தள்ளி போகிறது 100 கிமீ மைலேஜ் தரும் பைக்கின் அறிமுகம்.. எத்தனை நாட்களுக்கு தள்ளி போட்டிருக்காங்க!
இந்தியர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளில் ஒன்றாக பஜாஜ் சிஎன்ஜி (Bajaj CNG) பைக் இருக்கின்றது. இந்த பைக்கின் அறிமுகம் ஜூன் மாதம் 18 ஆம் தேதி அரங்கேற இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. எனவே, இதன் வருகையை எதிர்நோக்கி மிகுந்த ஆர்வத்துடன் இந்தியர்கள் பலர் காத்திருக்கத் தொடங்கின்றனர். ஆனால், எதிர்பார்ப்பிற்கே ஆப்பு வைக்கக் கூடிய தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆமாங்க, இந்த நாளில் பஜாஜ் சிஎன்ஜி பைக் அறிமுகமாகப் போவதில்லை என்கிற தகவலே தற்போது வெளியாகி இருக்கின்றது.
பஜாஜ் நிறுவனம் சிஎன்ஜி பைக் அறிமுகத்தை தற்போது தள்ளிப் போட்டிருக்கின்றது. ஜூலை 17 ஆம் தேதிக்கே அதன் அறிமுகம் தள்ளிப்போடப்பட்டு இருப்பதாக தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் பஜாஜ் சிஎன்ஜி பைக்கிற்காக மிகுந்த ஆவலுடன் காத்திருந்தவர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

பஜாஜ் நிறுவனத்தின் இந்த சிஎன்ஜி பைக் பெட்ரோலிலும் ஓடும் என்பது குறிப்பிடத்தகுந்து. இதையே இந்த பைக் பற்றி சமீபத்தில் வெளியாகிய ப்ளூ பிரிண்ட்டும் தெரிவிக்கின்றன. எனவே இதன் வருகை இந்திய இரண்டு சக்கர வாகன பிரிவில் மிகப் பெரிய புரட்சியைச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக, இதன் மைலேஜ் திறனுக்காகவே பலர் இந்த பைக்கை வாங்கிக் குவிப்பார்கள் என தெரிகின்றது. இது ஒரு கிலோ சிஎன்ஜிக்கே 80 கிமீட்டருக்கும் அதிகமான மைலேஜை வழங்கும் என கூறப்படுகின்றது. ஒரு சில தகவல்கள் இந்த பைக் 100 கிமீ வரை மைலேஜ் கொடுக்கவும் செய்யலாம் என கூறப்படுகின்றது.
ஆனால், துள்ளியமான தகவல்கள் இதுகுறித்து வெளியாகவில்லை. சிஎன்ஜி நிரப்புவதற்கான துவாரம் முன்பக்க முனையில் இடம் பெற்றிருக்கும். ஆனால், பெட்ரோல் டேங்க்கிற்கு பெரிய அளவில் முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. அது கொஞ்சம் சிறியதாகவே உள்ளது. சிஎன்ஜி டேங்கிற்கே அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இதன் பயனாளிகள் சிஎன்ஜியையே அதிகம் விரும்புவார்கள் என்கிற நோக்கிலேயே பெட்ரோல் டேங்கிற்கு அதிகம் முக்கியத்துவம் வழங்கப்படவில்லை.
பெட்ரோல் டேங்க் வழக்கமான பெட்ரோல் டூ-வீலர்களில் இருப்பதைப் போலவே இருக்கும் அதை நிரப்பும் வாய் பகுதியும் வழக்கமான பைக்குகளில் இருப்பதைப் போலவே இருக்கும். சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் என இரண்டிலும் ஓடும் திறன் கொண்ட பைக் இதுவென்பதால் இதன் லுக் சற்றே மாறுபட்டு காட்சியளிக்கும்.
குறிப்பாக, இதன் நீளம் வழக்கமான பைக்குகளின் நீளத்தைவிட சற்று பெரியதாகவே இருக்கும் என தெரிகின்றது. இதன் எஞ்சின் விவரங்கள் வெளியிடப்படவில்லை. இருப்பினும், இதில் ஐந்து வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்ட 125 சிசி எஞ்சினே பயன்படுத்தப்பட இருப்பதாகக் கூறப்படுகின்றது.
பஜாஜ் சிஎன்ஜி பைக் இரண்டு வேரியண்டுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஒரு வேரியண்ட் நகர்ப்புற பயன்பாட்டிற்கானதாகவும், மற்றொன்று முரட்டுத்தனமான பதிப்பாக இருக்கும் என தெரிகின்றது. இரண்டாவது ஒன்று குறிப்பாக ஆஃப்-ரோடு பயன்பாட்டிற்கானதாக இருக்கும் என கூறப்படுகின்றது. குறிப்பாக, சிஎன்ஜி பைக்குகளின் வருகையால் ஏழை மற்றும் எளிய மக்கள் அதிக பலன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. பெட்ரோலுக்கு 100 ரூபாய் செலவு செய்ய வேண்டும் எனில் சிஎன்ஜி-க்கு ரூ.50க்கும் குறைவாகவே செலவு செய்தால் போதுமானது. எனவே நல்ல லாபத்தில் பெற முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இப்போதும் குறிப்பிட்ட பகுதிகளில் சிஎன்ஜி நிலையங்களின் தட்டுப்பாடு உள்ளது. எனவே இந்த விஷயத்தில் மட்டும் பஜாஜ் சிஎன்ஜி பைக் பயனாளிகளில் சிக்கலைச் சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. சுமார் ரூ.80,000 எக்ஸ்ஷோரூம் விலையிலேயே பஜாஜ் சிஎன்ஜி பைக் எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் அறிமுகத்திற்கு பின்னரே எதிர்வினைகள் மற்றும் பைக்கின் செயல்திறன் உள்ளிட்ட விபரங்கள் தெரிய வரும்.


Click it and Unblock the Notifications








