ஸ்பிளெண்டர் பைக்கை இனி யாரும் வாங்க மாட்டாங்க! சிஎன்ஜி பைக்கில் பஜாஜ் போடும் செம பிளான் இதான்!

பஜாஜ் நிறுவனம் இந்தியாவின் முதல் சிஎன்ஜி பைக்கை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளது. அதன்படி ஜூலை மாதம் 5ஆம் தேதி இந்த பைக் விற்பனைக்கு அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இன்னும் பத்து நாட்கள் தான் இருக்கும் நிலையில், இந்த பைக் மீதான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாகி உள்ளது. இந்த பைக் எப்படி இருக்க போகிறது இது என்னவெல்லாம் அம்சங்கள் கொண்ட பைக்காக இருக்க போகிறது? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருக்கும் நிலையில், இந்த பைக் குறித்த ஒரு முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

பெட்ரோல் விற்கும் விலைவாசியில் மக்களால் பெட்ரோலுக்காக செலவு செய்ய முடியவில்லை. இதற்கு மாற்றாக பலர் எலvக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்கும் முடிவை எடுத்து வருகிறார்கள். ஆனால் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை அதிகமாக இருக்கிறது. ஆரம்பத்தில் அதிக பணத்தை செலுத்த வேண்டியது இருப்பதால் அதிலும் பலருக்கு தயக்கம் இருக்கிறது. இதற்கு மாற்றாக ஏதாவது ஒன்று கிடைக்குமா என மக்கள் மத்தியில் நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பு இருந்தது.

bajaj cng 2 variants

இந்த எதிர்பார்ப்பை புரிந்து கொண்ட பஜாஜ் நிறுவனம், டூவீலர்களில் சிஎன்ஜி செக்மெண்டை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி ஏற்கனவே இருக்கும் பெட்ரோல் பைக்குகளில் சிஎன்ஜி மூலம் இயங்கும் தொழில்நுட்பத்தை உட்பகுத்தி பெட்ரோலுக்கு பதிலாக சிஎன்ஜி எரிபொருளில் அந்த பைக்குகளை இயங்க வைக்க அந்நிறுவனம் சோதனை செய்து அதில் வெற்றி பெற்றுள்ளது.

சிஎன்ஜி பைக்குகளை கமர்சியலாக தயாரித்து விற்பனைக்கு அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இதனால் சிஎன்ஜி பைக்குகளின் விலையும் பெட்ரோல் பைக்குகளில் விலையை விட பெரிய அளவில் அதிகமாக இருக்காது. அதே நேரம் சிஎன்ஜி எரிபொருள் மூலம் இது இயங்குவதால் அதிக மைலேஜ் கிடைக்கும், எரிபொருளுக்கான செலவும் குறைவாக ஆகும். இந்த அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டது முதல் மக்கள் மத்தியில் இந்த பைக் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

bajaj cng 2 variants

மக்கள் பலர் இந்த பைக் ப்ருஸர் என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகமாகும் என்ற எதிர்பார்ப்பு கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் நமக்கு புதிதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி பஜாஜ் நிறுவனம் இந்த பைக்கை ஒரே வேரியன்டாக வெளியிடப் போவதில்லை எனவும், இரண்டு வேரியண்ட்களில் இந்த சிஎன்ஜி பைக்குகள் அறிமுகமாக போகிறது எனவும் தெரியவந்துள்ளது.

இதற்கு முன்னர் பஜாஜ் நிறுவனம் புனே பகுதியில் பல்வேறு இடங்களில் இதை சிஎன்ஜி பைக் சோதனை செய்யும் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த புகைப்படங்களை ஒப்பிட்டு பார்க்கும்போது ஒவ்வொரு பைக்கும் ஒவ்வொரு விதமான டிசைன் அம்சங்களில் இருந்தது. இதில் எந்த டிசைன் கொண்ட பைக் சிஎன்ஜி வெர்ஷன் பைக்காக வெளியாக போகிறது என்ற சந்தேகம் பலருக்கு இருந்தது.

bajaj cng 2 variants

இந்நிலையில் அந்நிறுவனம் தற்போது இந்த பைக்கை இரண்டு விதமான வேரியண்ட்களில் வெளியிட திட்டமிட்டுள்ளதால் சோதனை செய்யப்பட்ட பைக்குகள் இரண்டு விதமான வேரியண்ட்கள் உள்ள பைக்குகளாக இருக்கலாம் என்ற பதில் பலருக்கு கிடைத்துள்ளது. இதன் மூலம் ஒன்று குறைந்த விலையில் மக்கள் அதிகம் விரும்பும் அதிக மைலேஜ் கொண்ட பைக்காகவும், அதே நேரம் மற்றொரு வேரியண்ட் அதிக அம்சங்கள் நிறைந்த பைக்காகவும், அதிக பெர்ஃபார்மென்ஸ் கொண்ட பைக்காகவும் இருக்க வாய்ப்பு இருக்கிறது.

இப்படியான இரண்டு வேரியண்ட்களை அறிமுகப்படுத்தும் போது இரண்டு விதமான வாடிக்கையாளர்களையும் இந்த நிறுவனத்தால் கவர் முடியும். அதிக பெர்ஃபார்மென்ஸ் மற்றும் அதிக அம்சங்கள் நிறைந்த பைக்குகளை விரும்பும் வாடிக்கையாளர்களும் இந்த சிஎன்ஜி பைக்கை வாங்குவார்கள் அதே நேரம் அதிக மைலேஜ் மட்டும் எரிபொருள் செலவு குறித்த சிக்கனத்தை முதன்மையாக கருதும் வாடிக்கையாளர்களும் இது சிஎன்ஜி பைக்கை வாங்குவார்கள்.

இதன் மூலம் பஜாஜ் நிறுவனத்தின் வருமானம் உயரும் என்ற காரணத்திற்காக இந்த திட்டத்தை அந்நிறுவனம் மேற்கொண்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் அறிமுகமாகும் குறைந்த விலை சிஎன்ஜி பைக் ரூபாய் 80 ஆயிரம் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் அறிமுகமாக ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. ஹீரோ நிறுவனத்தின் ஸ்பிளென்டர் பைக்கிற்கு போட்டியாக இந்த பைக் அறிமுகமாக வாய்ப்புள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பஜாஜ் நிறுவனத்தின் சிஎன்ஜி பைக்குகள் மீது மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இது எவ்வளவு மைலேஜ் கொடுக்கும் எப்படியான வடிவமைப்புகள் இருக்கப்போகிறது? என்னென்ன அம்சங்கள் எல்லாம் இருக்கும்? இதன் பெர்ஃபார்மென்ஸ் எப்படி இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் இதில் இரண்டு வேரியண்ட் வருவதாக வெளியாகி உள்ள செய்தி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 25, 2024, 17:14 [IST]
English summary
Bajaj cng bike two variants launch details
மேலும்... #Bajaj CNG Bike #bajaj auto #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X