உடனே ஷோரூம்க்கு ஓடுங்க! இந்தியாவே எதிர்பார்த்த பைக் இப்ப இத்தனை ஊருக்கு வரப்போகுதா?
உலகின் முதல் சிஎன்ஜி பைக்கை பஜாஜ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், இந்த பைக்கை வாங்க இந்தியர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பஜாஜ் நிறுவனம் இந்த ஃப்ரீடம் 125 என்ற பைக்கை வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் 77 நகரங்களில் விற்பனைக்கு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த அறிவிப்பை செய்ய ஏற்பாடு செய்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
உலகில் முதல் சிஎன்ஜி பைக்காக ஃப்ரீடம் 125 என்ற சிஎன்ஜி பைக்கை பஜாஜ் நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது பெட்ரோல் விலை அதிகமாக இருப்பதன் காரணமாக மாற்று எரிசக்தியில் இயங்கும் வாகனங்களை இந்திய மக்கள் தேடி வருகிறார்கள். இதில் கார்களில் சிஎன்ஜி கார்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில், அந்த தொழிற்நுட்பத்தை பைக்கில் புகுத்தி பஜாஜ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த பைக்கிற்கு ஃபிரீடம் 125 என அந்த நிறுவனம் பெயர் வைத்துள்ளது. இந்த பைக்கில் ஒரே நேரத்தில் இரண்டு கிலோ சிஎன்ஜி மற்றும் இரண்டு லிட்டர் பெட்ரோலை நிரப்பிக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த பைக் 330 கிலோமீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சாதாரண 125 சிசி பைக்கை பயன்படுத்துவதற்கு ஆகும் செலவை விட இந்த சிஎன்ஜி பைக்கை பயன்படுத்த பாதி தான் செலவாகும்.
இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள இரண்டு கிலோ சிஎன்ஜி டேங்கில் எரிபொருளை நிரப்பினால் 200 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும். கூடுதலாக இரண்டு லிட்டர் பெட்ரோலையும் நிரப்பும் பட்சத்தில் மொத்தம் 330 கிலோமீட்டர் பயணிக்க முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் சீட்டிற்க்கு அடியில் சிஎன்ஜி டேங்கை பொருத்தி மிகப்பெரிய புரட்சியை செய்துள்ளது.

இந்த பைக்கின் வடிவமைப்பை பொறுத்தவரை முன்பக்கம் 125மிமீ டெலஸ்கோபிக் சஸ்பென்ஷனை பொருத்தியுள்ளது. பின்பக்கம் 120 மிமீ மோனோஷாப் சஸ்பென்ஷன் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. பைக்கில் ஒரே பீஸ் சீட் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர், கருப்பு நிற அலாய் வீல்கள் உள்ளிட்ட அம்சங்கள் இந்த பைக்கில் இருக்கிறது.
இந்நிறுவனத்தின் ஃபிரீடம் 125 பைக்கை பொருத்தவரை மொத்தம் மூன்று விதமான வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது. ரூபாய் 95,000 முதல் ரூபாய் 1.10 லட்சம் என்ற விலையில் இருந்த பைக் விற்பனையாகி வருகிறது. இந்த பைக்கில் அப்போது புனே, குஜராத் பகுதியில் மட்டுமே விற்பனையாகி வரும் நிலையில், விரைவில் இந்த பைக்கின் விற்பனையாகும் நகரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அதன்படி ஆகஸ்ட் மாதம் 15ம் தேதிக்குள் இந்தியாவில் உள்ள 77 நகரங்களில் இந்த பைக்கின் புக்கிங் மற்றும் விற்பனை நடக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த முன்னெடுப்பை அந்நிறுவனம் கையில் எடுத்துள்ளதாக அந்நிறுவனத்தின் மோட்டார் வாகன பிரிவு தலைவர் சரண் கன்னடி என்பவர் தெரிவித்துள்ளார்.
பஜாஜ் நிறுவனத்தின் ஃபிரீடம்125 பைக் என்பது மொத்தம் ஏழு விதமான கலர் ஆப்ஷன்களில் விற்பனையாகி வருகிறது. இந்த பைக் அறிமுகமான போதே சுமார் 30,000 பேர் முதல் வாரத்திலேயே இந்த பைக் குறித்த தகவலை கேட்டு ஷோரூமுக்கு வந்துள்ளார்கள் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது மட்டுமில்லாமல் ஒரே வாரத்தில் 6 ஆயிரம் பேர் இந்த பைக்கை புக் செய்துள்ளார்கள்.
இதனால் இந்தியா முழுவதும் படிப்படியாக இந்த பைக்கின் விற்பனை அதிகரிக்கும் போது ஏகப்பட்ட நபர்கள் இந்த பைக்கை வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பஜாஜ் நிறுவனமும் பைக் விற்பனையில் மிகப்பெரிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 77 நகரங்கள் எந்தெந்த நகரங்கள் என்ற பட்டியல் இதுவரை வெளியாகவில்லை. விரைவில் அந்நிறுவனம் இந்த தகவலையும் வெளியிடும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பஜாஜ் நிறுவனம் இந்த பைக்கை முதலில் அறிமுகப்படுத்திய போது குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே விற்பனைக்கு அறிமுகப்படுத்த போவதாக தெரிவித்தது. அப்போதே இந்தியா முழுவதும் இந்த பைக் எப்போது விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்ப்பு இருந்தது. தற்போது இதன் விற்பனை பகுதிகளை அதிகப்படுத்தியது பலரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது விரைவில் இந்த பைக்கை புக் செய்ய பலர் ஷோரூம் செல்வார்கள் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









