இந்த பெயருக்காகவே பைக்கை வாங்கனுமே! பஜாஜ் சிஎன்ஜி பைக்கின் புது பெயர் இது தான்!
பஜாஜ் நிறுவனம் வரும் ஜூன் மாதம் 18ஆம் தேதி தனது முதல் சிஎன்ஜி பைக்கை அறிமுகப்படுத்தும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மக்கள் மத்தியில் இந்த பைக்கின் பெயர் என்னவாக இருக்கும்? இந்த பைக் என்ன தொழில்நுட்பத்தில் இயங்கும்? இந்த பைக்கின் மைலேஜ் எவ்வளவு இருக்கும்? உள்ளிட்ட ஏகப்பட்ட தகவல்களை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்நிலையில் பஜாஜ் நிறுவனம் புதிய பெயர் ஒன்றை டிரேடு மார்க் செய்துள்ளது. இந்த பெயர்தான் சிஎன்ஜி பைக்கின் பெயராக இருக்கும் என்ற பேச்சு தற்போது மார்க்கெட்டில் நிலவி வருகிறது. விரிவான தகவல்களை காணலாம் வாருங்கள்.
பஜாஜ் நிறுவனம் டூவீலர் செக்மெண்டில் மிகப்பெரிய புரட்சியை செய்யும் வகையில் சிஎன்ஜியில் இயங்கும் முதல் டூவீலரை வரும் ஜூன் மாதம் 18ம் தேதி மார்க்கெட்டில் களம் இறக்க திட்டமிட்டு வருகிறது. அதற்கான ஏற்பாடுகளை எல்லாம் செய்து வருகிறது. இன்னும் 19 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் தற்போது நிறுவனம் புதிய பெயர் ஒன்றை டிரேடு மார்க் செய்துள்ள தகவல் நமக்கு கிடைத்துள்ளது.

இதன்படி கடந்த 7ம் தேதி பஜாஜ் நிறுவனம் புதிய பெயருக்கான டிரேட் மார்க் விண்ணப்பம் ஒன்றை வழங்கி உள்ளது. அந்த பெயருக்கான டிரேடு மார்க்கையும் பெற்றுள்ளது. அதன்படி அந்நிறுவனம் "ஃபைட்டர்" என்ற பெயருக்கு டிரேட் மார்க்கை வாங்கி வைத்துள்ளது. இந்நிலையில் இந்த பெயரை தான் பஜாஜ் நிறுவனம் தனது சிஎன்ஜி பைக்குக்கு பொருத்தும் என மார்க்கெட்டில் பேச்சு நிலவி வருகிறது.
ஏற்கனவே "ப்ரூஸர்" என்ற பெயர் தான் சிஎன்ஜி பைக்கின் பெயராக இருக்கும் என பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்நிறுவனம் புதிதாக ஒரு பெயருக்கு விண்ணப்பம் செய்துள்ளது. இதற்கிடையில் பஜாஜ் நிறுவனம் தனது சிஎன்ஜி பைக்கை ஒரு பைக் கூட நிறுத்தாமல் அடுத்தடுத்து பல்வேறு பகுதிகளை சிஎன்ஜி பைக்குகள் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதனால் இந்த "ப்ரூஸர்" மற்றும் "ஃபைட்டர்" ஆகியவை தனித்தனி பைக்குகளாக களமிறங்க கூட வாய்ப்பு இருக்கிறது.

பஜாஜ் நிறுவனம் இதற்கு முன்னர் தனது சிஎன்ஜி பைக்குகளை முற்றிலும் மூடப்பட்ட நிலையில், இந்திய சாலைகளில் ஆங்காங்கே சோதனை செய்து வரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த புகைப்படத்தில் முதலில் வெளியான பைக்கில் ரக்காட் லுக்கில் ஹேண்டில் கார்டுகள் வழங்கப்பட்டிருந்தன. பிளாக் பேட்டர்ன் டயர்கள் எல்லாம் அதில் பொருத்தப்பட்டிருந்தது. இது ஒரு பைக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இரண்டாவதாக சோதனை செய்யப்பட்டு சிக்கிய புகைப்படத்தில், சாலையில் பயன்படுத்தப்படும் டயர்கள் தான் இதில் பயன்பட்டிருந்தது. பார்க்க சிம்பிலாகவும் முன்பக்கம் சிறிய வைசர் பொருத்தப்பட்டதாகவும் இது இருந்தது. இதில் எந்த பைக் முதலில் அறிமுகமாக போகிறது என்ற தகவல் இல்லை. இரண்டு பைக்குமே ஒரே நேரத்தில் அறிமுகமானாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
பஜாஜ் நிறுவனம் தற்போது பதிவு செய்துள்ள "ஃபைட்டர்" என்ற பெயர் ஏற்கனவே பாலிவுட் சினிமாவில் நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடித்த ஹிந்தி படத்தின் பெயர் ஆகும் இந்த பெயரை தான் தனது சிஎன்ஜி பைக் இருக்கா அந்நிறுவனம் வைக்கப் போகிறதா என்ற கேள்வியும் தற்போது சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டு வருகிறது. இன்னும் 19 நாட்கள் காத்திருந்தால் இதற்கான சரியான பதில் நமக்கு கிடைத்து விடும்.
பஜாஜ் நிறுவனம் தனது சிஎன்ஜி பைக்கை முழுமையாக சிஎன்ஜி பைக்காக மட்டுமல்லாமல் சிஎன்ஜி பைக்காகவும், அதே நேரம் பெட்ரோல் மூலமும் இயங்கும் இன்ஜின் கொண்டதாக வடிவமைத்துள்ளது. இந்த பைக்கை பெட்ரோல் இன்ஜின் இயக்க வேண்டுமா அல்லது சிஎன்ஜி-ல் இயக்க வேண்டுமா என்பதை ஸ்விட்ச் செய்யும் ஆப்ஷனும் வழங்கப்படும் என தெரிகிறது. பெட்ரோல் டேங்கின் அளவு சிறிதாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
தற்போது பஜாஜ் நிறுவனம் ஆண்டுக்கு ரூ 1 லட்சம் முதல் ரூ 1.20 லட்சம் வரையிலான சிஎன்ஜி பைக்குகளை தயாரிக்கும் திறனை கொண்டதாக இருக்கிறது. இந்நிறுவனம் அவுரங்காபாத்தில் நடத்தி வரும் ஆலையில் இந்த சிஎன்ஜி பைக்குகள் தயாராகி வருகின்றன. பஜாஜ் நிறுவனத்தின் இந்த சிஎன்ஜி பைக்குகள் விற்பனையில் ஹிட்டானால் மற்ற டூவீலர் நிறுவனங்களும் சிஎன்ஜி பைக்குகளை நோக்கி நகர துவங்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பஜாஜ் நிறுவனம் சிஎன்ஜி பைக்குகளை நோக்கி நகர்வதற்கு மிக முக்கியமான காரணம் மைலேஜ் தான் பெட்ரோலை விட சிஎன்ஜி அதிக மைலேஜ் தருவதால் மக்கள் பலர் குறைந்த செலவில் பயணம் செய்வதற்காக இந்த பைக்கை விரும்பி வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி இந்த பைக் ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 100 கிலோ மீட்டர் மைலேஜ் தந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.


Click it and Unblock the Notifications








