இன்னும் விலை குறைவான சிஎன்ஜி பைக்கை விற்பனைக்கு களமிறக்க போகுதா பஜாஜ்! மார்க்கெட்டை ஒரு வழி பண்ண போறாங்க!

பஜாஜ் (Bajaj) நிறுவனம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஃப்ரீடம் 125 (Freedom 125) எனும் பைக் மடாலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது சிஎன்ஜி (CNG)-இல் இயங்கும் மோட்டார்சைக்கிள் ஆகும். இதுவே உலகின் முதல் சிஎன்ஜி-யில் இயங்கும் பைக் மாடல் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த பைக் ஏற்கனவே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுவிட்ட நிலையில், இப்போது மீண்டும் ஃப்ரீடம் சிஎன்ஜி பைக்கை பஜாஜ் சோதனையோட்டத்திற்கு உட்படுத்துவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஃப்ரீடம் பைக் ஒன்று மறைப்புகளுடன் சாலையில் உலா வரும் படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

சோதனையோட்டத்துக்கு உட்படுத்தப்பட்டிருப்பது மிக மிக மலிவான விலையில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கும் ஃப்ரீடம் பைக் மாடல் என கூறப்படுகின்றது. இப்போது விற்பனையில் இருக்கும் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக், ரூ. 95 ஆயிரம் என்கிற ஆரம்ப விலையில் இருந்தே விற்பனைக்குக் கிடைக்கின்றது.

Bajaj freedom 125 cng

இதைவிட குறைவான விலையிலேயே ஃப்ரீடம் பைக்கை விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் பஜாஜ் களமிறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ வார்த்தையும் பஜாஜ் தரப்பிலிருந்து இதுவரை வெளியாகவில்லை. விரைவில் இதுபற்றிய தகவலை பஜாஜ் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சோதனை செய்யப்பட்ட ஃப்ரீடம் 125 முழுமையாக மறைக்கப்பட்டு இருந்ததால், அதுபற்றிய தகவலை மிக துள்ளியமாக வழங்க முடியவில்லை. அதேவேளையில், மறைப்புகளுக்கு இடையிலும் சில முக்கிய தகவல்கள் இந்த பைக் பற்றிய தெரிய வந்திருக்கின்றது. இப்போது விற்பனையில் இருக்கும் ஃப்ரீடம் 125 பைக்கில் எல்இடி ஹெட்லைட்டே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

Affordable bajaj freedom cng

Source: car&bike ஆனால், சோதனையோட்டம் செய்யப்பட்ட வாகனத்தில் ஹாலோஜன் பைக் இடம் பெற்றிருப்பதைப் போல் தெரிகின்றது. விலை குறைப்பிற்காகவே இந்த சிறப்பம் குறைப்பு வேலையை பஜாஜ் செய்திருக்கின்றது. இதுபோன்று இன்னும் பல விலைமிக்க அம்சங்களை நீக்கி அதற்கு பதிலாக விலை குறைவான, அதேவேளையில், தரமான அம்சங்களை இந்த பைக்கில் பஜாஜ் சேர்த்திருக்கும் என நம்பப்படுகின்றது.

குறிப்பாக, டிஸ்க் பிரேக்குகளுக்கு பதிலாக டிரம் பிரேக்கே இதில் வழங்கப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தொடர்ந்து, செலவுக் குறைப்பின் மற்றொரு யுக்தியாக இந்த பைக்கை டூயல்-டோன் வண்ணங்களுக்கு பதிலாக, சிங்கிள் நிறத்தாலேயே அலங்கரித்திருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. தொடர்ந்து, இதன் சஸ்பென்ஷன் செட்-அப்பிலும் மாற்றம் செய்யப்பட்டிருப்பதை காண முடிகின்றது.

Bajaj freedom cng

மலிவு விலைக் கொண்ட ஃபோர்க்கே இந்த பைக்கில் எதிர்பார்க்கப்படுகின்றது. இதுதவிர, பைக்கின் முன் மட்குவார்டும் மிகவும் எளிமையான வடிவமைப்பைக் கொண்டிருக்கின்றது. இதன் வாயிலாகவே இந்த ஃப்ரீடம் 125 மிக மிக குறைவான விலையில் விற்பனைக்கு வரும் என நம்பப்படுகின்றது. மேலும், இந்த பைக்கில் ப்ளூடூத் இணைப்பு இல்லாத இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரே இடம் பெற இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

ஆகையால், கட்டாயம் தற்போது சோதனையோட்டம் செய்யப்பட்டிருக்கும் ஃப்ரீடம் 125 குறைவான விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். ஆனால், பிரேம், சிஎன்ஜி சிலிண்டர் மற்றும் எஞ்சின் உள்ளிட்டவற்றில் எந்த மாற்றமும் இருக்காது என கூறப்படுகிறது. பஜாஜ் ஃப்ரீடம் 125 பைக்கில் 125 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8,000 ஆர்பிஎம்மில் 9.3 பிஎச்பி பவரையும், 6,000ஆர்பிஎம்மில் 9.7 என்எம் டார்க் ஆற்றலையும் வெளியேற்றும். இந்த எஞ்சின் உடன் ஐந்து வேக கியர்பாக்ஸே இணைக்கப்பட்டுள்ளது. பஜாஜ் ஃப்ரீடம் சிஎன்ஜி பைக்கின் மிகவும் மலிவு விலையில் ஒரு சில மாதங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.94,995 எக்ஸ்ஷோரூம் விலையுள்ள ஃப்ரீடம் சிஎன்ஜி பைக்கின் அடிப்படை மாடலை விட இது சற்று குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக, இந்த மாற்றங்கள் பஜாஜ் தனது சிஎன்ஜி பைக்கை பட்ஜெட் உணர்வுள்ள நுகர்வோருக்கு இன்னும் அணுகக்கூடியதாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் அத்தியாவசிய அம்சங்களையும் செயல்திறனையும் பராமரிக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சிஎன்ஜி வாகனங்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே மலிவான விலையில் சிஎன்ஜி பைக்கை விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் பஜாஜ் களமிறங்கி இருக்கின்றது. வெகு விரைவிலேயே இந்த விலை குறைவான ஃப்ரீடம் பைக் விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், துள்ளியமான நாள் பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை.

More from DriveSpark

Article Published On: Friday, August 9, 2024, 21:35 [IST]
English summary
Bajaj developing budget friendly variant of freedom 125 cng
மேலும்... #bajaj auto #Bajaj CNG Bike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X