ஊரெல்லாம் ராயல் என்ஃபீல்டு ஓடுது! அப்ப இந்த வண்டியை வாங்குனா தான் ஊரே நம்மள திரும்பி பார்க்கும்!
பஜாஜ் நிறுவனம் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கு போட்டியாக 400 சிசி செக்மெண்டில் பல்சர் பைக்கை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இந்த பைக்கிற்கான அறிமுக தேதி குறித்த தகவல் எல்லாம் தற்போது வெளியாகி உள்ளது. இன்று நடந்த பஜாஜ் பல்சர் என் 250 பைக் அறிமுகத்தில் இந்த அறிவிப்பை நிறுவனம் செய்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் பாருங்கள்.
பஜாஜ் நிறுவனம் இன்று பல்சர் என்250 என்ற பைக்கை அப்டேட் செய்து அறிமுகப்படுத்தியது. பல்சர் லைன்களை அப்டேட் செய்யும் வகையில் இந்த அறிமுகத்தை செய்துள்ளது. இந்த அறிமுகத்திற்கு இடையே பஜாஜ் நிறுவனம் அதிக இன்ஜின் திறன் கொண்ட பல்சர் பைக் அறிமுகம் குறித்த முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி பஜாஜ் பல்சர் என்எஸ் 400 பைக்கின் அறிமுகம் மே மாதம் 3ம் தேதி நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஜாஜ் நிறுவனம் இந்தியாவில் கேடிஎம், டிரையம்ப் மற்றும் ஹஸ்குவெர்னா ஆகிய பிராண்டுகளில் பைக்குகளை தயாரித்து வருகிறது. இந்த பைக்குகளுக்கு இடையே தனது பிராண்டில் உள்ள பைக்கையும் விரிவுபடுத்த முயற்சி செய்து வருகிறது. இதற்கிடையில் பஜாஜ் நிறுவனம் இந்தியாவின் முதல் சிஎன்ஜி பைக் அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் தான் பஜாஜ் நிறுவனம் தனது பெரிய பல்சர் பைக் குறித்த முக்கிய அப்டேட்டை தற்போது வெளியிட்டுள்ளது.
இந்த அப்டேட்டை ஊடகத்தில் நிறுவனத்தின் தலைவர் ராஜீவ் பஜாஜ் பேசும்போது கூறியுள்ளார். இந்த பைக்கின் வடிவமைப்பை பொறுத்தவரை பஜாஜ் என்எஸ் 200 பைக்கின் வடிவமைப்பு போலவே இந்த பைக்கும் வடிவமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் பஜாஜ் என் சீரிஸில் உள்ள அதே டிசைன் தான் இந்த பைக்கிலும் இடம் பெறும் என எதிர்பார்க்கலாம்.

இந்த பஜாஜ் என்எஸ் 200 பைக்கின் தொழில்நுட்ப தகவல் குறித்த இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. ஆனால் நாம் இந்த பைக்கின் இன்ஜின் குறித்த சில எதிர்பார்ப்புகளை வைத்துள்ளோம். அதன்படி இந்த பைக் 373.2 சிசி லிக்யூட் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்ட பைக்காக விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே இன்ஜின் தான் பஜாஜ் நிறுவனம் தயாரிக்கும் டொமினோர் 400 பைக்கிலும் இருக்கிறது.
இது மட்டுமல்ல பஜாஜ் ஆலையில் தயாராகும் கேடிஎம் 390டியூக் பைக்கிலும் இதே இன்ஜின் தான் பொருத்தப்படுகிறது. ஆனால் புதிய டியூப்390 பைக்கில் 399சிசி இன்ஜின் மாற்றப்படுகிறது. ஒருவேளை அந்த இன்ஜின் பல்சர் என்எஸ் 400 பைக்கிற்க்கு பொருத்தப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. மற்ற பைக்கில் உள்ள இன்ஜின் பல்சர் 400 பைக்கில் பொருத்தப்பட்டால் அட்ஜஸ்ட் செய்யப்பட்டு அதன் பெர்ஃபார்மன்ஸ் வேறு விதமாக இருக்கும் படி மாடிஃபிகேஷன் செய்யப்பட்டும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இன்ஜின் 6ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லீப்பர் அசிஸ்டென்ட் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். இந்த பைக்கில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ப்ளூடூத் கனெக்டிவிட்டியுடன் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது டர்ன் பை டர்ன் நேவிகேஷன் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இதில் எல்இடி ஹெட்லைட், எல்இடி டேடைம் ரன்னிங் லைட், ட்வின் எல்இடி டெயில் எல்இடி டர்ன் சிக்னல் அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கலாம்.
இந்த பைக்கில் ஸ்பிளிட் சீட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் பஜாஜ் நிறுவனத்தின் ஸ்விட்ச் கியர் போட்டியான பாடி கிராபிக்ஸ், அலாய் வீல்கள், அகலமான டயர், இரண்டு வீல்களிலும் டிஸ்க் பிரேக், முன் பக்கம் தலைகீழாக பொருத்தப்பட்ட ஃபோர்க் சஸ்பென்ஷன், ஸ்லீக்கான பாடி லுக், டூயட் சேனல் ஏபிஎஸ், ஃப்ரீ லோட் அட்ஜஸ்டபிள் மோனோஷாக் சஸ்பென்ஷன், உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பைக் பஜாஜ் நிறுவனத்தின் டோமினோர் 400 பைக்கை விட குறைவான விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக இந்த பைக்கை ரூ 2 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கொண்டு வர அந்நிறுவனம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. மிக குறைவான விலையில் இந்த பைக் விற்பனைக்கு வந்தால் அதன் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது மார்க்கெட்டில் 350 சிசி கொண்ட ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புல்லட் மற்றும் கிளாசிக் 350 ஆகிய பைக்குகள் தான் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி வருகின்றன. அந்த செக்மென்டை குறி வைத்துதான் பஜாஜ் நிறுவனமும் பல்சர் 400 பைக்கை களம் இறங்குகிறது. இந்த பைக் களமிறங்கினால் நிச்சயம் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பைக்குகளுக்கு கடும் போட்டியை கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








