இந்த 5 விஷயம் தெரியாம பஜாஜ் சிஎன்ஜி பைக்கை வாங்கிடாதீங்க! பலருக்கும் தெரியாத ரகசியம்!
பஜாஜ் நிறுவனம் உலகின் முதல் சிஎன்ஜி பைக்கை நாளை அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த பைக் மீதான எதிர்பார்ப்பு இந்தியர்கள் மத்தியில் அதிகமாகி உள்ளது. இதுவரை பெட்ரோல் பைக்குகளை மட்டுமே பயன்படுத்தி வந்த இந்தியர்கள் இனி சிஎன்ஜி பைக்குகளையும் பயன்படுத்த முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில், இந்த பைக்கை வாங்கலாமா? வேண்டாமா? இதில் லாபம் இருக்குமா? இருக்காதா? என்ற பல்வேறு குழப்பம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்த பைக் குறித்து நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய டாப்5 தகவல்களை தான் இங்கே உங்களுக்காக வழங்கி உள்ளோம்.
பணம் சேமிப்பு: பஜாஜ் நிறுவனம் பைக்குகளை அறிமுகப்படுத்துவதின் முக்கிய நோக்கமே பணத்தை சேமிப்பது தான். இந்த பைக்குகளை வாங்கி பயன்படுத்துவதன் மூலம் பெட்ரோலுக்கு செலவு செய்யும் பணத்தை வாகன ஓட்டிகளால் பெரும் அளவு சேமிக்க முடியும். பெட்ரோலை விட சிஎன்ஜி விலை குறைவாக இருக்கிறது. இதனால் சிஎன்ஜி பைக்குகளை பயன்படுத்துவதால் பெட்ரோல் செலவு குறைகிறது.

இன்று பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூபாய் 100க்கும் அதிகமான விலையில் விற்பனையாகி வருகிறது. ஒரு கிலோ சிஎன்ஜி ரூபாய் 82 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இதனால் அதிக பணத்தை எரிபொருள் செலவில் மிச்சப்படுத்த முடியும். இந்தியாவில் இப்படியாக குறைவான எரிபொருள் செலவில் இயங்கும் பைக்குகளுக்கான தேவை அதிகமாக இருப்பதை உணர்ந்து கொண்ட பஜாஜ் நிறுவனம் இந்த பைக்கை அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்த செக்மென்டில் உள்ள மக்களை பிடிக்க நினைத்துள்ளது.
தினசரி பயன்பாடு: குறைந்த எரிபொருள் செலவை எதிர்பார்க்கும் மக்கள் அதிகமாக வாகனங்களை பயன்படுத்தக்கூடியவர்களாக இருப்பார்கள். இப்படியாக அவர்கள் அதிகம் பெட்ரோலுக்கு செலவு செய்ய வேண்டிய பணத்தை மிச்சப்படுத்தினால் பெரும் தொகையை மிச்சப்படுத்த முடியும் என்பதால் இப்படியான பைக்கை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், பஜாஜ் நிறுவனம் இந்த பைக்கை தினசரி பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய வடிவமைப்பில் உருவாக்கியுள்ளது.

இதனால் தினசரி அலுவலகத்திற்கு செல்லும் பயன்பாடு, லாஸ்ட் மைல் டெலிவரி தொழிலில் இருப்பவர்கள், தெருத்தெருவாக சென்று பைக்குகளிலேயே பொருட்களை வைத்து வியாபாரம் செய்பவர்கள், கலெக்ஷன் ஏஜெண்டுகள் உள்ளிட்ட பலர் எரிபொருள் செலவு மிச்சப்படுத்த இப்படியான பைக்குகளை விரும்புவார்கள் என்பதால் அவர்களுக்கு ஏற்றார் போல் தினசரி பயன்பாட்டிற்கு தகுந்த பைக்கை தான் பஜாஜ் நிறுவனம் உருவாக்கி உள்ளது.
மாசு உமிழ்வு: இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை வாகனங்களில் இருந்து வெளியேறும் மாசு அளவு தான். இதன் காரணமாக தான் ஒவ்வொரு வாகனங்களும் மாசு உமிழ்வு விஷயத்தில் எவ்வளவு உமிழ்வு வெளிப்படுத்த வேண்டும் என்ற அரசு விதிமுறை இருக்கிறது. இந்த சிஎன்ஜி பைக்குகள் பெட்ரோல் பைக்குகளை ஒப்பிடும்போது குறைவான மாசு உமிழ்வு கொண்டதாக இருக்கிறது.

விலை குறைவு: பொதுவாக கார்களில் பெட்ரோல் இன்ஜின் கார் மற்றும் சிஎன்ஜி தொழில்நுட்பம் பொருத்திய கார் என இரண்டு வகையாக பிரித்துப் பார்க்கும்போது பெட்ரோல் இன்ஜின் காரை விட சிஎன்ஜி தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட கார் அதிக விலையில் விற்பனையாகி வருகிறது. அதன் விலை பெட்ரோல் பைக்குகளை விட அதிகமான விலையில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருக்கிறது.
ஆனால் பஜாஜ் நிறுவனம் இந்த சிஎன்ஜி ரக பைக்குகளை குறைவான விலையில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக பெட்ரோல் பைக் விற்பனையாகும் விலையிலேயே சிஎன்ஜி பைக்களும் விற்பனையாக வாய்ப்பிருக்கிறது. இப்படியாக விற்பனையாகும் பட்சத்தில் பெட்ரோல் பைக்குகளை வாங்குபவர்கள் கூடுதலாக விலை கொடுத்து சிஎன்ஜி பைகளை வாங்க தேவையில்லை.
அதிக மைலேஜ்: நாம் முன்னரே சொன்னபடி பெட்ரோல் விலையை விட சிஎன்ஜி விலை குறைவாக இருக்கும் என்பது நாம் எல்லோருக்கும் தெரியும். இதனால் பணத்தை மிச்சப்படுத்த முடியும். என்பது ஒரு பக்கம் இருந்தாலும் பெட்ரோல் பைக் தரும் மைலேஜ், சிஎன்ஜி பைக் தரும் மைலேஜ் இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அப்படி ஒப்பிட்டு பார்க்கும்போது இன்னும் கூடுதல் பணத்தை சிஎன்ஜி பைக்குகள் பயன்படுத்துவதன் மூலம் சேமிக்க முடிகிறது.
உதாரணமாக பெட்ரோல் பைக்குகள் லிட்டருக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருகிறது என வைத்துக்கொண்டால் சிஎன்ஜி பைக்குகள் அதைவிட கூடுதலாக மைலேஜ் தருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இதன் காரணமாக குறைவான விலையில் எரிபொருளை போட்டு பெட்ரோலை விட அதிக மைலேஜ் தரும் வகையில் இதை பயன்படுத்த முடியும். இது நல்ல சேமிப்பை வாகன ஓட்டிகளுக்கு கொடுக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பஜாஜ் நிறுவனம் சிஎன்ஜி வாகனத்தை உலகின் முதன்முறையாக இந்தியாவில் தான் அறிமுகப்படுத்துகிறது. இந்த வாகனத்தின் பெயர் ஃப்ரீடம் 125 என அனுமாணிக்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்கள் இதன் தொழில்நுட்பத் தகவல்கள் எல்லாம் நாளை இந்த பைக் அறிமுகத்தின் போது தான் தெரியவரும். புதிதாக பைக் வாங்குபவர்கள் இந்த பைக்கின் அறிமுகத்திற்குப் பிறகு உங்கள் முடிவை எடுங்கள்.


Click it and Unblock the Notifications









