70 கி.மீ மைலேஜ் தரும் ரூ80,000 பைக்கிற்கு பெட்ரோலே போடவேணாம்! எப்ப வருது தெரியுமா?
பஜாஜ் நிறுவனம் இந்தியாவின் முதல் சிஎன்ஜி பைக்கை அறிமுகப்படுத்தப் போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த பைக்கை தற்போது பல்வேறு இடங்களில் அந்நிறுவனம் சோதனை செய்து வருவதை நம்மால் காண முடிகிறது. இந்நிலையில் இந்த பைக்கின் அறிமுக தேதி குறித்த தகவல்கள் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
பஜாஜ் நிறுவனம் இன்று தனது பல்சர் என்எஸ் 400 என்ற ஸ்டிரீட் ஃபைட்டர் பைக்கை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கிடையில் அறிமுகமாகியுள்ள நிலையில் இந்த அறிமுக கூட்டத்தில் பஜாஜ் நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி மக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பஜாஜ் நிறுவனத்தின் முதல் சிஎன்ஜி பைக் அறிமுக தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது டூவீலர் என்றாலே பெட்ரோல் இன்ஜின் கொண்ட டூவீலர்களை தான் நாம் சாலையில் காண முடிகிறது. சமீப காலமாக எலெக்ட்ரிக் டூவீலர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகி வரும் நிலையில், பஜாஜ் நிறுவனம் முற்றிலும் வித்தியாசமாக யோசித்து சிஎன்ஜியில் இயங்கும் டூவீலரை தயாரித்துள்ளது. விரைவில் இதை அறிமுகப்படுத்தவும் முடிவு செய்துள்ளது. அதன்படி வரும் ஜூன் மாதம் 18ஆம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஜாஜ் நிறுவனம் இந்த சிஎன்ஜி பைக்கை குறைந்த விலை பைக்காக விற்பனைக்கு அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. இதன் மூலம் கிராமப் பகுதிகளில் இந்த பைக் அதிகமாக விற்பனையாக திட்டமிட்டு இந்த விலையில் இந்த பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி பஜாஜ் நிறுவனம் தயாரிக்கும் பிளாடினா 110 என்ற பைக் தயாராகும் அதே பிளாட்பார்மில் தான் இந்த பைக்கும் தயார் தயாரிக்கப்படுகிறது.

இந்த சிஎன்ஜி பைக் இந்தியாவில் பல்வேறு இடங்களில் சோதனை செய்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த சோதனை செய்யப்படும் பைக்கின் வடிவமைப்பை பொறுத்தவரை சிங்கள் சீட்கொண்ட பைக்காக இது இருக்கிறது. இதில் டிஜிட்டல் டிஸ்ப்ளே எல்லாம் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பாடி ஒர்க் பல்காக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. சிலிண்டரை பொருத்துவதற்கான இடம் சீட்டிற்கு அடியில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கமாக பெட்ரோல் டேங்க் இருக்கும் இடத்தில் சிஎன்ஜி எரிபொருளை நிரப்புவதற்கான நாப் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பெட்ரோல் நிரப்பப்படுவது போல இந்த வாகனத்தில் சிஎன்ஜி எரிவாயுவை நிரப்ப வேண்டும். இந்த சிஎன்ஜி எரிவாயு மூலம் தான் இந்த பைக்கின் இன்ஜின் இயங்கப் போகிறது.

இதுபோக அவசர காலத்தில் பயன்படுத்துவதற்காக சிறிய பெட்ரோல் டேங்க்கும் இணைக்கப்படுகிறது. சிஎன்ஜி தீர்ந்து போய்விட்டால் இந்த சிறிய பெட்ரோல் டேங்கில் பெட்ரோல் நிரப்பி கொண்டு அடுத்த சிஎன்ஜி ஸ்டேஷன் வரை பயணம் செய்ய முடியும். இதனால் தடை இல்லாத பயணம் கிடைக்கும். இதற்காக வாகனத்தில் தனி பட்டன் வழங்கப்பட்டிருக்கும். அந்த பட்டனை பயன்படுத்தி பெட்ரோலில் இயங்க வேண்டுமா? சிஎன்ஜி இயங்க வேண்டுமா என ஓட்டுனர் முடிவு செய்து கொள்ளலாம்.
இந்த பைக்கின் விலையை பொருத்தவரை ரூபாய் 80 ஆயிரம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அதிகாரப்பூர் அறிமுகத்தின்போது தான் இந்த பைக்கின் விலை உள்ளிட்ட அனைத்து தகவல்களும் உறுதியாக தெரியும். இது மட்டுமல்ல இந்த பைக் ஒரே ஒரு வேரியன்டில் தான் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெட்ரோல் பைக்கிற்கும் சிஎன்ஜி பைக்கிற்க்கும் மிகப்பெரிய வித்தியாசம் பயண செலவுதான். பெட்ரோல் எரிபொருள் மூலம் இயங்கும் இந்த வாகனம் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 55 முதல் 60 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தரும் வகையில் இருக்கிறது. தற்போது இந்தியாவில் லிட்டருக்கு 100 ரூபாய் என்ற விலையில் பெட்ரோல் விற்பனையாகி வருகிறது.
இதுவே சிஎன்ஜி என்றால் மார்க்கெட்டில் ஒரு கிலோ சிஎன்ஜி ரூபாய் 87 க்கு விற்பனையாகி வருகிறது. சிஎன்ஜி மூலம் இந்த பைக் இயங்கும் போது அது 60 முதல் 70 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தான் இந்த சிஎன்ஜி பைக்கை பஜாஜ் நிறுவனம் அறிமுகப்படுத்த முயற்சி செய்து வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பைக்குகளில் சிஎன்ஜி தொழில்நுட்பத்தை கொண்டு வருவது நிச்சயம் புரட்சிகரமான ஒரு விஷயம்தான். இந்த தொழில்நுட்ப மக்கள் மத்தியில் வெற்றி பெற்று விட்டால் அடுத்து பல்வேறு நிறுவனங்கள் சிஎன்ஜி பைக் விலை அறிமுகப்படுத்த வாய்ப்பு இருக்கிறது. இது விலை குறைவு செலவும் குறைவு என்பதையும் ஒரு பக்கம் வைத்தாலும், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதும் குறைவாக இருக்கும் என்பது கூடுதல் தகவல்.


Click it and Unblock the Notifications









