர் வந்து பாராட்டும் அளவுக்கு இந்த ஸ்கூட்டரை மக்கள் போட்டி போட்டு வாங்குறாங்க - அதுவும் இந்த நகரத்தில்...

பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto), இந்தியாவின் முன்னணி 2-வீலர் நிறுவனம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 2-வீலர்கள் மட்டுமின்றி, 3-வீலர்கள் விற்பனையிலும் பஜாஜ் நிறுவனம் சிறந்து விளங்குகிறது. அதேபோல், இந்தியாவில் இருந்து வெளிநாடுகள் பலவற்றிற்கு வாகனங்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனமாகவும் பஜாஜ் ஆட்டோ விளங்குகிறது. சமீப காலத்தில் பஜாஜ் நிறுவனம் அறிமுகப்படுத்திய தரமான தயாரிப்புகளுள் ஒன்று சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். 2020ஆம் ஆண்டின் துவக்கத்தில் பஜாஜ் ஆட்டோவின் முதல் எலக்ட்ரிக் 2-வீலராக சேத்தக் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனையில் புதிய மைல்கல்லை பஜாஜ் நிறுவனம் கடந்துள்ளது.

பஜாஜ் சேத்தக் (Bajaj Chetak), இந்தியாவில் பலருக்கு தெரிந்த, பழக்கமான பெயர். ஏனெனில், 1980ஆம் காலக்கட்டத்தில் இந்தியாவில் மிக பிரபலமாக இருந்த ஸ்கூட்டர் பஜாஜ் சேத்தக் ஆகும். இதன் காரணமாகவே, தனது முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சேத்தக் பெயரில் பஜாஜ் நிறுவனம் களமிறக்கியது. எதிர்பார்த்ததை போன்று, சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை ஆரம்பத்திலேயே சிறப்பாக பதிவாக ஆரம்பித்தது.

19000 bajaj chetak in nagpur

தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் மக்கள் பலரால் வாங்கப்படும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுள் ஒன்று பஜாஜ் சேத்தக் ஆகும். இந்த நிலையில், நாக்பூரில் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனையில் புதிய மைல்கல்லை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கடந்துள்ளது. நாக்பூரில் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை எண்ணிக்கை வெற்றிக்கரமாக 19,000ஐ கடந்துள்ளது. அதாவது, நாக்பூர் நகரத்தில் மட்டும் 19,000 சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உரிமையாளர்கள் உள்ளனர்.

இந்த வகையில் பார்த்தால், 2020ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து நாக்பூரில் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 450 பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மஹாராஷ்டிரா மாநிலத்தின் புனேவில் தான் பஜாஜ் ஆட்டோவின் தொழிற்சாலை உள்ளது. மேலும், புனே சாகான் தொழிற்சாலையில்தான் பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இதே மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரில் 19,000 சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உரிமையாளர்கள் இருப்பது பஜாஜ் ஆட்டோ நிறுவனத்திற்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயமாக உள்ளது. இதன் காரணமாக, சேத்தக்கின் விற்பனையில் கண்டுள்ள இந்த சாதனையை சிறிய நிகழ்ச்சி ஒன்றின் மூலமாக பஜாஜ் நிறுவனம் கொண்டாடியுள்ளது. நாக்பூரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மத்திய போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்துக் கொண்டார்.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உடன் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் நெருங்கிய பிணைப்பில் உள்ளது. ஏனெனில், கடந்த ஜூன் மாதத்தில் பஜாஜ் நிறுவனத்தால் நடத்தப்பட்ட புதிய சேத்தக் 2901 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுக நிகழ்ச்சியிலும் அமைச்சர் நிதின் கட்கரி கலந்துக் கொண்டார். சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலேயே விலை குறைவானதாக உருவாக்கப்பட்டுள்ள சேத்தக் 2901 இ-ஸ்கூட்டரின் ரேஞ்ச் 126கிமீ என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, சேத்தர் 2901 ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்புவதன் மூலமாக அதிகப்பட்சமாக 126கிமீ தொலைவிற்கு இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயணிக்கலாம். மேலும், வண்ண நிறங்களிலான டிஜிட்டல் கன்சோல், அலாய் சக்கரங்கள் மற்றும் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி போன்ற கவர்ச்சிக்கரமான வசதிகளும் புதிய சேத்தக் 2901 ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி வாடிக்கையாளர்கள் விரும்பினால், டெக்பேக் தொகுப்பையும் கூடுதல் தொகையை செலுத்தி சேத்தக் 2901 ஸ்கூட்டருடன் வாங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டெக்பேக்கின் மூலமாக ஹில் ஹோல்ட், மொபைல் போன் அழைப்பு & மியுசிக் கண்ட்ரோல், ஃபோலோ மீ ஹோம் விளக்குகள் மற்றும் ப்ளூடூத் செயலி கனெக்ட்டிவிட்டி வசதியை பெறலாம். இவை மட்டுமின்றி, ரிவர்ஸ், ஸ்போர்ட் மற்றும் எக்கனாமி மோட்களும் கிடைக்கும். சிவப்பு, வெள்ளை, கருப்பு, இளம் மஞ்சள் மற்றும் அசுரே நீலம் உள்ளிட்ட பெயிண்ட் ஆப்ஷன்களில் கிடைக்கும் சேத்தக் 2901 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆனது முக்கியமாக இளம் தலைமுறையினரை டார்க்கெட் செய்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரே நகரத்தில் 19,000 சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், அதுவும் வெறும் 3.5 வருடங்களில் என்பது உண்மையில் ஆச்சிரியமான விஷயமாகும். இத்தனைக்கும் நாக்பூர் ஆனது மும்பை, சென்னை அளவிற்கு பெரிய மாநகரம் கூட கிடையாது. இதில் இருந்து அந்த குறிப்பிட்ட நகரத்தில் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு எந்த அளவிற்கு வரவேற்பு உள்ளது என்பதை அறிய முடிகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, July 8, 2024, 23:01 [IST]
English summary
Bajaj chetak electric scooter sales number crossed 19000 in nagpur
மேலும்... #bajaj auto #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+