100 கிமீ மைலேஜ் தரும் பைக் விலை இப்ப இவ்ளோதானா! ஞாயித்து கிழமைன்னு கூட பாக்காம ஷோரூமுக்கு படையெடுக்க போறாங்க!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று பஜாஜ் பிளாட்டினா (Bajaj Platina). தற்போதைய நிலையில் பிளாட்டினா 110 ஏபிஎஸ் (Platina 110 ABS), (Platina 110 Drum) மற்றும் பிளாட்டினா 100 (Platina 100) என மொத்தம் 3 மாடல்களில், இந்த பைக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் நடப்பு 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான பஜாஜ் பிளாட்டினா பைக்கின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பஜாஜ் நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 44,054 பிளாட்டினா பைக்குகளை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையானது கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 46,322 ஆக இருந்தது. இது 4.90 சதவீத வீழ்ச்சியாகும். விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்திருந்தாலும் கூட, நடப்பு 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட பைக்குகள் பட்டியலில், 7வது இடத்தை பஜாஜ் பிளாட்டினா பிடித்துள்ளது.

Bajaj Platina 100

பஜாஜ் பிளாட்டினா பைக்கின் 110 ஏபிஎஸ் மாடலின் விலை தற்போதைய நிலையில் 80,275 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடலில் 115 சிசி DTS-i இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பிளாட்டினா 110 ட்ரம் மாடலிலும், அதே 115 சிசி DTS-i இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் உடனும் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ்தான் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாடலின் விலை சற்று குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் பஜாஜ் பிளாட்டினா 110 ட்ரம் மாடலின் விலை 70,854 ரூபாய் ஆக இருக்கிறது.

Bajaj Platina 110

மறுபக்கம் பிளாட்டினா 100 பைக்கில், 102 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 4 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. பஜாஜ் பிளாட்டினா 100 பைக்கின் விலை 67,808 ரூபாயாக இருக்கிறது. பஜாஜ் பிளாட்டினா பைக்கின் மாடல்களிலேயே இதுதான் விலை குறைந்த மாடல் ஆகும். இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். பஜாஜ் பிளாட்டினா பைக் விலை குறைவானது என்பதுடன், சிறப்பான மைலேஜ் (Mileage) வழங்க கூடியது என்பது கூடுதல் சிறப்பம்சம் ஆகும்.

பஜாஜ் பிளாட்டினா 110 ஏபிஎஸ் மற்றும் பஜாஜ் பிளாட்டினா 110 ட்ரம் மாடல்களின் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 80 கிலோ மீட்டர்களாக உள்ளது. மறுபக்கம் பஜாஜ் பிளாட்டினா 100 மாடலின் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 97 கிலோ மீட்டர்களாக உள்ளது. எப்படி ஓட்டுகிறோம்? என்பதை பொறுத்து, இந்த மைலேஜ் மாறுபடலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் மிகவும் குறைவான விலையில் அதிக மைலேஜ் வழங்க கூடிய ஒரு பைக்கை வாங்க வேண்டும் என நினைத்து கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு, பஜாஜ் பிளாட்டினா மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

அதிக மைலேஜ் கிடைக்கின்ற காரணத்தால், தினமும் அதிக தூரம் பைக் ஓட்ட வேண்டிய தேவையுள்ளவர்கள் மத்தியில் பஜாஜ் பிளாட்டினா மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. உணவு மற்றும் பொருட்களை டெலிவரி செய்ய கூடியவர்கள், பைக் டாக்ஸி ஓட்ட கூடியவர்களிடம் பஜாஜ் பிளாட்டினா பைக்கை அதிகளவில் பார்க்க முடியும்.

More from DriveSpark

Article Published On: Saturday, May 25, 2024, 23:44 [IST]
English summary
Bajaj platina sales report april 2024 full details inside
மேலும்... #Bajaj CNG Bike #bajaj auto #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+