உலகமே இந்த பைக்கை தான் எதிர்பார்க்குது! இதுல என்னென்ன இருக்கப்போகுது தெரியுமா?

பஜாஜ் நிறுவனம் இன்று தனது முதல் சிஎன்ஜி பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. இந்த பைக் தான் உலகின் முதல் சிஎன்ஜி பைக்காக கருதப்படுகிறது. ஆட்டோமொபைல் துறையில் இதுவரை பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இன்ஜின்களில் இயங்கும் பைக்குகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன. ஆனால் இதுவரை சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும் பைக்குகள் கமர்சியல் மார்க்கெட்டில் அறிமுகமாகவில்லை. இந்த பைக் தான் முதல் முறை கமர்ஷியல் மார்கெட்டிற்கு வருகிறது. இந்த பைக் குறித்த விரிவான விபரங்களை இங்கே நாம் காண்போம்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாகி வரும் நிலையில். மக்கள் மத்தியில் குறைந்த எரிபொருள் செலவில் இயங்கும் வாகனத்தின் தேடல் அதிகமாக இருந்தது. இந்நிலையில் பஜாஜ் நிறுவனம் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும் டூவீலரை தற்போது தயாரித்துள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் குறைந்த எரிபொருள் செலவில் நீண்ட தூரம் பயணம் செய்ய முடியும்.

bajaj cng bike launch time

இந்த சிஎன்ஜி பைக் உலகின் முதல் சிஎன்ஜி பைக்காக கருதப்படுகிறது. இதுவரை உலகில் வேறு எந்த சிஎன்ஜி பைக்கிலும் கமர்சியல் ரீதியில் விற்பனைக்கு வரவில்லை. இந்நிலையில் இந்த பைக் மீதான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது. இந்த பைக் எந்த விதமான தொழில்நுட்பத்தில் இயங்குகிறது? இதன் மைலேஜ் எவ்வளவு இருக்கும்? இந்த பைக்கின் விலை எவ்வளவு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது.

ஆட்டோமொபைல் உலகில் இந்த நிகழ்வு ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக அமையப் போகிறது. அதற்காக ஆட்டோமொபைல் ஆர்வலர்கள் பலர் இந்த நிகழ்வை உற்று கவனித்து வருகிறார்கள். இந்த நிகழ்வின்போது இந்த பைக் அறிமுகத்தில் என்னென்ன தகவல்கள் எல்லாம் வெளியாக போகிறது என்ற ஆர்வம் மக்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது. இதனால் இந்த நிகழ்வை ஆன்லைன் மூலம் லைவாக பலர் பார்க்க காத்திருக்கிறார்கள்.

bajaj cng bike launch time

இந்நிலையில் பஜாஜ் நிறுவனமும் இந்த நிகழ்வை நேரடி ஒளிபரப்பாக ஆன்லைன் மூலம் அனைத்து நபர்களும் பார்க்கும் வகையில் ஆப்ஷனை வழங்கியுள்ளது. இதன்படி யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இந்த நிகழ்வை அனைத்து மக்களும் நேரடியாக கண்டு களிக்க முடியும். இதில் அனைத்து தகவல்களும் லைவாக உலக மக்களுக்கு வெளியிடப்படும். இன்று மதியம் 1.30 மணிக்கு இந்த நிகழ்வு துவங்குகிறது.

பஜாஜ் நிறுவனம் ஏற்கனவே வெளியிட்டுள்ள டீசர்களை வைத்து பார்க்கும் போது இந்த பைக் ஃப்ரீடம் என்ற பெயரில் விற்பனைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கிறது. டீசரில் வெளியான காட்சிகளில் இந்த பெயர் இடம் பெற்று இருந்தது. மேலும் இந்த பைக் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி உள்ளன. இது எல்லாம் அதிகாரப்பூர்வ தகவல்களாக இல்லை என்றாலும் ஆச்சரியமான தகவல்களாக இருக்கிறது.

இன்று வெளியாக உள்ள இந்த சிஎன்ஜி பைக் ஒரே நேரத்தில் சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் ஆகிய இரண்டு எரிபொருளிலும் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதை ஒரு பட்டன் மூலம் சுவிட்ச் செய்ய முடியும். பைக் சிஎன்ஜி எரிபொருள் இயங்க வேண்டுமா பெட்ரோலில் இயங்க வேண்டுமா என்பதை ஓட்டுநரே முடிவு செய்து கொள்ள முடியும்.

இந்த பைக்கில் பஜாஜ் நிறுவனம் 125 சிசி இன்ஜினை பொருத்துகிறது என்ற தகவல் நமக்கு கிடைத்துள்ளது. இதனால் பஜாஜ் நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வரும் பைக் இன்ஜினை தான் சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும் இன்ஜினாக மாற்றி உள்ளது நமக்கு தெரிகிறது. இந்த பைக்கின் ஸ்பை புகைப்படங்கள் மற்றும் காப்புரிமை வரைபடம் ஆகியவற்றை வைத்து பார்க்கும்போது இந்த பைக்கில் சீட்டுக்கு அடியில் தான் சிஎன்ஜி டேங்க் பொருத்தப்பட்டுள்ளது தெரிகிறது.

bajaj cng bike launch time

இந்த பைக்கின் விலை குறித்த தகவல்கள் எல்லாம் அறிமுகத்தின் போது தான் அதிகாரப்பூர்வமாக தெரியவரும் என்றாலும் நமக்கு கிடைத்த தகவலின் படி இந்த பைக் ரூபாய் ஒரு லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. பேஸ் வேரியண்ட் ரூபாய் 90 அல்லது 95 ஆயிரம் என்ற விலையில் விற்பனைக்கு வரலாம் என்ற பேச்சு மார்க்கெட்டில் நிலவி வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகம் முழுவதும் தற்போது உலகின் முதல் சிஎன்ஜி பைக்கின் அறிமுகத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த பைக்கில் என்னென்ன அம்சங்கள் இடம் பெறுகிறது, இந்த பைக் இப்படியான வரவேற்பை மக்கள் மத்தியில் பெறப்போகிறது என்று எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த பைக் குறித்த தொழில்நுட்ப தகவல்களை பெற ஆட்டோ மொபைல் ஆர்வலர்கள் காத்திருக்கிறார்கள். இந்த பைக்கின் அறிமுகத்திற்குப் பிறகு மிகப்பெரிய புரட்சியே ஏற்படலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, July 5, 2024, 10:28 [IST]
English summary
Bajaj cng bike launch freedom 125 details
மேலும்... #Bajaj CNG Bike #bajaj auto #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X