பெட்ரோல், சிஎன்ஜி ரெண்டிலும் ஓடும் பஜாஜ் பைக்கின் ப்ளூபிரிண்ட் கசிவு! முக்கிய தகவல்கள் நிறைய வெளி வந்திருக்கு!

பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனம் அதன் முதல் சிஎன்ஜி (CNG) பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான அனைத்து வேலைகளையும் தொடங்கிவிட்டது. ஆமாங்க, நிறுவனத்தின் முதல் சிஎன்ஜி பைக் விற்பனைக்கு வருவதற்கு தயார் நிலையில் உள்ளது. இதுவே இந்த உலகிற்குமான முதல் சிஎன்ஜி பைக் மாடல் ஆகும்.

வருகின்ற ஜூன் மாதம் 18 ஆம் தேதி அன்றே இந்த பைக்கை பஜாஜ் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த நிலையிலேயே பைக் பற்றிய மிக முக்கியமான தகவல் ஒன்று வெளியாகி இருக்கின்றது. சிஎன்ஜி பைக் பற்றிய ப்ளூ பிரிண்டே (BluePrint) வெளியாகி இருக்கின்றது.

Cng bike

இது பஜாஜ் சிஎன்ஜி பைக்கின் முழு ஸ்ட்ரக்சர் (Structure)-யும் வெளிக்காட்டும் வகையில் அமைந்திருக்கின்றது. குறிப்பாக, பெட்ரோல் டேங்க் மற்றும் சிஎன்ஜி சிலிண்டர்கள் எங்கு இடம் பெறும் மற்றும் எப்படி இருக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது. ஆமாங்க, பஜாஜின் சிஎன்ஜி பைக், சிஎன்ஜி கார் மற்றும் ஆட்டோக்களைப் போலவே சிஎன்ஜி மற்றும் பெட்ரோலிலும் ஓடும்.

எனவேதான் சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் இரண்டையும் நிரப்பிக் கொள்வதற்கான வசதி இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது. பைக்கில் சிஎன்ஜி சிலிண்டர்களை தாங்கி பிடிக்கும் விதமாக டபுள் கிராடில் ஃப்ரேமே (double cradle frame) பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த சிலிண்டர்கள் இருக்கைக்கு அடியில் மையப்பகுதியில் இடம் பெற்றிருக்கும்.

Bajaj cng bike blueprint

Source: Bikewale சிஎன்ஜி நிரப்புவதற்கான துவாரம் முன்பக்க முனையில் இடம் பெற்றிருக்கும். பெட்ரோல் டேங்க்கிற்கு பெரிய அளவில் முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. அது சிறியதாகவே உள்ளது. சிஎன்ஜி-யில் பயணிக்கவே இந்த பயனாளிகள் விரும்புவார்கள் என்கிற காரணத்தினாலேயே அதற்கு அதிகம் முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. பெட்ரோல் டேங்க் வழக்கமான பெட்ரோல் டூ-வீலர்களில் இருப்பதைப் போலவே இருக்கும் அதை நிரப்பும் வாய் பகுதியும் வழக்கமான பைக்குகளில் இருப்பதைப் போலவே உள்ளது.

இதேபோல், எஞ்சின்களும் வழக்கமாக அனைத்து பைக்குகளிலும் எங்கு இருக்குமே அங்கேயே பஜாஜ் சிஎன்ஜி பைக்கிலும் நிலை நிறுத்தப்பட்டு இருக்கின்றது. அதேவேலையில், அது சற்று சாய்வாக உள்ளது. அத்துடன் சற்று தாழ்வான இடத்திலும் அது நிலை நிறுத்தப்பட்டு இருக்கின்றது. சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் இரண்டிலும் இயங்க வேண்டும் என்பதற்காக இத்தகைய மாற்றத்தை பஜாஜ் செய்திருக்கின்றது.

Bajaj cng bike new information

இந்த பைக்கில் 125 சிசி எஞ்சினே எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் 125 சிசி திறன் கொண்ட மோட்டார்சைக்கிள்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், இதுபற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை. விரைவில் இதுகுறித்த தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேபோல், இந்த சிஎன்ஜி பைக்கில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் டூயல் ஷாக் அப்சார்பர் ஆகிய சிறந்த ரைடு அனுபவத்தை வழங்கும் நோக்கிலும், டிஸ்க் பிரேக்குகள் மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்தை வழங்கும் நோக்கிலும் சேர்க்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் சிஎன்ஜி பெட்ரோலை விட மிகக் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

Bajaj cng bike

ரூ. 25 முதல் 30 ரூபாய் வரை குறைவான விலையிலேயே சிஎன்ஜி விற்பனைக்குக் கிடைக்கின்றது. எனவே அதிக மைலேஜ் மற்றும் மலிவான தொகையில் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என நினைப்போர் மத்தியில் இந்த பைக்கிற்கு நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சிஎன்ஜி கார் மற்றும் ஆட்டோக்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே பஜாஜ் சிஎன்ஜி பைக்கை விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான பணியில் களமிறங்கி இருக்கின்றது. இதுவும் இந்தியர்களின் மனம் கவர்ந்த பைக்காக மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, May 6, 2024, 16:26 [IST]
English summary
Bajaj cng bike fresh information revealed by blueprint
மேலும்... #Bajaj CNG Bike #bajaj auto #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X