இந்தியாவில் பாதி விலையில் விற்பனை செய்யப்படும் பஜாஜ் பைக்... நாம ரொம்ப கொடுத்து வெச்சவங்க!!

பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனம் அதன் டோமினார் 250 மோட்டார்சைக்கிளை பிரேசில் நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் இந்த பைக் பிரேசிலில் ரூ.3.50 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் விற்பனையில் உள்ள டோமினார் 250 பைக்கிற்கும், பிரேசிலில் விற்பனையை துவங்கியுள்ள டோமினார் 250 பைக்கிற்கும் இடையே ஏதேனும் வேறுப்பாடுகள் உள்ளனவா என்பதையும், பிரேசிலில் எந்த பகுதியில் இந்த மோட்டார்சைக்கிள் உற்பத்தி செய்யப்பட உள்ளது என்பதையும் பற்றி விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியாவை போன்று உலகின் மிக பெரிய மார்க்கெட்டாக விளங்கும் நாடு பிரேசில் எனலாம். பொருளாதாரத்திலும் நம் இந்தியாவுக்கும், பிரேசிலுக்கும் இடையே பெரியதாக வித்தியாசம் கிடையாது. இதன் காரணமாகவே, சில இந்திய தனியார் நிறுவனங்கள் பிரேசிலில் தங்களது மார்க்கெட்டை விரிவுப்படுத்தியுள்ளன. அந்த நிறுவனங்களுள் ஒன்றுதான், பஜாஜ் ஆட்டோ ஆகும்.

dominar 250 launched in brazil

இந்தியாவில் புனேவில் தொழிற்சாலையை அமைத்து செயல்பட்டுவரும் பஜாஜ், அதன் பல்சர், டோமினார் உள்ளிட்ட மோட்டார்சைக்கிள்களை பிரேசில் நாட்டில் அறிமுகம் செய்துள்ளது. அந்த வரிசையில் தற்போது பஜாஜ் டோமினார் 250 மோட்டார்சைக்கிள் பிரேசிலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த 2024ஆம் வருடத்தில் பிரேசில் நாட்டில் பஜாஜ் அறிமுகம் செய்யும் 4வது மோட்டார்சைக்கிள் இதுவாகும்.

பஜாஜின் மற்ற மோட்டார்சைக்கிள்களை போன்று, டோமினார் 250 பைக்குகளும் பிரேசில் நாட்டில் அசெம்பிள் செய்யப்பட உள்ளன. அதாவது, பைக்கின் பாகங்கள் புனேவில் உற்பத்தி செய்யப்பட்டு, பிரேசிலுக்கு கொண்டு சென்று அங்கு முழு பைக்காக உருவாக்கப்படும். இதற்காக, பிரேசிலில் மெனாஸ் என்கிற பகுதியில் அசெம்பிள் தொழிற்சாலையை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கொண்டுள்ளது.

dominar 250 launched in brazil

இவ்வாறு, உள்நாட்டிலேயே அசெம்பிள் செய்யப்படுவதால் பைக்கின் விலையை பஜாஜ் நிறுவனத்தால் குறைவாக நிர்ணயிக்க முடியும். பிரேசிலில் டோமினார் 250 பைக்கின் விலை 22,500 ரியலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ஏறக்குறைய ரூ.3.5 லட்சம் ஆகும். பிரேசில் நாட்டில் பஜாஜ் டோமினார் பைக்குகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்தியாவில் விற்பனையில் இல்லாத டோமினார் 200 மற்றும் டோமினார் 160 பைக்குகள் கூட பிரேசிலில் விற்பனையில் உள்ளன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்தியாவில் டோமினார் 250 மற்றும் டோமினார் 400 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. பிரேசில் நாட்டில் ரேசிங் சிவப்பு மற்றும் ஸ்பார்க்ளிங் கருப்பு என இரு விதமான பெயிண்ட் ஆப்ஷன்களில் இந்த பைக் விற்பனை செய்யப்பட உள்ளது.

இந்தியாவில் கூடுதலாக சிட்ரஸ் ரஷ் என்கிற பெயிண்ட் ஆப்ஷனிலும் டோமினார் 250 விற்பனை செய்யப்படுகிறது. தோற்றம், தொழிற்நுட்ப அம்சங்கள் மற்றும் தரம் என அனைத்திலும் டோமினார் 250 ஆனது பிரேசிலில் விற்பனையில் உள்ள மற்ற 250சிசி பைக்குகளை காட்டிலும் சிறந்ததாக விளங்குகிறது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் டோமினார் 250 பைக் உடன் ஒப்பிடுகையில், பெரியதாக எந்த வித்தியாசமும் இல்லை.

dominar 250 launched in brazil

டோமினார் 250 பைக்கில் 248.7சிசி என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 27 எச்பி மற்றும் 23.5 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இதனுடன், அசிஸ்ட் & ஸ்லிப்பர் க்ளட்ச்சும் இந்த பைக்கில் உள்ளது. டோமினார் 250 பைக் என்ஜினின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், இந்த என்ஜின் சிஸ்டத்தில் லிக்யுடு கூலிங், ட்யூயல் ஓவர்ஹெட் காம்ஷாஃப்ட்ஸ் மற்றும் எலக்ட்ரானிக் ஃப்யுல் இன்ஜெக்‌ஷன் உள்ளிட்டவை இடம்பெறுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிரேசிலில் டோமினார் 400 பைக் ஏற்கனவே விற்பனையில் உள்ளது. அதனை தொடர்ந்து தற்போது டோமினார் 250 பைக்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், பிரேசிலில் பஜாஜின் விற்பனை மேலும் அதிகரிக்க உள்ளது. இதற்கேற்ப பிரேசில் நாட்டில் சேல்ஸ் & சர்வீஸ் நெட்வொர்க்கை விரிவுப்படுத்துவதிலும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தீவிரமாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 21, 2024, 11:58 [IST]
English summary
Bajaj dominar 250 launched in brazil check price all details here
மேலும்... #bajaj auto
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X