87 கிமீ மைலேஜ் தரும் பஜாஜ் சிஎன்ஜி பைக்கின் விலை இவ்ளோதானா! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தகவல்கள்!

4ம் ஆண்டின் மிக முக்கிய வாகன அறிமுகமாக நாளை வெளியாகியுள்ள பஜாஜ் நிறுவனத்தின் சிஎன்ஜி பைக் அறிமுகம் தான் இருக்கப் போகிறது. இது உலகின் முதல் சிஎன்ஜி பைக்காக அறிமுகமாகிறது. இதன் மீதான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது. குறைவான விலையில் மக்களுக்கு பல்வேறு பலன்களை அளிக்கும் வகையில் இந்த பைக் நாளைக்கு அறிமுகமாக உள்ளது. இது குறித்து பலருக்கு பல்வேறு கேள்விகள் இருக்கின்றன. இந்த பைக்கின் விலை என்ன பெயர் என்ன? இந்த பைக் எப்படி வேலை செய்கிறது என்ற கேள்விகளுக்கெல்லாம் இங்கே பதிலை காண்போம்.

பஜாஜ் நிறுவனம் நாளை தனது உலகின் முதல் சிஎன்ஜி பைக்கை அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. இந்த பைக் வருவது குறித்து கடந்த சில மாதங்களாகவே பேச்சு எழுந்து வந்தன. இந்த பைக்கின் காப்புரிமை வரைபடம் இந்த பைக் சோதனை செய்யும் போது எடுக்கப்பட்ட ஸ்பை புகைப்படங்கள் மற்றும் டீசர்கள் எல்லாம் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Bajaj CNG Bike

இந்த பைக் குறித்து நாம் அனைவருக்கும் ஏற்கனவே நன்கு தெரிந்த விஷயம் என்றால் இந்த பைக் ஒரே நேரத்தில் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆகிய இரண்டு எரிபொருளிலும் இயங்கும் வகையில் உருவாக்கப்படுகிறது. அதாவது இந்த பைக்கில் பெட்ரோல் டேங்க்கும் இருக்கும். அதே நேரம் சிஎன்ஜி டேங்க்கும் இருக்கும். ஓட்டுநர் எந்த எரிபொருளில் பைக் இயங்க வேண்டும் என்பதை தேர்வு செய்வது கொள்வதற்காக சுவிட்சும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கின் பெயரை பொறுத்தவரை சமூக வலைதளங்களில் ப்ரூஸர் எனவும், அதே நேரம் ஃப்ரீடம் எனவும் பேசி வருகிறார்கள். இதில் எந்த பெயரில் இந்த பைக் வெளியாக போகிறது? ஒருவேளை இரண்டு பைக்குகள் வெளியாகி ஒன்று பெயர் ஒன்றுக்கு பிறகு பெயர் ஃப்ரீடம் என வெளியாகப் போகிறதா என்ற தகவல் எதுவும் இதுவரை உறுதியாகவில்லை. ஆனால் இந்த ரெண்டு பெயரில் ஒரு பெயர் கட்டாயம் இருக்கும்.

Bajaj CNG Bike

இந்த பைக்கின் விலையை பொருத்தவரை ரூபாய் 1 லட்சத்திற்கும் குறைவான விலையில் இதை விற்பனைக்கு கொண்டுவர அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதனால் பேஸ் வேரியண்ட் விலை ரூபாய் 90 அல்லது 95 ஆயிரமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக்கின் டாப் வேரியண்ட் விலை ரூபாய் 1 லட்சம் அல்லது அதற்கும் அதிகமாக இருக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

தற்போது நமக்கு கிடைத்துள்ள தகவலின் படி இந்த பைக்கில் 125சிசி இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும் என தெரிகிறது. வெளிமார்க்கெட்டில் 125சிசி செக்மெண்டில் உள்ள பைக்குகள் எல்லாம் ரூ75 ஆயிரம்-ரூ85 ஆயிரம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. டிவிஎஸ் நிறுவனத்தின் ரைடர்125 பைக் ரூ95,000 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. கிட்டத்தட்ட இதே விலையில் விற்பனைக்கு வரும் பட்சத்தில் பெட்ரோல் பைக்குக்கும் சிஎன்ஜி பைக்கிற்கு விலை வித்தியாசம் இல்லாமல் இருக்கும்.

Bajaj CNG Bike

இதுதான் உலகில் முதல் சிஎன்ஜி பைக் என்பதால் நேரடியாக இந்த பைக்குக்கு போட்டியாக எந்த பைக்கும் இல்லை. அதே நேரம் இதன் விலை செக்மெண்டில் ஏராளமான பைக்கில் இருக்கின்றன. முக்கியமாக ஹீரோ நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் பைக்கும் இதே செக்மெண்டில் தான் இருக்கிறது. இதற்கு போட்டியாக நிச்சயம் சிஎன்ஜி பைக் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.

இதன் காரணமாக இந்த பைக் விற்பனைக்கு அறிமுகமாகி மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்று விட்டால் ஹீரோ ஸ்ப்ளெண்டரின் வாடிக்கையாளர் கூட்டத்தை இந்த பைக் பெரிய அளவில் கவரும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் இந்த பைக்கை ஓட்டுவதற்கான எரிபொருள் செலவு குறைவு என்பதுதான். தற்போது பெட்ரோல் விலையை விட சிஎன்ஜி விலை குறைவாக இருப்பது முக்கியமான காரணம்.

பஜாஜ் நிறுவனம் இந்த சிஎன்ஜி பைக்கை கொண்டு வருவதற்கு பிரதான நோக்கமே அதிக மைலேஜ் விரும்பும் வாடிக்கையாளரை கவர வேண்டும் என்பதுதான். அதனால் இந்த பைக்கின் விலையையும் குறைவாகவே வைத்திருக்க பஜாஜ் நிறுவனம் விரும்புகிறது. அப்பொழுதுதான் மார்க்கெட்டில் மிகப்பெரிய போட்டி உருவாகி சிஎன்ஜி பைக் பக்கம் வாடிக்கையாளர்கள் அதிகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்த பைக் சிஎன்ஜியில் இயங்கும் பைக்காக இருப்பதால் மைலேஜ் அதிகமாக இருக்கும். லிட்டருக்கு 80 முதல் 90 கிமீ வரை மைலேஜ் தருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. தற்போது மார்கெட்டில் ஒரு கிலோ சிஎன்ஜி ரூ87க்கு விற்பனையாகி வருகிறது. அப்படி பார்த்தால் இந்த பைக் 87 கி.மீ மைலேஜை வழங்கினால் இதில் ஒரு கிமீ பயணிக்க ஒரு ரூபாய் தான் செலவாகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பஜாஜ் நிறுவனத்தின் பைக் மீது இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் உள்ள ஆட்டோ மொபைல் ஆர்வலர்கள் கண் வைத்திருக்கிறார்கள். இந்த பைக் எந்த தொழில்நுட்பத்தில் வேலை செய்கிறது? இதற்கு மக்கள் மத்தியில் எவ்வளவு வரவேற்பு கிடைக்கப் போகிறது என்பதைப் பொறுத்து உலகில் பைக் துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படக்கூட வாய்ப்பு இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, July 4, 2024, 16:12 [IST]
English summary
Bajaj cng bike expected price features mileage specifications all you need to know
மேலும்... #Bajaj CNG Bike #bajaj auto #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X