ஊர் முழுவதும் சுற்றி வரும் இந்த மர்ம பைக் இவ்வளவு மைலேஜ் தருமா? ஏகப்பட்ட பணம் மிச்சமாகுமே!
பஜாஜ் நிறுவனம் வரும் ஜூன் மாதம் 18ம் தேதி உலகின் முதல் சிஎன்ஜி பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டு வரும் நிலையில், இந்த பைக்கின் புதிய ஸ்பை புகைப்படங்கள் மற்றும் இந்த பைக்கின் மைலேஜ் மற்றும் எரிபொருள் செலவு குறித்த சில முக்கியமான தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
பஜாஜ் நிறுவனம் வரும் ஜூன் மாதம் 18ம் தேதி சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும் பைக்கை வெளியிட திட்டமிட்டு வருகிறது. இந்த பைக்குக்கு பெரும்பாலும் ப்ரூஸர் என பெயர் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 100 முதல் 125 சிசி செக்மெண்டில் உள்ள இன்ஜினை பயன்படுத்தி சிஎன்ஜி பைக்கை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய சிஎன்ஜி பைக் இந்தியாவிலேயே முற்றிலும் புதிய வாடிக்கையாளரை தேடிப் பிடித்து அவர்களுக்காக விற்பனை செய்யும் பைக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக்கை பயன்படுத்துவதன் மூலம் எரிபொருள் செலவு குறைவாக இருக்கும். அதே நேரத்தில் மைலேஜ் அதிகமாக இருக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. பெட்ரோல் பைக்கை விட இந்த பைக் தான் லாபகரமாக இருக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த பைக்கில் உள்ள சில அம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி இந்த பைக்கில் சிங்கிள் பீஸ் ஹாண்டில் பார் மற்றும் ஹேண்ட் கார்டு இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மத்தியில் வைக்கப்பட்டுள்ள புட் ரெஸ்ட்கள், எல்இடி ஹெட்லைட், பல்ப் இண்டிகேட்டர், சிங்குலர் கிராப்ரெயில், பாதுகாப்பிற்காக இஞ்சின் பக்கத்தில் கார்டுகள், கருப்பு நிற எக்ஸாஸ்ட் மற்றும் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியன இந்த பைக்கில் இடம்பெறும்.

இந்த பைக்கை தற்போது இந்தியாவில் பல்வேறு இடங்களில் நிறுவனம் சோதனை செய்து வருகிறது. இதனால் அவ்வப்போது இந்த பைக்கின் ஸ்பை புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. அதில் தெரியும் விஷயங்களை வைத்து தான் இந்த தகவல் எல்லாம் தற்போது வெளியாகி கொண்டிருக்கிறது.
தற்போது புதிதாக இரண்டு ஸ்பைப் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இதன்படி இதில் உள்ள சிஎன்ஜி டேங்க் சீட்டுக்கு அடியில் உள்ள டபுள் கிராடில் பிரேமுக்கு இடையே பொருத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுபோக சிறிய பெட்ரோல் டேங்க்கும் இணைக்கப்பட்டுள்ளது சிஎன்ஜி காலியான நேரத்தில் பெட்ரோலை நிரப்பி கொண்டு பயணம் செய்ய முடியும்.

இந்த பைக்கின் முன்பக்கம் டெலஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷனும், பின்பக்கம் மோனோஷாக் சஸ்பென்ஷனும் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் டிரம் மற்றும் டிஸ்க் பிரேக்குகள், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். இந்த பைக்கின் வருகைக்காக பலர் காத்திருக்கிறார்கள்.
இது பைக்கின் ஸ்பை புகைப்படங்கள் வெளியான நிலையில் இரண்டு விதமான வேரியன்ட்கள் வெளியாகி உள்ளது. ஒன்று முன்பக்கம் விண்டு ஸ்கிரீன் ,ஸ்லீக்கான மிரர் எல்லாம் கொண்ட ஒரு பிரீமியம் டச் கொண்ட பைக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இது பஜாஜ் சிடி 125 வெர்ஷனாக கூட இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது இதில் ஹேண்ட் கார்டுகள், கன்வென்ஷனல் அலாய் வீல்கள் எல்லாம் பொருத்தப்பட்டுள்ளன.

பஜாஜ் நிறுவனம் இந்த பைக்கை தயாரிக்கும் போது இது ஒரே நேரத்தில் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆகிய இரண்டு எரிபொருள்களிலும் இயங்கும் வகையில் உருவாக்கப்படும் என கூறப்படுகிறது. பைக் பெட்ரோல் இன்ஜினில் இயங்க வேண்டுமா சிஎன்ஜியில் இயங்க வேண்டுமா என்பதை ஸ்விட்ச் மூலம் ரைடர் தேர்வு செய்து கொள்ள முடியும் வகையில் ஒரு ஸ்விட்ச் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சிஎன்ஜி பைக்கை பயன்படுத்துவதன் மூலம் பெட்ரோல் பைக்கில் இருந்து இந்த பைக் 50 சதவீதம் மாசு வெளியேற்றத்தை குறைக்கும். 70% கார்பன் மோனாக்சைடு வெளியேற்றத்தை குறைக்கும். மீத்தேன் இல்லாத ஹைட்ரோ கார்பன் மாசுவை 90 சதவீதம் குறைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் பெட்ரோல் பைக்கை பயன்படுத்துவதற்கும் இந்த சிஎன்ஜி பைக்கை பயன்படுத்துவதற்கும் ஆகும் எரிபொருள் செலவு 55 முதல் 65 சதவீதம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பஜாஜ் நிறுவனம் வெளியிடும் இந்த சிஎன்ஜி பைக் நிச்சயம் மைலேஜ் மிகப்பெரிய புரட்சியே செய்யும் என எதிர்பார்க்கலாம். இதனால் இந்த பைக்கை வாங்கி பயன்படுத்துவார்கள் பெட்ரோல் பங்கை காட்டிலும் குறைவான செலவில் இந்த பைக்கை இயக்க முடியும் மாதம் 3000 ரூபாய் பெட்ரோலுகாக செலவு செய்யும் ஒரு நபர் இந்த பைக்கை வாங்கினால் அவருக்கு ரூபாய் 1500 தான் செலவாகும் என நிறுவனம் தெரிவித்துள்ளது மகிழ்ச்சியை அளித்துள்ளது.
Source: Acko Drive


Click it and Unblock the Notifications









