பஜாஜ் சிஎன்ஜி பைக்கின் பெயர் இது தானா? பெயரே இவ்வளவு மாஸா இருக்குதே!
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சிஎன்ஜி பைக் விலை தயாரித்து வருவது குறித்து நாம் இதற்கு முன்னர் செய்திகளில் பார்த்திருக்கிறோம். இதன்படி பஜாஜ் நிறுவனம் வரும் ஜூன் மாதம் உலகின் முதல் சிஎன்ஜி பைக்கை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்நிலையில் அந்நிறுவனம் சில பெயர்களை தற்போது டிரேடு மார்க் செய்துள்ளது. இந்த பெயர்கள்தான் சிஎன்ஜி பைக்குகளில் பெயர்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
தற்போது பைக் ஓட்டிகளுக்கு மிகப்பெரிய பிரச்சனை என்பது எரிபொருள் செலவு தான் பெட்ரோல் பைக்குகள் அதிகமாக இருக்கும் நிலையில் பெட்ரோல் மார்க்கெட்டில் லிட்டர் 100க்கும் அதிகமான விலையில் தான் விற்பனையாகி வருகின்றன. இந்நிலையில் இந்த எரிபொருள் செலவை குறைப்பதற்காக பஜாஜ் நிறுவனம் உலகின் முதல் சிஎன்ஜி பைக்கை தயாரிக்க முடிவு செய்து அதற்கான வேலைகளில் இறங்கி உள்ளது.

கிட்டத்தட்ட உலகின் முதல் சிஎன்ஜி பைக் என்பது தயாராகிவிட்டதாக பஜாஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கான சோதனைகள் தற்போது நடந்து வருவதாகவும் விரைவில் இது மார்க்கெட்டிற்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பஜாஜ் நிறுவனம் 100சிசி முதல் 160சிசி வரை திறன் கொண்ட இன்ஜின்களில் இந்த சிஎன்ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிஎன்ஜி பைக்குகளை உருவாக்க முடியும் என தெரிவித்துள்ளது.
உலகின் முதல் சிஎன்ஜி பைக் என்ன பெயரில் அறிமுகமாகும் என்ற கேள்வி இதனால் வரை மக்கள் மத்தியில் எழுந்து வந்தது. பலர் ஏற்கனவே இருக்கும் பைக்குகளில் சிஎன்ஜி வெர்ஷன்கள் அறிமுகமாக வாய்ப்பிருக்கிறது எனக் கூறினார்கள். சிலர் முற்றிலுமாக புதிய பைக் அறிமுகமாகும் எனவும் கூறினார்கள். ஆனால் என்ன பெயர் என மக்களுக்கு உறுதியாக தெரியாத நிலையில் தற்போது புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

அதன்படி பஜாஜ் நிறுவனம் பஜாஜ் மராத்தான், பஜாஜ் ஃபிரீடம், பஜாஜ் கிளைடர், பஜாஜ் டிராக்டர் என்ற நான்கு பெயர்களை தற்போது டிரேடு மார்க் செய்துள்ளது. டிரேடு மார்க் என்றால் ஒரு குறிப்பிட்ட பெயரை குறிப்பிட்ட நிறுவனம் செய்துவிட்டால் அந்த பெயரை மற்ற நிறுவனங்கள் பயன்படுத்தக் கூடாது என்ற விதிமுறை இருக்கிறது. அதற்காக இந்த நான்கு பெயர்களை தற்போது பஜாஜ் நிறுவனம் டிரேடு மார்க் செய்துள்ளது.
இந்த நான்கு பெயர்களை பஜாஜ் நிறுவனம் டிரேடு மார்க் செய்யும் போது இதை டூ வீலர் அல்லது 3 வீலர்களுக்காக பயன்படுத்தப்படும் பெயர்கள் என குறிப்பிட்டுள்ளது. மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் உள்ளிட்ட பல்வேறு விதமான வாகனங்களுக்கு இந்த பெயரை பயன்படுத்த அனுமதி கோரி இந்த டிரேட் மார்க்கை பதிவு செய்துள்ளது.

புதிதாக நான்கு பெயர்களை டிரேடு மார்க் செய்துள்ள நிலையில் இந்த தகவல் நமக்கு கிடைத்ததை இதன் மூலம் பஜாஜ் நிறுவனம் தனது சிஎன்ஜி பைக்குகளுக்கு தான் இந்த பெயர்களை வைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பஜாஜ் நிறுவனம் செய்துள்ள மராத்தான் என்ற பெயர் சிஎன்ஜி பைக்கிற்க்கு மிக பொருத்தமான பெயராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மராத்தான் என்பது நீண்ட தூரம் ஓடும் ஓட்டப்பந்தயமாகும். சிஎன்ஜி பைக்குகள் அதிக மைலேஜ் தருவது காரணமாக சிஎன்ஜி பைக்குக்கு மரத்தான் என்ற பெயரை பஜாஜ் நிறுவனம் வைக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. பஜாஜ் நிறுவனம் தனது சிஎன்ஜி பைக்கில் 1.2 கிலோ அளவிற்கு சிஎன்ஜி சிலிண்டர் பொருத்தும் வகையிலான பைக்கை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக் மூலம் 120 கிலோமீட்டர் வரை பயணிக்கும் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

இதுபோக கிளைடர், ப்ரீடம் ஆகிய பெயர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது க்ரூஸராக பைக்கிற்கான பெயராக இருக்கலாம் பஜாஜ் அவெஞ்சர் பைக்கிற்க்கு மாற்றாக இந்நிறுவனம் வெளியிடப் போகும் புதிய பைக்கின் பெயராக இருக்க வாய்ப்புள்ளது. இதுபோக டிராக்கர் என்ற பைக்கின் பெயரும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த டிராக்கர் என்ற பெயர் அட்வெஞ்சராக பைக்கின் பெயராக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பஜாஜ் நிறுவனம் சிஎன்ஜி பைக்குகளை அறிமுகப்படுத்தி இந்திய ஆட்டோமொபைல் வரலாற்றில் மிகப்பெரிய புரட்சியை செய்ய திட்டமிட்டு வருகிறது. தற்போது நிறுவனத்தால் ஆண்டுக்கு 1 முதல் 1.2 லட்சம் வரையிலான சிஎன்ஜி பைக்குகளை தயாரிக்க திறன் கொண்டதாக இருக்கிறது. விரைவில் இதை 2 லட்சம் பைக்குகள் தயாரிக்கும் திறன் கொண்டதாக மாற்ற திட்டமிட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications









