சிஎன்ஜி பைக் திடீரென தீ பிடிக்குமா? பஜாஜ் அளித்த வேற லெவல் விளக்கம்!

பஜாஜ் நிறுவனம் இன்று உலகின் முதல் சிஎன்ஜி பைக்கை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக் சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் ஆகிய இரண்டு எரிபொருளிலும் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. சிஎன்ஜி சிலிண்டர் பைக்கில் பொருத்தப்படுவது இதுதான் முதல் முறை என்பதால் பலருக்கும் இது குறித்த சந்தேகம் இருக்கிறது. எந்த பகுதியில் சிலிண்டர் இருக்கிறது? அது பாதுகாப்பாக இருக்குமா? தீ பிடிக்க வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்விகள் பலருக்கும் எழுந்துள்ளது. அவர்களுக்கான விளக்கங்களை பஜாஜ் நிறுவனம் ஏற்கனவே வழங்கியுள்ளது. இதைப்பற்றி தான் இங்கே காணப் போகிறோம்.

இன்று பஜாஜ் நிறுவனம் தனது சிஎன்ஜி பைக்கை அறிமுகப்படுத்தும்போது இந்த பைக் எப்படியான பாதுகாப்பு சோதனைகளுக்கு எல்லாம் உட்படுத்தப்பட்டது என்ற விளக்கங்களை அளித்துள்ளது .அதன் மூலம் இந்த பைக் எவ்வளவு பாதுகாப்பானது? விபத்து ஏற்பட்டாலும் பைக் தீ பிடிக்காத அளவுக்கு என்னென்ன அம்சங்கள் இதில் இருக்கிறது? என தெளிவாக கூறியிருந்தது. இதன்படி இந்த பைக் 11 விதமான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது.

Bajaj CNG Bike

முதல் சோதனையாக சிஎன்ஜி வால்வு இம்பேக்ட் என்ற சோதனை செய்யப்பட்டது. இதன்படி சிஎன்ஜி வால்வு பகுதியில் சேதம் ஏற்படும் பட்சத்தில் இது சிஎன்ஜி எரிவாயு லீக்காக வாய்ப்பிருக்கிறதா என சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையிலும் எரிவாயு பிரஷர் குறையாமல் லீக் இல்லாமல் சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்தது.

இரண்டாவது சோதனையாக பெண்டுலம் டெஸ்ட் எடுக்கப்பட்டது. இந்த டெஸ்ட் வாகனம் ஒரு இடத்தில் நிற்கும் போது வேறு ஏதாவது பொருட்கள் வாகனத்தின் மீது விழுந்தாலோ அல்லது மோதினாலோ அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சோதனை செய்யப்பட்டது. அந்த சோதனையும் வெற்றிகரமாக நடந்தது. மூன்றாவது சோதனையாக பின்பக்க இம்பேக்ட் டெஸ்ட் நடந்தது.

Bajaj CNG Bike

இந்த சோதனையில் வாகனத்தின் பின்பக்கம் ஏதாவது ஒரு பொருளின் மீது மோதினால் அதனால் ஏற்படும் பாதிப்புகள் ஆய்வு செய்யப்பட்டது. அதிலும் சிஎன்ஜி சிலிண்டருக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை. நான்காவது சோதனையாக பக்கவாட்டு இம்பேக்ட் சோதனை நடந்தது. பக்கவாட்டு பகுதியில் ஏதாவது வாகனம் வந்து மோதினாலும் சிஎன்ஜி சிலிண்டருக்கு பாதிப்பு இல்லை.

ஐந்தாவது சோதனையாக முன்பக்க மோதுதல் சோதனை செய்யப்பட்டது இதன்படி சிஎன்ஜி பைக் நேருக்கு நேராக ஒரு வாகனத்துடன் மோதும் போது ஏற்படும் சேதங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. சுமார் 1.5 டன் எடை கொண்ட ஒரு பொருள் மீது இந்த பைக் மோதினால் என்ன மாதிரியான சேதம் ஏற்படும் என சோதிக்கப்பட்டதிலும் சிஎன்ஜி சிலிண்டருக்கும் அதன் பிரஷருக்கும் எந்த விதமான பாதிப்பும் இல்லை.

Bajaj CNG Bike

ஆறாவது சோதனையாக வாகனம் ஒரு இடத்தில் நிற்கும்போது பக்கபாட்டுப் பகுதியில் இருந்து மற்றொரு வாகனம் வந்து மோதினால் எப்படியான சேதம் ஏற்படும் என சோதனை செய்யப்பட்டது. அதிலும் எந்த பாதிப்பும் இல்லை ஏழாவது சோதனையாக ஒரு உயரமான பகுதியில் இருந்து வாகனம் கீழே விழுகிறது என்றால் எப்படியான இம்பேக்ட் இருக்கும் என்ன சோதனை செய்யப்பட்டது. அந்த சோதனையிலும் எந்த விதமான பாதிப்புகளும் இல்லை.

எட்டாவது சோதனையாக சுமார் 10 டன் எடை கொண்ட பெரிய லாரி ஒன்று இந்த வாகனத்தின் மீது ஏறி இறங்கினால் எப்படியான பாதிப்பு ஏற்படும் என சோதனை செய்யப்பட்டது இந்த சோதனையிலும் சிலிண்டர்க்கு எந்த விதமான பாதிப்புகளும் இல்லாமல் தப்பித்தது. ஒன்பதாவது சோதனையாக இந்திய தரச் சான்று படி சிஎன்ஜி வால்வு சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையையும் வெற்றிகரமாக சிஎன்ஜி பைக் கடந்தது.

பத்தாவது சோதனையாக சிஎன்ஜி எரிபொருள் ஏற்றப்படும் போது ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து சோதனை செய்யப்பட்டது. இது அகில இந்திய தரச் சான்றுக்கான சோதனையாகவும் இந்த சோதனையிலும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் சிஎன்ஜி சிலிண்டர் பாதுகாப்பாக இருந்தது. இறுதியாக எரிபொருள் நிரப்பப்பட்டு கொண்டிருக்கும்போதே செய்யப்பட்டால் ஏற்படும் சோதனைகள் மற்றும் லீக்குகள் குறித்து சோதனை செய்யப்பட்ட போதும் அதையும் வெற்றிகரமாக பஜாஜ் சிஎன்ஜி பைக் கடந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது பஜாஜ் நிறுவனம் சிஎன்ஜி பைக்குகளை விற்பனை செய்த பின்பு ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே அறிவதற்கான சோதனைகள் செய்து இதில் எந்த விதமான பெரிய பாதிப்புகளும் இல்லை என நீரூபணமாகியுள்ளது. சாதாரணமாக பெட்ரோல் பைக்குகளை எப்படி பயன்படுத்துகிறோமோ அதே போலவே இந்த பைக்கையும் பயன்படுத்தலாம் என உறுதி செய்த பின்பு தான் இந்த பைக்கை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளார்கள் என்பது தெரிகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, July 5, 2024, 22:43 [IST]
English summary
Bajaj cng bike 11 safety tests details
மேலும்... #Bajaj CNG Bike #bajaj auto #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X