153கிமீ வேகத்தில் பயணிக்கும் பல்சர் பைக் விற்பனைக்கு அறிமுகம்.. இப்பவே வாங்கினா சலுகை விலையில வாங்கலாம்!
இப்போது விற்பனையில் இருக்கும் அனைத்து பல்சர் பைக் மாடல்களைக் காட்டிலும் அதிக பவர்ஃபுல்லான பல்சர் என்எஸ்400 இசட் (Pulsar NS400 Z) பைக்கை பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த பைக்கின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை போன்ற முக்கிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.
இந்தியர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக பஜாஜ் பல்சர் என்எஸ்400 இருக்கின்றது. இந்த பைக்கையே தற்போது பஜாஜ் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. அறிமுகமாக ரூ. 1.85 லட்சம் இதற்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வெறும் அறிமுக சலுகை விலை மட்டுமே ஆகும்.

ஆகையால் குறுகிய காலத்திற்கு இந்த விலையில் பல்சர் என்எஸ் 400 இசட் பைக்கை வாங்கிக் கொள்ள முடியும். எனவே விரைவில் இதன் விலை உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அறிமுகத்தைத் தொடர்ந்து இந்த பைக்கிற்கான புக்கிங் பணிகளும் தொடங்கி இருக்கின்றன. ரூ. 5 ஆயிரம் முன் தொகையில் இந்த பைக்கிற்கான புக்கிங் பணிகள் ஏற்கப்பட்டு வருகின்றன.
பல்சர் என்எஸ் வரிசையில் உள்ள பைக்குகளின் டிசைனை தழுவியே இந்த பைக்கும் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. ஆனால், சற்று முரட்டுத் தனமான தோற்றம் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதன் அதிக பவர்ஃபுல்லான மோட்டாருக்கு ஏற்பவே இதன் தோற்றமும் இருக்கின்றது. இந்த பைக்கில் 373 சிசி திறன் கொண்ட எஞ்சினையே பஜாஜ் ஆட்டோ பயன்படுத்தி இருக்கின்றது.
இந்த மோட்டார் அதிகபட்சமாக 40 பிஎஸ் மற்றும் 35 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இதனால்தான் இருப்பதிலேயே அதிக பவர்ஃபுல்லான பைக் மாடலாக இது பார்க்கப்படுகின்றது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸே இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், ரைடு-பை-ஒயர் எலெக்ட்ரானிக் த்ரோட்டில், 4 விதமான ரைடிங் மோட்களும் இதில் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் பைக்கை அலங்கரிக்கும் அம்சங்கள் சிலவும் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், எல்இடி புரஜெக்டர் வகை ஹெட்லேம்ப், அகலமான டயர், முழு டிஜிட்டல் வண்ண எல்சிடி ஸ்பீடோ மீட்டர் ப்ளூடூத் இணைப்பு வசதியுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, இந்த பைக் திருப்பத்திற்கு திருப்பம் வழித் தடம் பற்றிய தகவலை வழங்கும் திறன், மியூசிக் கன்ட்ரோல், லைட்டை டிம்மாக்கும் வசதி மற்றும் டிராக்சன் கன்ட்ரோல் போன்ற வசதிகளும் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
ஒட்டுமொத்தமாக நான்கு விதமான நிற தேர்வுகளில் புதிய பல்சர் என்எஸ்400 இசட் மாடலை வாங்கிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. குளாஸ்ஸி ரேசிங் ரெட் (Glossy Racing Red), ப்ரூக்ளின் பிளாக் (Brooklyn Black), பியர்ல் மெட்டாலிக் ஒயிட் (Pearl Metallic White) மற்றும் பியூடர் கிரே (Pewter Grey) ஆகிய நிற தேர்வுகளே என்எஸ்400 இசட்-இல் வழங்கப்படுகின்றன.
இந்த பைக்கில் மிக சிறந்த ரைடிங் அனுபவத்திற்காக 43 மிமீ அளவுள்ள யுஎஸ்டி ஃபோர்க் முன் பக்கத்திலும், ப்ரீலோட் அட்ஜஸ்டபிள் மோனோஷாக் பின் பக்க வீலிலும் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன், மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக முன் வீலில் 4 பிஸ்டன் கிரைமெகா ஆக்சியல் காலிபர்களுடன் கூடிய 320 மிமீ அளவுள்ள டிஸ்க் பிரேக்கும், பின் வீலில் 230 மிமீ அளவுள்ள டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இது மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்தை வழங்கும். இநத் பைக் அதிகபட்சமாக மணிக்கு 154 கிமீ ஆகும். இந்த உச்சபட்ச வேகத்தை கண்ணிமைக்கும் நேரத்தில் நிறுத்திக்கொள்ள இந்த அம்சங்களே போதுமானது ஆகும். இதன் வருகை கேடிஎம் ட்யூக், ஹோண்டா சிபிஆர், டிவிஎஸ் அப்பாச்சி உள்ளிட்ட பைக் மாடல்களுக்கு போட்டியாக அமைந்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பஜாஜ் இந்த பைக்குகளுக்கான டெலிவரி பணிகளை விரைவிலேயே தொடங்க இருக்கின்றது. வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் அந்த பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நாளுக்காகவே மிகுந்த ஆவலுடன் பஜாஜ் பல்சர் லவ்வர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








