இன்னும் 2 நாள் தான் இருக்குது! பஜாஜ் சிஎன்ஜி பைக்கின் முக்கிய வீடியோ வெளியானது!

பஜாஜ் நிறுவனம் வரும் 5ம் தேதி தனது முதல் சிஎன்ஜி பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது அந்த பைக்கிற்கான டீசரை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பைக்கில் உள்ள சில அம்சங்கள் குறித்த தகவல்கள் எல்லாம் இந்த டீசரில் வெளியாகியுள்ளன. இந்த பைக்கின் பெயர் குறித்த விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த டீசரில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது? இந்த பைக்கில் என்னென்ன விஷயங்களை எதிர்பார்க்கலாம் என்ற விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

பஜாஜ் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது முதல் சிஎன்ஜி பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அப்பொழுது முதல் மக்கள் மத்தியில் இந்த பைக் குறித்த மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த பைக் மாஸ் மார்க்கெட் பைக்காக குறைந்த விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

bajaj cng bike teased

இதுவரை அந்த பைக் குறித்த எந்தவித டெக்னிக்கல் தகவல்களும் வெளியாகவில்லை. பெரும்பாலும் இந்த பைக் 100 முதல் 125சிசி திறன் கொண்ட இன்ஜின் பொருத்தப்பட்ட பைக்காக இருக்கும் என்ற பேச்சு இருந்து வருகிறது. கிராமப்புறங்களில் பயன்படுத்தக்கூடிய சிம்பிளான வடிவமைப்பில் அதிக பிராக்டிகல் அம்சங்களுடன் இந்த பைக் விற்பனைக்கு அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம்.

இந்த பைக்கை பஜாஜ் நிறுவனம் ஏற்கனவே இந்திய சாலைகளில் சோதனை செய்து வந்தது. இது குறித்த ஸ்பை புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வெளியாகின. இந்த ஸ்பை புகைப்படங்களை வைத்து பார்க்கும் போது பஜாஜ் நிறுவனம் இரண்டு, மூன்று ரக பைக்குகளை இதுபோல சோதனை செய்து வருவது நமக்கு தெரிந்தது. இதில் எந்த பைக்கை அறிமுகப்படுத்தப் போகிறது என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

bajaj cng bike teased

ஆனால் இந்த பஜாஜ் நிறுவனத்தின் சிஎன்ஜி பைக் குறித்த வடிவமைப்பு வரைபடம் வெளியான போது சில தகவல்கள் நமக்கு கிடைத்தன. அதன்படி இந்த பைக்கின் மெயின் ஃப்ரேம்மில் சீட்டிற்க்கு அடியில் சிஎன்ஜி சிலிண்டரை பொருத்த இந்நிறுவனம் வடிவமைப்பை மாற்றி உள்ளது. இதற்காக மெயின் ஃப்ரேமில் வட்ட வடிவிலான பிரேஸ்களை அமைத்துள்ளது நமக்கு தெரிகிறது. இதுபோக இந்த பைக்குகளில் பெட்ரோல் டேங்கும் கூடுதலாக இருக்கிறது.

பஜாஜ் நிறுவனம் 2 விதமான வேரியண்ட்களில் தனது சிஎன்ஜி பைக்கை வெளியிடும் என்று எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருக்கிறது. அதில் ஒன்று ரக்கடான லுக்கில் இருக்கும் வகையிலும், மற்றொன்று சிம்பிளான லுக்கில் இருக்கும் வகையிலும் உருவாக்கப்பட வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.என்ன பைக் வரப்போகிறது என்பதை இன்னும் இரண்டு நாட்களுக்கு பிறகு தான் நம்மால் உறுதியாக சொல்ல முடியும்.

bajaj cng bike teased

இது குறித்து பஜாஜ் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் முதல் காட்சியாக இந்த பைக்கின் சில்லவுட் லுக் இருக்கிறது. இதை பார்க்கும் போது இந்த பைக் ஓரளவு சிம்பிளான பைக்காக வடிவமைக்கப்பட்டிருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த லுக்கில் பைக்கின் முழுமையான காட்சி நமக்கு தெளிவாக தெரியவில்லை.

அடுத்ததாக இந்த பைக்கில் சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் ஆப்ஷன்க்கு மாற்றுவதற்கான சுவிட்ச் வழங்கப்பட்டுள்ளது தெளிவாக காட்டப்படுகிறது. இதன் மூலம் பைக் சிஎன்ஜி எரிபொருள் இயங்க வேண்டுமா அல்லது பெட்ரோலில் இயங்க வேண்டுமா என்பதை ஓட்டுநர் ஒரு சுவிட்ச் மூலமே தேர்வு செய்து கொள்ள முடியும் என்பதை தற்போதே தெளிவாக காட்டிவிட்டது.

அடுத்ததாக இந்த பைக்கின் முன்பக்க லுக் நமக்கு கிடைக்கிறது. இதில் வட்ட வடிவிலான ஹெட்லைட் பொருத்தப்பட்டுள்ள தோற்றம் நமக்கு தெரிகிறது. இது எல்இடி ரக ஹெட் லைட்டா அல்லது வேறு ஹெட்லைட்ட என்பது தெரியவில்லை. ஆனால் இதன் லுக் சிம்பிளாக இருப்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. இதற்கிடையில் பஜாஜ் லோகோ ஒன்றும் காட்டப்படுகிறது. இந்த பாகம் பைக்கின் எந்த பாகம் என்ற தகவல் தெரியவில்லை.

இந்த பைக்கின் விலையை பொறுத்தவரை ரூபாய் 90,000 குறைவான விலையில் விற்பனைக்கு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சற்று அதிகமான விலையில் விற்பனைக்கு வரலாம் அதில் கூடுதலாக சில அம்சங்கள் இடம் பெற அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது. இது உலகின் முதல் சிஎன்ஜி பைக் என்பதால் இந்த பைக்கிற்கு நேரடியாக மார்க்கெட்டில் எந்த பைக்கும் போட்டிக்கு இல்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பஜாஜ் நிறுவனம் இந்த சிஎன்ஜி பைக்கை அதிகமான மக்கள் வாங்குவார்கள் என்ற அடிப்படையில் குறைந்த விலையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த பைக்கின் விற்பனை அதிகமாகும் பட்சத்தில் நிறுவனம் மட்டுமல்லாமல் மற்ற வாகன தயாரிப்பு நிறுவனங்களும் விற்பனைக்கு அறிமுகப்படுத்த ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. பெட்ரோலை விட சிஎன்ஜி விலை குறைவு என்பதால் இந்த முடிவை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எடுக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 3, 2024, 12:18 [IST]
English summary
Bajaj cng bike teased official launch in 2 days
மேலும்... #Bajaj CNG Bike #bajaj auto #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X