நாளை அறிமுகமாகிறது பெட்ரோல்-சிஎன்ஜி ரெண்டிலும் ஓடும் பைக்.. இந்த பெயரைதான் அதுக்கு வைக்க போறாங்களா!!

உலகமே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் உலகின் முதல் சிஎன்ஜி பைக் (CNG Bike) நாளைய தினம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த பெருமையை நமது பஜாஜ் நிறுவனமே சூடிக் கொள்ள இருக்கின்றது. நாளையே அது பைக்கின் விலை, சிறப்பம்சங்கள் மற்றும் பெயர் உள்ளிட்ட அனைத்து முக்கிய விபரங்களையும் அறிவிக்க இருக்கின்றது. இந்த நிலையிலேயே இந்த சிஎன்ஜி பைக்கிற்கு பஜாஜ் நிறுவனம் ஃப்ரீடம் 125 (Freedom 125) என பெயர் சூட்ட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதை உறுதிப்படுத்தக் கூடிய படமே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. அந்த படத்தில் பஜாஜ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் புதிதாக ஃப்ரீடம் 125 எனும் பெயர் சேர்க்கப்பட்டு இருப்பதற்கான தகவலே அடங்கி உள்ளது. ஆகையால், நாளைய தினம் அறிமுகம் செய்யப்பட இருக்கும் பஜாஜ் சிஎன்ஜி பைக், ஃப்ரீடம் 125 எனும் பெயரில் விற்பனைக்கு வரும் என தெரிய வந்திருக்கின்றது.

Bajaj freedom 125 dual fuel bike

இந்த பைக் சிஎன்ஜியால் மட்டுமல்ல பெட்ரோலிலும் ஓடும். இதற்காக தனிதனி சேகரிப்பு கலன்கள் இந்த பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றது. சிஎன்ஜி-யை நிரப்பிக் கொள்ள தனி சிலிண்டரும், பெட்ரோலை நிரப்பிக் கொள்ள ஃப்யூவல் டேங்கும் இந்த பைக்கில் வழங்கப்பட்டிருக்கும். இதுமாதிரியான அம்சத்துடன் உலகில் வேற எங்குமே பைக் இதுவரை தயாரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதனால்தான் உலகமே தற்போது தன்னுடைய கவனத்தை பஜாஜ் பக்கம் திருப்பி இருக்கின்றது. பஜாஜின் இந்த தயாரிப்பை நாளைய தினம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியே அறிமுகம் செய்து வைக்க இருக்கின்றார். பஜாஜ் சிஎன்ஜி பைக்கிற்கு இந்தியர்கள் மத்தியில் அமோகமான வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Bajaj freedom 125

குறிப்பாக, இரண்டு சக்கர வாகனங்கள் சார்ந்து வருமானம் ஈட்டி வருவோரிடையே இதற்கு பேராதரவுக் கிடைக்கும் என யூகிக்கப்பட்டு உள்ளது. பெட்ரோல் லிட்டர் ஒன்றே தற்போது ரூ. 100க்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது. விரைவில் இதன் விலை உயர்வதற்கான சாத்தியக் கூறுகளே உள்ளன. இதுபோன்று அதிகபட்ச செலவீணத்தில் இருந்து விலக்களிக்கக் கூடிய வாகனமாகவே ஃப்ரீடம் 125 இருக்கப் போகின்றது.

இது ஒரு கிலோ சிஎன்ஜிக்கே 100 கிமீ வரையில் மைலேஜ் தரும் என கூறப்படுகின்றது. ஆனால், அதிகாரப்பூர்வமான இதன் மைலேஜ் திறன் பற்றிய விபரங்கள் அறிவிக்கப்படவில்லை. நாளைய தினம் இதுபற்றிய தகவலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. பஜாஜின் சமீபத்திய டீசிர் படங்கள் வாயிலாக ஃப்ரீடம் 125 பைக்கில் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி முறைகளை தேர்வு செய்வதற்கான சுவிட்ச் வழங்கப்படும் என்பது தெரிய வந்திருக்கின்றது.

Bajaj freedom 125 cng bike

Source: Rushlane ஆகையால், தேவைக்கேற்ப தேவைப்படுகின்ற மோடில் மாற்றி ஃப்ரீடம் 125 பைக்கை பயன்படுத்திக் கொள்ள முடியும். மற்ற டூ-வீலர் மாடல்களைப் போலவே பஜாஜ் ஃப்ரீடம் 125 பைக்கும் பலவிதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்க உள்ளது. அதேசமயம், வழக்கமான பைக் மாடல்களைக் காட்டிலும் சற்றே தனித்துவமான தோற்றத்தில் இந்த பைக் இருக்கும் என தெரிகின்றது.

குறிப்பாக, இதன் இருக்கை மூன்று பேர்கூட அமர்ந்து செல்லாம் என கூறும் அளவிற்கு நீளமானதாக இருக்கும் என கூறப்படுகின்றது. இருக்கைக்கு அடியிலேயே சிஎன்ஜி சிலிண்டர் நிலை நிறுத்தப்பட்டு இருப்பதால் அதன் இருக்கை வழக்கமானதைவிட நீளமானதாக உள்ளது. அதேவேளையில், ஃப்யூவல் டேங்க் மிகவும் குட்டியானதாக இருக்கும் என தெரிகின்றது.

ஃப்யூவலுக்கு அதிகம் முக்கியத்துவம் வழங்கப்படாததன் விளாகவே குட்டியான ஃப்யூவல் ஃப்ரீடம் 125 பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது. பெயரை வைத்து பார்க்கையில் ஃப்ரீடம் 125 பைக்கில் 125 சிசி எஞ்சினே எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இது வழக்கமான 125 சிசி மோட்டாரைக் காட்டிலும் சற்றே குறைவான திறனை வெளியேற்றக் கூடியதாக இருக்குமாம்.

அதேநேரத்தில் 110 சிசி பைக்குகளுக்கு இணையான திறனையே அது வெளியேற்றும் என கூறப்படுகின்றது. இந்த பைக்கில் டயர் ஹக்கர், டிஸ்க் பிரேக்குகள், வட்ட வடிவ ஹெட்லைட், டியூப்லெஸ் டயர்கள், அலாய் வீல்கள் மற்றும் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆகியவை எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் விலைகள் நாளையே அறிவிக்கப்பட இருக்கின்றது. ரூ.90,000 முதல் ரூ.1 லட்சம் வரையிலான விலையிலேயே இந்த பைக் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பஜாஜ் ஃப்ரீடம் 125 அறிமுகமான பின்னர் அது மோட்டார் சைக்கிள் துறையில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டும் என யூகிக்க முடிகின்றது. குறிப்பாக, ஹோண்டா ஆக்டிவா மற்றும் ஹீரோ ஸ்பிளெண்டர் முன்னணி டூ-வீலர்கள் மாடல்களுக்கு பெருத்த சவாலை இது ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, July 4, 2024, 17:20 [IST]
English summary
Bajaj confirms the worlds first cng bike name freedom 125 cng
மேலும்... #Bajaj CNG Bike #bajaj auto #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X