பஜாஜ் சிஎன்ஜி பைக்கில் எத்தன கிலோ சிஎன்ஜி நிரப்பலாம்? எத்தன லிட்டர் பெட்ரோல் நிரப்பலாம்? மிஸ் பண்ண கூடாத தகவல்

இந்தியர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த பஜாஜ் சிஎன்ஜி பைக் (Bajaj CNG Bike) இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. ஃப்ரீடம் 125 (Freedom 125) எனும் பைக் மாடலையே அது விற்பனைக்கு அறிமுகம் செய்து உள்ளது. இதுவே உலகின் முதல் சிஎன்ஜியில் இயங்கும் பைக் மாடல் ஆகும். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வாயிலாகவே இந்த பைக் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. ரூ. 95 ஆயிரம் என்கிற மிகக் குறைவான விலையில் இந்த பைக்கை விற்பனைக்கு களமிறக்கி இருக்கின்றது, பஜாஜ்.

இந்தியர்கள் அனைவரும் பயனடைய வேண்டும் என்கிற நோக்கிலேயே இவ்வளவு குறைவான விலையில் இந்த பைக்கை பஜாஜ் விற்பனைக்குக் கொண்டு வந்து இருக்கின்றது. இந்த பதிவில் பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் சிஎன்ஜி சிலிண்டர் மற்றும் ஃப்யூவல் டேங்க் திறன் மற்றும் சிறப்புகள் பற்றிய சுவாரஷ்ய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

Bajaj freedom cng

பஜாஜ் ஃப்ரீடம் 125, சிஎன்ஜியில் மட்டுமல்ல, பெட்ரோலிலும் இயங்கும். இதற்காக தனி தனி கலன்கள் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன. அதாவது, சிஎன்ஜி-யை நிரப்பிக் கொள்ள ஓர் சிலிண்டரும், பெட்ரோலை நிரப்பிக் கொள்ள சிறிய ஃபூயவல் டேங்கும் வழங்கப்பட்டு இருக்கின்றது. மேலும், சிஎன்ஜி அல்லது பெட்ரோல் மோட்களை மாற்றிக் கொள்வதற்கு ஏதுவாக பிரத்யேக சுவிட்சுகளும் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இந்த சுவிட்சை லேசாக தட்டுவதன் வாயிலாக பைக்கின் இயக்கத்தை தேவைக்கேற்ப பெட்ரோல் அல்லது சிஎன்ஜிக்கு மாற்றிக் கொள்ள முடியும். இந்த சிலிண்டரில் 2 கிலோ வரையில் சிஎன்ஜி-யை நிரப்பிக் கொள்ள முடியும். அதுவே லிட்டர் அளவில் பார்த்தால் இந்த சிலிண்டரின் அளவு 12.5 லிட்டர் ஆகும்.

மேலும் ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 100 கிமீட்டருக்கும் அதிகமான மைலேஜை ஃப்ரீடம் 125 வழங்கும். முழு கொள்ளளவான 2 கிலோவை நிரப்பினால் 200 கிமீட்டருக்கும் அதிகமான மைலேஜை இந்த பைக் வழங்கும். இதன் பெட்ரோல் டேங்க் இரண்டு லிட்டர் கொள்ளளவைக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதை முழுமையாக நிரப்பினால் 130 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். மேலும், ஃப்ரீடம் பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் சிலிண்டர் பெஸோ சான்று சான்று பெற்றது என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. பெட்ரோலியம் மற்றும் வெடிபொருட்கள் பாதுகாப்பு அமைப்பு (Petroleum and Explosives Safety Organization)-தான் பெசோ ஆகும்.

எந்தவொரு ஆயில் அல்லது கேஸ் தயாரிப்பு நிறுவனமாக இருந்தாலும் இதனிடம் இருந்து சான்று பெற வேண்டும் என்பது கட்டாயம் ஆகும். இதுமட்டுமில்லைங்க, வாயுவை கையாளக் கூடிய உபகரணங்களுக்கும் இதன் சான்று கட்டாயம் ஆகும். இத்தகைய அமைப்பிடம் இருந்தே இந்த சிலிண்டர் சான்றைப் பெற்றிருக்கின்றது.

அதாவது, அதிக பாதுகாப்பான சிலிண்டர் என்கிற சான்றையே பெசோ அதற்கு வழங்கி இருக்கின்றது. இந்த சிலிண்டரை பாதுகாப்பாக டிரெல்லிஸ் ஃப்ரேமில் பஜாஜ் நிலை நிறுத்தி இருக்கின்றது. கூடுதலாக சிலிண்டரை இருக்கமாக பிடித்து வைத்துக் கொள்வதற்கான ஷீல்டும் இந்த பைக்கில் வழங்கப்பட்டு உள்ளது. எனவே பாதுகாப்பு விஷயத்தில் எந்தவொரு சமரசத்தையும் பஜாஜ் செய்யவில்லை என்பது தெரிய வந்திருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சிஎன்ஜி வாகனங்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டு இருக்கின்றது. இந்த நிலையிலேயே, சிஎன்ஜி பைக்கை முதல் ஆளாக பஜாஜ் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதற்கும் இந்தியர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, July 6, 2024, 5:00 [IST]
English summary
Bajaj freedom 125 cng cylinder details and fuel tank capacity
மேலும்... #Bajaj CNG Bike #bajaj auto #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+