தமிழ்நாடு லிஸ்டலயே இல்ல! பஜாஜ் இப்படி ஒரு விஷயத்தை பண்ணும்னு யாருமே எதிர்பார்க்கல!
பஜாஜ் நிறுவனம் இந்தியாவில் முதல் சிஎன்ஜி பைக்கை அறிமுகப்படுத்தி விற்பனை செய்து வருகிறது. குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே இந்த பைக்குகள் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த பைக்குகள் கிடைக்கும் நகரங்களின் எண்ணிக்கையை நிர்வணம் ஆகிவிட்டது. தற்போது 88 நகரங்களில் புதிதாக இந்த பைக்குகள் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது குறித்த விபரங்களை காணலாம் பாருங்கள்.
பஜாஜ் நிறுவனம் இந்தியாவின் முதல் சிஎன்ஜி பைக்காக ஃபிரீடம் 125 என்ற பைக்கை விற்பனைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக் அறிமுகமாகும் போது குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே இந்த பைக்கை விற்பனைக்காக அறிமுகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் படிப்படியாக இதன் விற்பனை விரிவாக்கம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த சுதந்திர தினத்தை முன்னிட்டு 78 புதிய நகரங்களில் இந்த பைக்கை விற்பனைக்காக அறிமுகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே 10 நகரங்களில் விற்பனையாகி வரும் நிலையில் தற்போது கூடுதலாக 78 நகரங்கள் இணைந்து, மொத்தம் 88 நகரங்களில் இந்த பைக் தற்போது விற்பனையாகி வருகிறது. இந்த பைக்கிற்கு மக்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கிறது. உலகின் அதிக மைலேஜ் தரும் பைக்காக இந்த பைக் இருப்பதால் பலன் விரும்பி வாங்கி வருகிறார்கள். இந்த பைக் ரூ95,000 என்ற ஆரம்ப விலையில் விற்பனையாகி வருகிறது.
தற்போது 78 நகரங்களில் புதிதாக இந்த பைக் விரிவுபடுத்த போவதாக அறிவிப்பு வெளியான நிலையில், இந்த நகரங்கள் குறித்த பட்டியல்கள் எல்லாம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி டெல்லி, உபி மேற்கு, ஹரியானா, குஜராத், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, உள்ளிட்ட பகுதிகளில் இந்த பைக்கை விற்பனைக்காக அறிமுகப்படுத்த போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் ஒரு நகரம் கூட தமிழகத்தில் இல்லை என்பது வருத்தமான செய்தி தான்.
| Region | Dealer City | Region | Dealer City |
| Delhi | Delhi | Gujarat | Himatnagar |
| UP West | Noida | Gujarat | Mehsana |
| UP West | Ghaziabad | Gujarat | Nadiad |
| UP West | Sahibabad | Gujarat | Navasari |
| Haryana | Faridabad | Gujarat | Palanpur |
| Gujarat | Ahmedabad | Gujarat | Patan |
| Gujarat | Anand | Gujarat | Radhanpur (M) |
| Gujarat | Ankleshwar | Gujarat | Rajkot |
| Gujarat | Baroda | Gujarat | Sanand |
| Gujarat | Bhavnagar | Gujarat | Surat |
| Gujarat | Bhuj | Gujarat | Surendranagar |
| Gujarat | Dabhoi | Gujarat | Vapi |
| Gujarat | Dahod | Karnataka | Bangalore |
| Gujarat | Gandhidham | Karnataka | Davangere |
| Gujarat | Godhara | ||
பஜாஜ் நிறுவனத்தின் ஃபிரீடம் 125 பொருத்தவரை 125 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆகிய இரண்டு எரிபொருளும் இயங்கும் திறன் கொண்டது. இந்த பைக் 9.5 பிஎஸ் பவரையும் 9.72 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் சீட்டுக்கு கீழே சிஎன்ஜி சிலிண்டர் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த பைக் 11 விதமான பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 7 விதமான கலர் ஆப்ஷன்களில் இந்த பைக் விற்பனையாகி வருகிறது. இந்த பைக்கை தற்போது ஆன்லைன் மூலமாகவோ அல்லது அருகில் உள்ள டீலர்ஷிப் மூலமாகவோ புக் செய்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. முதலில் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் தான் இந்த பைக்கின் டெலிவரி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| Region | Dealer City | Region | Dealer City |
| Karanataka | Mangalore | Kerala | Kozhikode |
| Karanataka | Mysore | Kerala | Nedumangad |
| Karanataka | Shimoga | Kerala | Trichur |
| Karanataka | Hubli | Kerala | Traivandrum |
| Karanataka | Belgaum | Kerala | Alleppey |
| Karanataka | Kolar | Kerala | Alwaye |
| Karanataka | Sagar | Kerala | Tirur |
| Karanataka | Gulbarga | Maharashtra | Ahmednagar |
| Kerala | Kochi | Maharashtra | Boisar |
| Kerala | Kottayam | Maharashtra | Chinchwad |
| Kerala | Quilon | Maharashtra | Ichalkaranji |
| Kerala | Thodupuzha | Maharashtra | Karad |
| Kerala | Cannanore | Maharashtra | Kolhapur |
| Kerala | Kasaragod | Maharashtra | Kopergaon |
அடுத்த காலாண்டுக்குள் இந்த பைக் இந்தியா முழுவதும் விற்பனைக்கு வந்து விடும் என்று எதிர்பார்ப்பும் இருக்கிறது. இந்த பைக் மொத்தம் மூன்று விதமான வேரியண்ட்களில் விற்பனையாகி வருகிறது. ரூபாய் 95,000 விலையில் பேஸ் வேரியண்டையும், ரூ1.05 லட்சம் என்ற விலையில் மிட் வேரியண்டும், ரூபாய் 1.10 லட்சம் டாப் வேரியண்டும் விற்பனையாகி வருகிறது. இந்த பைக் அதிக மைலேஜ் தரும் என்பதால் மக்கள் பலர் விரும்பி வாங்க ஆர்வமாக இருக்கிறார்கள்
இந்த பைக் ஒருமுறை சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் ஆகிய இரண்டையும் நிரப்பி கொண்டால் 330 கிலோமீட்டர் வரை பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சிஎன்ஜி-ல் மட்டும் ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 100 கிலோ மீட்டர் மைலேஜ் தருகிறது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 65 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தரும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
பஜாஜ் நிறுவனத்தின் சிஎன்ஜி பைக்கை பொறுத்தவரை இந்தியாவின் பிரபலமான பைக்காக மாறி வருகிறது. இந்த பைக் தற்போது இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டாலும், தமிழகத்திற்கு இதுவரை இந்த பைக் வரவில்லை. ஒருவேளை இந்த பைக் தமிழகத்திற்கு வந்தால் இதன் விற்பனை அதிகமாகும் என எதிர்பார்க்கலாம். தமிழகத்தில் இந்த பைக்கிற்கான தேவை அதிகமாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பஜாஜ் நிறுவனம் இந்த பைக்கின் தயாரிப்பாளரை பொருத்தே ஒவ்வொரு நகரங்களாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த பைக்கிற்கு நல்ல வரவேற்பு இருப்பதால் அதிக காத்திருப்பு காலம் வந்து விடக்கூடாது என்பதற்காக இப்படியான இடத்தை கையாளுகிறது. தயாரிப்பு எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க நகரங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விரைவில் இந்த பைக் விரைவில் தமிழகத்திற்கும் வரும்.


Click it and Unblock the Notifications








