கேர்ள் பிரெண்ட் கூட லாங் டிரைவ் போக இந்த பைக்கை வாங்கலாமா? பட்ஜெட் கம்மியா தான் வரும்!

பஜாஜ் நிறுவனம் உலகின் முதல் சிஎன்ஜி பைக்காக ஃப்ரீடம் 125 என்ற பைக்கை கடன் சில நாட்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தியது. இந்த பைக்கில் உள்ள சில அம்சங்கள் குறித்த சந்தேகங்கள் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. முக்கியமாக இந்த பைக் நீண்ட தூர பயணத்திற்கு ஏற்றதாக இருக்குமா என்ற சந்தேகம் மக்களுக்கு எழுந்துள்ளது. 2 லிட்டர் பெட்ரோல் டேங்க் மற்றும் 2 கிலோ சிஎன்ஜி மட்டுமே இந்த பைக்கின் முழு எரிபொருள் கொள்ளளவு என்பதால் இதை நீண்ட தூரத்துக்கு பயன்படுத்த முடியுமா என்ற கேள்விக்கான பதிலை விரிவாக கீழே காண்போம்.

பஜாஜ் நிறுவனம் ஃபிரீடம் 125 என்ற பைக்கை உலகின் முதல் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜியில் இயங்கும் பைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக் உலகிலேயே அதிக மைலேஜ் தரும் பைக்குகளில் ஒன்றாக இருக்கிறது. சிஎன்ஜி-ல் இந்த பைக் இயங்கும் போது ஒரு கிலோவிற்கு 100 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

bajaj freedom 125 cng long drive

இதனால் தினந்தோறும் அலுவலகத்திற்கு செல்பவர்கள், கல்லூரிக்கு செல்பவர்கள், மாணவர்கள், பைக்கிலேயே வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த பைக் ஏற்றதாக இருக்கும். இதன் மூலம் இந்த பைக் ஓட்டும் நபர்கள் மாதம் 1500 வரை சுலபமாக சேமிக்க முடியும் என்ற பேச்சும் தற்போது மக்கள் மத்தியில் எழுந்து வருகிறது.

இது எல்லாம் இருந்தாலும் நீண்ட தூரம் பயணம் செய்வதற்கு இந்த பைக் ஏற்றதாக இருக்குமா என்ற சந்தேகம் மக்களுக்கு அதிகரித்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் இதில் இரண்டு லிட்டர் பெட்ரோல் டேங்க் மற்றும் 2 கிலோ சிஎன்ஜி மட்டுமே அதிகபட்சம் நிரப்ப முடியும் என்ற விஷயம் தான்.

பஜாஜ் நிறுவனம் இந்த பைக்கை அறிமுகப்படுத்தும்போது இந்த பைக்கில் 2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2 கிலோ சிஎன்ஜியை நிரப்பினால் 330கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் என தெரிவித்திருந்தது. இதில் சிஎன்ஜி மட்டும் 200கிலோமீட்டர் மைலேஜையும், பெட்ரோல் மட்டும் 130கிலோமீட்டர் மைலேஜையும் தரும் என விளக்கம் அளித்து இருந்தது. பைக்குகளில் நீண்ட தூரம் பயணம் செய்பவர்களுக்கு இந்த பைக் ஒரு பிரச்சினையாக இருக்குமே என்ற கேள்வி மக்களுக்கு எழுந்துள்ளது.

ஏனென்றால் இந்தியாவில் சிஎன்ஜி ஸ்டேஷனுக்கு எண்ணிக்கை மிக குறைவுதான். பெட்ரோல் ஸ்டேஷன்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கிறது. குறிப்பிட்ட இந்த பைக்கில் இரண்டு கிலோ சிஎன்ஜி போக இரண்டு லிட்டர் பெட்ரோல் மட்டுமே பயன்படுத்த முடியும். இதனால் சிஎன்ஜி காலியாகிவிட்டால் அதிகபட்சமாக 130 கிலோ மீட்டர் வரை மட்டுமே இந்த பைக்கில் பெட்ரோல் மூலம் பயணம் செய்ய முடியும்.

ஆனால் மார்க்கெட்டில் உள்ள பஜாஜ் நிறுவனத்தின் மற்ற பைக்குகளில் 11-15 லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்க் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தாராளமாக 500கிலோமீட்டர் வரை பயணம் செய்ய முடியும். ஃப்ரீடம்125 பைக்கில் சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் ஆகிய இரண்டையும் பயன்படுத்தி மொத்தம் பயணிக்க கூடிய தூரத்தை விட 170கிலோமீட்டர் பெட்ரோல் இன்ஜின் மட்டும் உள்ள பைக்குகளில் பயணம் செய்ய முடியும்.

இதுவே ஃப்ரீடம்125 பைக்கில் பெட்ரோலை மட்டும் பயன்படுத்தி எவ்வளவு தூரம் பயணிக்க முடியுமோ அதைவிட மற்ற பைக்குகளில் 370கிலோமீட்டர் அதிக தூரத்தில் பயணம் செய்யலாம். இதனால் நீண்ட தூர பயணத்திற்கு இந்த பைக் பெரிய அளவில் உதவியாக இருக்காது என்ற பேச்சு மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்த பைக்கை ஓட்டி பார்த்து விமர்சனம் செய்யும் பட்சத்தில் தான் இதில் இருக்கும் உண்மையான பிரச்சனையை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.

பஜாஜ் நிறுவனத்தில் இந்த ஃபிரீடம் 125 பைக்கை பொறுத்தவரை சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதை பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆகிய இரண்டு எரிபொருளிலும் இயங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 9.5 பிஎஸ் பவரையும் 9.7 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் சிஎன்ஜி சிலிண்டர் பொருத்தப்பட்ட இடமே தெரியாத அளவுக்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கின் சிறப்பம்சமே இதில் வழங்கப்பட்டுள்ள சீட்டு தான். மிக நீளமான சீட்டாக வழங்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு பேர் தாராளமாக அமர்ந்து பயணம் செய்ய முடியும். இந்த பைக்கில் எல்இடி ஹெட்லைட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பைக்கின் பாதுகாப்பிற்காக 11 விதமான பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பஜாஜ் நிறுவனத்தின் இந்த ஃப்ரீடம் 125 பைக்கை நிறுவனம் தினசரி பயன்பாட்டிற்காக பைக்குகளை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளை குறிவைத்து அறிமுகப்படுத்தியுள்ளது. அவர்களின் தேவையை இந்த பைக் நிச்சயம் பூர்த்தி செய்கிறது. ஆனால் நீண்ட தூரம் பயணம் செய்யும் பயன்பாடு கொண்ட வாடிக்கையாளர்களின் தேவையை இந்த பைக் பூர்த்தி செய்கிறதா என்பதை இந்த பைக்கின் விற்பனைக்கு பிறகு தெரிந்துகொள்ள முடியும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 9, 2024, 14:58 [IST]
English summary
Bajaj freedom 125 cng long drive comparison with regular petrol bike
மேலும்... #Bajaj CNG Bike #bajaj auto #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+