பெட்ரோல் செலவை பாதியா குறைக்கலாம்! பஜாஜ் சிஎன்ஜி பைக்கை வாங்குனா இவ்வளவு லாபம் கிடைக்குமா?
பஜாஜ் நிறுவனம் இன்று தனது உலகின் முதல் சிஎன்ஜி பைக்காக ஃப்ரீடம் 125 என்ற சிஎன்ஜி பைக்கை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த பைக் ரூபாய் 95,000 என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. இந்த பைக் ஒரே நேரத்தில் சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் ஆகிய இரண்டு எரிபொருட்களிலும் இயங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் சிஎன்ஜி மூலம் பயன்படுத்துவதால் ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 100 கிலோ மீட்டர் வரை பயணிக்க முடியும். இது எப்படி என்ற விரிவான விபரங்களை தான் இங்கே காண போகிறோம்.
பஜாஜ் நிறுவனம் தனது ஃப்ரீடம் 125 என்ற சிஎன்ஜி பைக்கை இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. அப்பொழுது இந்த பைக்கில் 125சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதை சிஎன்ஜி எரிபொருளை கொண்டும் பயன்படுத்த முடியும், அதே நேரம் பெட்ரோலைக் கொண்டும் பயன்படுத்த முடியும் என தெரிவித்துள்ளது.

இந்த பைக்கில் காண மைலேஜ் விபரங்களை குறித்து அந்நிறுவனம் கூறும் போது 2லிட்டர் பெட்ரோல் டேங்க் மற்றும் 2 கிலோ சிஎன்ஜி ஆகியவற்றை முழுமையாக நிரப்பினால் 330 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதை வைத்து பார்க்கும் போது நாம் சுமார் 375 ரூபாய்க்கு எரிபொருள் நிரப்பும் பட்சத்தில் 330 கிலோமீட்டர் பயணிக்கலாம்.
இதில் சிஎன்ஜி எரிபொருளை வைத்து மட்டும் பயன்படுத்தும் போது இந்த பைக் 200கிலோமீட்டர் வரை ரேஞ்ச் தரும் என தெரிவித்துள்ளது. அதாவது இரண்டு கிலோ சிஎன்ஜிக்கு 200கிலோமீட்டர் பயணிக்கும் என தெரிவித்துள்ளது. ஒரு கிலோ சிஎன்ஜி நிரப்பினால் 100கிலோமீட்டர் பயணம் செய்யலாம். இதுவே பெட்ரோல் வைத்து மட்டும் இயங்கும்போது இரண்டு லிட்டர் பெட்ரோலுக்கு 130கிலோமீட்டர் அதாவது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 65 கிலோ மீட்டர் மைலேஜ் தருகிறது.

இதை வைத்து பார்க்கும் போது இந்த பைக்கை சிஎன்ஜி எரிபொருளில் இயக்குவது தான் அதிக லாபத்தை தரும். இன்று மார்க்கெட்டில் ஒரு கிலோ சிஎன்ஜி ரூபாய் 87 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. அப்படி என்றால் ரூபாய் 175 செலவில் 200 கிலோமீட்டர் வரை பயணம் செய்ய முடியும். இதன்படி கணக்கிட்டால் ஒரு கிலோமீட்டர் பயணம் செய்ய 87 காசு தான் செலவாகிறது.
இதுவே இந்த பைக்கை பெட்ரோலில் வைத்து இயக்கும் போது ஒரு கிலோமீட்டர் பயணம் செய்ய ரூ1.5 வரை ஆகிறது. கிட்டத்தட்ட சிஎன்ஜி எரிபொருளில் ஆகும் செலவைவிட இரண்டு மடங்கு கூடுதலான செலவு பெட்ரோலில் ஆகிறது. அதனால் இந்த பைக்கை சிஎன்ஜியில் இயக்குவது தான் லாபகரமான விஷயமாக இருக்கும்.

தற்போது நீங்கள் பெட்ரோல் பங்கை பயன்படுத்தி வருகிறீர்கள் என வைத்துக்கொள்வோம் மாதம் சராசரியாக 1000 கிலோ மீட்டர் வரை வாகனத்தை பயன்படுத்துகிறீர்கள் என கணக்கிடுவோம். இதற்கு நீங்கள் மாதம் 15 முதல் 16 லிட்டர் வரை பெட்ரோல் செலவு செய்ய வேண்டியது இருக்கும். அதற்காக நீங்கள் மாதம் ரூபாய் 1500 முதல் 1600 வரை செலவு செய்ய வேண்டும்.
இதுவே நீங்கள் பெட்ரோலுக்கு பதிலாக இந்த வாகனத்தில் சிஎன்ஜி யை மட்டும் பயன்படுத்தி பயணம் செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம் அப்படி எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் நீங்கள் சிஎன்ஜி-க்கு வெறும் 870 ரூபாய் மட்டுமே செலவு செய்தால் போதும் இதே ஆயிரம் கிலோமீட்டரை நீங்கள் கடந்து விட முடியும். கிட்டத்தட்ட உங்கள் எரிபொருள் செலவை இந்த பைக் பாதியாக குறைக்கிறது.
லாஸ்ட் மைல் டெலிவரி, உணவு டெலிவரி கலெக்ஷன் ஏஜென்ட் உள்ளிட்ட அதிக டூவீலர் பயன்பாடு கொண்ட தொழிலில் இருப்பவர்களுக்கு இது அதிக பலன் உள்ளதாக இருக்கும். அவர்கள் ஒரு நாளைக்கு சுமார் 150 முதல் 200 கிலோமீட்டர் பயணம் செய்வார்கள் அவர்களுக்கு நிச்சயம் மிகப்பெரிய அளவிலான பணத்தை இந்த பைக் சேமித்து கொடுக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பஜாஜ் நிறுவனம் இந்த பைக்கை தயாரிக்கும் போதே பெட்ரோலுக்கு மாற்றாக அதிக மைலேஜ் மற்றும் குறைந்த எரிபொருள் செலவை விரும்பும் வாடிக்கையாளர்களை குறி வைத்து தயாரித்தது அந்த விஷயத்தில் தற்போது இந்நிறுவனம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது என்று சொல்லலாம். கிட்டத்தட்ட பெட்ரோல் செலவை பாதியாக இந்த பைக் குறைக்கும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை.


Click it and Unblock the Notifications









