அப்பாச்சியை ஓரங்கட்ட பல்சரை புதுப்பித்து விற்பனைக்கு கொண்டு வந்திருக்கும் பஜாஜ்! விலை இவ்ளோதானா!!

பஜாஜ் (Bajaj) நிறுவனத்தின் புகழ்பெற்ற இரண்டு சக்கர வாகன மாடல்களில் பல்சர் (Pulsar)-ம் அடங்கும். பல்சர், இந்த பெயரில் ஏகப்பட்ட மாடல்களை பஜாஜ் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே பல்சர் என்160 (Pulsar N160) மற்றும் பல்சர் என்150 (Pulsar N150) ஆகிய இரண்டு மாடல்களை பஜாஜ் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

இந்திய இரண்டு சக்கர வாகன காதலர்களைக் கவரும் நோக்கிலேயே பஜாஜ் தற்போது பல்சர் என்150 மற்றும் பல்சர் என்160 ஆகிய மாடல்களை புதுப்பித்து விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. அறிமுகமாக பல்சர் என்150 மாடலுக்கு 1 லட்சத்து 18 ஆயிரம் ரூபாயும், பல்சர் என்160 மாடலுக்கு ஒரு லட்சத்து 31 ஆயிரம் ரூபாயும் விலையாக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

Bajaj pulsar n160 n150 launched

இவை எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். விற்பனைக்கு வந்திருக்கும் இந்த இரண்டு மோட்டார்சைக்கிள்களும் ஒட்டி பிறந்த இரட்டை சகோதரர்களைப் போல தென்படலாம். ஆனால், அலங்கரிப்பில் இவையிரண்டும் மாறுபட்டுக் காட்சியளிக்கின்றன. அணிகலன், இருக்கை அமைப்பு உள்ளிட்டவற்றிலேயே இவை இரண்டிற்கும் இடையில் மிகப் பெரிய வித்தியாசங்கள் தென்படுகின்றன.

இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் பக்கவாட்டு பாடி பேனல்கள் வெவ்வேறு அமைப்பைக் கொண்டவையாக இருக்கின்றன. இதேபோல், பல்சர் என்150 மாடலில் ஒற்றை துண்டு அமைப்புடைய இருக்கையும், பல்சர் என்160 மாடலில் இரட்டை துண்டுகள் அமைப்புடைய மிருதுவான இருக்கையும் வழங்கப்பட்டு இருக்கின்றன.

Bajaj pulsar handle

இதேபோல், எஞ்சின் விஷயத்திலும் இரண்டிற்கும் இடையில் மிகப் பெரிய வித்தியாசம் தென்படுகின்றது. அந்தவகையில், பஜாஜ் பல்சர் என்160 பைக்கில் 164.82 சிசி திறன் கொண்ட டிடிஎஸ்-ஐ (DTS-i) எஞ்சினும், பல்சர் என்150 பைக் மாடலில் 149.68 சிசி மோட்டாரும் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இந்த மோட்டார் அதிகபட்சமாக 14.3 பிஎச்பி பவரையும், 13.5 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. அதேவேளையில், என்160இல் பயன்படுத்தப்பட்டு இருக்கும் மோட்டரானது 15.8 பிஎச்பி பவரையும், 14.65 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இந்த இரண்டும் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 45 கிமீ தொடங்கி 50 கிமீ வரையில் மைலேஜ் தரும் என கூறப்படுகின்றது.

Bajaj pulsar n160 n150 instrument cluster

இந்த பைக்குகளின் வருகையால் டிவிஎஸ் அப்பாச்சி 160 மற்றும் அப்பாச்சி 160 4வி (TVS Apache 160 and Apache 160 4V), யமஹா எஃப்இசட் இன் அனைத்து மாடல்களுக்கும் (Yamaha FZ lineup), ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி (Hero Xtreme 160R 4V) மற்றும் சுஸுகி ஜிக்ஸெர் 150 (Suzuki Gixxer 150) ஆகிய பைக் மாடல்களுக்கு கடுமையான போட்டி அதிகரித்துள்ளது.

இவற்றிற்கு போட்டியை அதிகரிக்கச் செய்யும் விதமாக இரண்டு பைக்குகளிலும் நவீன தொழில்நுட்ப வசதிகளை வாரி வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், இரண்டு பைக்குகளிலும் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் எல்சிடி கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த அம்சமானது ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

Bajaj pulsar n160 n150 switches

பஜாஜின் ரைடு கன்னெக்ட் செயலி வாயிலாக இந்த திரையை செல்போனுடன் இணைத்துக் கொள்ள முடியும். இவ்வாறு செய்வதன் வாயிலாக செல்போனுக்கு வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் நோடிஃபிகேஷன்கள் உள்ளிட்டவற்றை பைக்கின் திரையிலேயே பெற்றுக் கொள்ள முடியும். இதுதவிர, பைக் பற்றிய பல்வேறு முக்கிய தகவல்களையும் இந்த திரை வாயிலாக நம்மால் பெற்றுக் கொள்ள முடியும்.

அந்தவகையில், கியர் பொசிஷன், மைலேஜ் பற்றிய விபரம் உள்ளிட்டவற்றை நம்மால் தெரிந்துக் கொள்ள முடியும். புதிய பஜாஜ் பல்சர் என் மோட்டார்சைக்கிளை மூன்று விதமான நிற தேர்வுகளில் வாங்கிக் கொள்ள முடியும். கருப்பு (Black), சிவப்பு (Red) மற்றும் நீலம் (Blue) ஆகியவையே அவை ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பல்சர் வரிசையில் உள்ள பெரும்பாலான பைக் மாடல்களுக்கு இளம் தலைமுறையினர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே தங்களுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் டிமாண்டை இரட்டிப்பாக்கும் விதமாக பஜாஜ் நிறுவனம் என்150 மற்றும் என்160 ஆகிய மாடல்களில் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷன்களை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 31, 2024, 16:21 [IST]
English summary
Bajaj launched pulsar n160 and pulsar n150 bikes in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X