6000 பேர் இந்த பைக்கை புக் பண்ணிட்டாங்க! ஷோரூம்ல ஏற்கனவே கூட்டம் குவியுது! நீங்க போகலயா?

பஜாஜ் நிறுவனம் உலகின் முதல் சிஎன்ஜி பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், இந்த பைக்கிற்கான புக்கிங் தற்போது குவிந்து வருகிறது. பைக்கிற்கான புக்கிங் துவங்கப்பட்ட ஒரே வாரத்தில் 6000 பேர் இந்த பைக்கை புக் செய்துள்ளதாக அந்நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கிடையில் இந்த பைக் அறிமுகமாகி உள்ள நிலையில், இதன் புக்கிங் விபரங்கள் மற்றும் அனைத்து தகவல்களையும் காணலாம் வாருங்கள்.

பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் பெட்ரோலுக்கு மாற்றாக வேறொரு எரிபொருள் மூலம் இயங்கும் வாகனத்திற்கான தேவை அதிகரித்து உள்ளது. இதை புரிந்து கொண்ட பஜாஜ் நிறுவனம் உலகில் முதல் சிஎன்ஜி பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த பைக் ஒரே நேரத்தில் சிஎன்ஜி எரிவாயு மூலமோ அல்லது பெட்ரோல் மூலமா இயங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

bajaj freedom 125 cng bike booking

இந்த பைக்கை பஜாஜ் நிறுவனம் கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. ரூபாய் 95,000 என்று ஆரம்ப விலையில் இந்த பைக் இந்தியாவில் அறிமுகமானது. இந்த பைக்கை பயன்படுத்துவதன் மூலம் பெட்ரோல் பைக்கை பயன்படுத்துவதை விட செலவு பாதியாக குறையும் என பஜாஜ் நிறுவனம் தெரிவித்திருந்தது. இதன் காரணமாக இந்த பைக் மீதான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக இருந்தது.

இந்த பைக்கின் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்பே மக்கள் பலர் இந்த பைக் குறித்து தெரிந்து கொள்வது பற்றியும் இந்த பைக்கை வாங்குவது பற்றியும் பல்வேறு விதமான பேச்சுகளிலும் யோசனைகளிலும் இருந்தனர். இந்நிலையில் கடந்த 5ம் தேதி இந்த பைக் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாக இருந்தாலும், இதன் புக்கிங் கடந்த 18ம் தேதி தான் அதிகாரப்பூர்வமாக துவங்கியது.

bajaj freedom 125 cng bike booking

இந்த பைக்கின் புக்கிங் துவங்கி சுமார் ஒரு வார காலமாகி உள்ள நிலையில், சுமார் 6000 பேர் இந்த பைக்கை புக் செய்துள்ளதாக தற்போது அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பைக்கை புக் செய்ய வேண்டும் என்றால் அருகில் உள்ள பஜாஜ் ஷோரூம் சென்று ரூபாய் 1000 முன்பணம் செலுத்தி இந்த பைக்கை முன் பதிவு செய்யலாம் என பஜாஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த பைக்கின் அறிமுகத்திற்கு முன்பே சுமார் 30,000 பேர் இந்த பைக் புக்கிங் குறித்த விசாரணை செய்ததாக அந்நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் புக்கிங் துவங்கிய ஒரே வாரத்தில் 6000 பேர் புக் செய்துள்ள நிலையில், அடுத்தடுத்த வாரங்களில் இந்த புக்கிங் எண்ணிக்கை அதிகமாகும் என் எதிர்பார்க்கப்படுகிறது.

bajaj freedom 125 cng bike booking

இந்த பைக் சாலைக்கு பயன்பாட்டிற்கு வந்ததும் இதன் விற்பனை அதிகரிக்க அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. சாலையில் இந்த பைக்கை பார்த்தவுடன் பலர் இந்த பைக்கின் உரிமையாளர்களுடன் கலந்துரையாடி பைக்கின் பெர்ஃபார்மென்ஸ் மற்றும் மைலேஜ் குறித்த விபரங்களை தெரிந்து பின்பு இந்த பைக்கை பலர் வாங்குவார்கள் என எதிர்பார்க்கலாம்.

இந்த ஃபிரீடம் சிஎன்ஜி பைக் மொத்தம் மூன்று விதமான வேரியண்ட்களில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி டிரம் வேடியன்ட் ரூபாய் 95,000 என்ற விலையிலும், மிட் வேரியண்டான டிரம் எல்இடி வேரியண்ட் ரூபாய் 1.05 லட்சம் என்ற விலையிலும், டாப் வேரியண்டான டிஸ்க் எல்இடி வேரியண்ட் ரூ 1.10 லட்சம் என்ற விலையிலும் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.

பஜாஜ் நிறுவனம் இந்த பைக்கின் விலையை குறைவாக வைத்திருப்பதற்காக பேஸ் வேரியண்டாக டிரம் வேரியண்ட் பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்கில் இரண்டு வீல்களிலும் டிரம் பிரேக் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இதில் ஹாலஜன் ஹெட்லைட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதில் ஸ்மார்ட் போன் கனெக்டிவிட்டி ஆப்ஷன் கிடையாது.

மிட் வேரியண்டில் டிரம் பிரேக் தான் இருக்கிறது. ஆனால் எல்இடி ஹெட்லைட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. எல்சிடி இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் பொருத்தப்பட்டுள்ளது. டாப் வேரியண்டான டிஸ்க் எல்இடி வேரியண்டை பொறுத்த வரை முன்பக்க வீலில் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்க வீலில் டிஸ்க் பிரேக்கும் பின்பக்கவீலில் வழக்கம் போல டிரம் பிரேக் தான் இருக்கிறது. இதில் எல்இடி ஹெட்லைட் எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டருடன் ஸ்மார்ட் போன் கனெக்டிவிட்டி ஆப்ஷனும் இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிஎன்ஜி மூலம் இயங்கும் பைக் என்ற செய்தி வந்த போதே, மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. சிஎன்ஜி பயன்படுத்துவதால் அதிக மைலேஜ் மற்றும் குறைவான எரிபொருள் செலவுதான் ஆகும் என்ற மனநிலை இருந்தது. இந்த பைக்கை அவர்கள் சாலையில் பார்த்ததும், அவர்கள் வாங்கும் முடிவை உடனடியாக எடுத்து இந்த பைக்கின் விற்பனையை அதிகப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, July 26, 2024, 14:32 [IST]
English summary
Bajaj freedom 125 cng bike booking hits 6000 within a week
மேலும்... #Bajaj CNG Bike #bajaj auto #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X