100 கி.மீ மைலேஜ் தரும் பஜாஜ் சிஎன்ஜி பைக்கின் விலை இவ்வளவு தானா? வெளியான புதிய தகவல்கள்!

பஜாஜ் நிறுவனம் விரைவில் உலகின் முதல் சிஎன்ஜி பைக்கை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், தற்போது இந்த பைக்கின் ஸ்பை புகைப்படங்கள் எல்லாம் வெளியாகி உள்ளன. தற்போது இந்த பைக்கின் இன்ஜின் விபரங்கள் மற்றும் விலை விபரங்கள் குறித்த தகவல்கள் எல்லாம் நமக்கு கிடைத்துள்ளன. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

பஜாஜ் நிறுவனம் இந்தியாவின் முதல் சிஎன்ஜி பைக்கை அறிமுகப்படுத்தப் போவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்த பைக்கை குறைந்த விலை பைக்காகவும் அதிக மைலேஜ் தரும் பைக்காகவும் அறிமுகப்படுத்த திட்டமிட்டு இருந்தது. இந்த பைக் மார்க்கெட்டில் உள்ள ஸ்பிளெண்டர் பிளஸ் மற்றும் ஹோண்டா சைன் ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

bajaj cng bike

இந்தியாவில் இதுவரை நேரடியாக ஃபேக்டரியிலிருந்து கார்கள் மட்டுமே சிஎன்ஜி ஆப்ஷன்கள் உடன் விற்பனைக்கு வந்து கொண்டிருந்தன. டூவீலர்களுக்கு நேரடி ஃபேக்டரி தயாரிப்பு இல்லை என்றாலும் வெளிமார்க்கெட்டில் சிஎன்ஜி கன்வெர்ஷன் கிட்டுகள் விற்பனையில் இருந்து வந்தன. இதை சட்டப்பூர்வமாகவும் பயன்படுத்த சட்டத்தில் வழிவகை இருக்கிறது. இந்நிலையில் பஜாஜ் நிறுவனம் முதன்முதலாக இந்தியாவில் ஃபேக்டரியிலேயே சிஎன்ஜி பைக்குகளை தயாரித்து வெளியிட முடிவு செய்துள்ளது.

பஜாஜ் நிறுவனத்தை பொருத்தவரை தற்போது என்ட்ரி லெவலில் பிளாட்டினா மற்றும் சிடி ஆகிய பைக்குகளை விற்பனை செய்து வருகின்றன. இதில் அதிக மைலேஜ் இருப்பது பிளாட்டினா 100 பைக் தான். இந்த பைக் தற்போது 70 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பஜாஜ் நிறுவனம் சிஎன்ஜி பைக்குகளை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு முக்கியமான காரணம் அதிக மைலேஜ் தான்.

bajaj cng bike

இதனால் சிஎன்ஜி பைக்கில் விற்பனைக்கு வரும்போது குறிப்பிட்ட ரக என்ட்ரி லெவல் பைக்குகளிலேயே அதிக மைலேஜ் பெரும் பைக்காக இதுதான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் குறைந்தபட்சம் 100 கிலோமீட்டர் மைலேஜையாவது வழங்கும் வகையில் தான் இந்த பைக் தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து அறிவிப்புகள் எல்லாம் பின்னர் வெளியாகும்.

தற்போது பஜாஜ் நிறுவனத்திடம் ஏற்கனவே உள்ள 110சிசி இன்ஜினில் சிஎன்ஜி ஆப்ஷனை சேர்த்து விற்பனைக்கு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் 8.6 பிஎஸ் பவரையும் 9.81 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டிருக்கும்.

bajaj cng bike

இதுபோக பஜாஜ் நிறுவனத்தில் 125 சிசி இன்ஜினும் இருக்கிறது. இந்த இன்ஜினிலும் சிஎன்ஜி ஆப்ஷன் கொண்ட பைக்குகள் விற்பனைக்கு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜினில் சில மாற்றங்கள் செய்து சிஎன்ஜி ஆப்ஷன் உடன் கூடிய பைக்குகள் விற்பனைக்கு வெளியாக வாய்ப்புகள் உள்ளன. 110 மற்றும் 125 ஆகிய இரண்டு சிசி இன்ஜினிலும் சிஎன்ஜி பைக்குகள் வெளியாக வாய்ப்புகள் உள்ளன.

பஜாஜ் நிறுவனம் வெளியிடும் இந்த சிஎன்ஜி பைக்கை பொறுத்தவரை ஒரே நேரத்தில் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆகிய இரண்டு எரிபொருளும் இருக்கும் வகையிலும், இரண்டு எரிபொருளிலும் இந்த இன்ஜின் செயல்படும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரத்தியேக ஸ்விட்ச் வழங்கப்பட்டிருக்கும். இதை ஆன் செய்தால் பெட்ரோலிலும், ஆப் செய்தால் சிஎன்ஜியிலும் இயங்கும் படி இது வடிவமைக்கப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.

இந்த பைக்கில் உள்ள அம்சங்களை பொருத்தவரை 17 இன்ச் வீல் முன்பக்கம் டிஸ்க் பிரேக், பின்பக்கம் டிரம் பிரேக் முன் பக்கம் டெலஸ்கோபிக் போர்க், பின்பக்கம் மோனோஷாக் சஸ்பென்ஷன், ஏபிஎஸ் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன இது வைரலாக பரவி வருகிறது.

இந்த பைக்கின் விலையை பொறுத்தவரை பஜாஜ் நிறுவனம் உலகின் முதல் சிஎன்ஜி பைக்கை ரூபாய் 80 ஆயிரம் என்ற விலையில் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தற்போது உள்ள பெட்ரோல் பங்கை விட சற்று விலை அதிகமாக இருக்கிறது. இருந்தாலும் அதிக மைலேஜ் காரணமாக இந்த பைக்கை பலர் விரும்புவார்கள் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகின் முதல் சிஎன்ஜி பைக் இன்னும் ஒரு சில நாட்களில் விற்பனைக்கு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அறிமுகமானால் மோட்டார் பைக் உலகிலேயே மிகப்பெரிய அளவு புரட்சி ஏற்படும். ஆனால் சிஎன்ஜி கேஸ் ஸ்டேஷனை பொறுத்தவரை இந்தியாவில் முக்கிய நகரங்களில் அதிகமாக இருக்கிறது. ஆனால் சிறு சிறு நகரங்களில் இல்லை இதனால் பெரு நகரங்களில் மட்டுமே இந்த பைக்குகளையும் விற்பனை அதிகமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 19, 2024, 20:12 [IST]
English summary
Bajaj cng bike spotted testing check expected price and mileage
மேலும்... #Bajaj CNG Bike #bajaj auto #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X