பல்சர் 220எஃப் பைக்கை மொத்தமா மாத்தியாச்சு!! ஷோரூமுக்கு வரவங்க எல்லாம் இதை தான் வாங்க போறாங்க!

பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனத்தின் பல்சர் 220எஃப் (Pulsar 220F) பைக் புதிய தோற்றத்தில் ஷோரூம்களுக்கு வர துவங்கியுள்ளது. இதுதொடர்பாக இணையத்தில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஷோரூம் ஒன்றில் இருந்து வெளியாகி உள்ள அந்த வீடியோவின் மூலம் புதிய பல்சர் 220எஃப் பைக்கை பற்றி நமக்கு தெரியவந்துள்ள விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியாவில் 2-வீலர்கள் விற்பனையில் 4வது பெரிய நிறுவனமாக விளங்கும் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் மிக பெரிய நம்பிக்கையாக இருப்பது அதன் பல்சர் பைக்குகள் ஆகும். நமது இந்திய மார்க்கெட்டில் ஒரு சில பைக்குகள் மட்டுமே காலத்தை கடந்து நீண்ட வருடங்களாக விற்பனையில் உள்ளன. அத்தகைய பைக்குகளுள் ஒன்று தான், பஜாஜ் பல்சர் ஆகும்.

pulsar 220f in new avatar

125சிசி-இல் இருந்து பல்சர் பைக்குகள் விற்பனையில் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு 250சிசி-யிலும் பல்சர் பைக்குகளை பஜாஜ் அறிமுகம் செய்தது. 2021ஆம் ஆண்டில் பல்சர் 250 பைக்குகள் வரும் வரையில், ஆற்றல்மிக்க பல்சர் பைக்காக பல்சர் 220எஃப் இருந்தது. பல்சர் 250 பைக்குகளின் அறிமுகத்திற்கு பிறகு, பல்சர் 220எஃப் பைக்கின் விற்பனையை நிறுத்தும் முடிவுக்கு பஜாஜ் வந்தது.

ஆனால், பல்சர் 220எஃப் பைக்கிற்கு கஸ்டமர்கள் தொடர்ந்து அளித்துவந்த ஆதரவினால், இந்த பைக்கை மீண்டும் பஜாஜ் விற்பனைக்கு கொண்டுவந்தது. மற்ற பல்சர் பைக்குகளை போல் அல்லாமல், பல்சர் 220எஃப் பைக் தோற்றத்தில் கொஞ்சம் வித்தியாசமானது & புதுமையானது. இந்த பைக்கில் ஹெட்லைட் மற்றும் பெட்ரோல் டேங்கிற்கு கீழே பேனல்கள் அதிகமாக இருக்கும், ஆனால் பின்பக்கத்தில் அவ்வளவாக இருக்காது.

pulsar 220f in new avatar

இதனால், பல்சர் 220எஃப் பைக்கை பின்னால் இருந்து பார்த்தால் பல்சர் 200 பைக்கை போலவே இருக்கும். பல்சர் 200 இப்போது விற்பனையில் இல்லை. பல்சர் 200-இன் தோற்றத்தில் கொஞ்சம் மாற்றங்களை செய்து, கூடுதல் ஆற்றல்மிக்க என்ஜின் உடன் பல்சர் 220எஃப் என பஜாஜ் ஆட்டோ அறிமுகப்படுத்தியது. இவ்வாறான தோற்றம் கொண்ட பைக் எதுவும் இந்திய மார்க்கெட்டில் விற்பனையில் இல்லை.

பஜாஜ் நிறுவனம் தனது பல்சர் பைக்குகளை அவ்வப்போது அப்டேட் செய்வது வழக்கம். குறைந்தப்பட்சம், பைக்கின் கிராஃபிக்ஸ் ஆவது மாற்றப்படும். அந்த வகையில் தற்போது, பல்சர் 220எஃப் பைக்கின் கிராஃபிக்ஸ் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பல்சர் 250 பைக்குகளில், '250' எழுத்துகள் நன்கு தடிமனான எழுத்துகளாக பெட்ரோல் டேங்கில் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, பல்சர் 220எஃப் பைக்கிலும் '220' கிராஃபிக்ஸ் எழுத்துகள் பெரியதாக்கப்பட்டுள்ளன.

pulsar 220f in new avatar

மேலும், பல்சர் 220எஃப் பைக்கில் டிஜிட்டல்-அனலாக் டிஸ்பிளேவுக்கு பதிலாக எல்சிடி திரை வழங்கப்பட்டுள்ளது. பல்சர் என்160 பைக்கில் இவ்வாறான எல்சிடி திரையை காணலாம். ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதியை கொண்ட இந்த எல்சிடி டிஸ்பிளேவின் மூலமாக பயணத்திற்கான வழிக்காட்டுதலை பெறலாம். இந்த திரைக்கு வலது பக்கத்தில் மொபைல் போனை சார்ஜ் செய்து கொள்வதற்கான யுஎஸ்பி சார்ஜிங் சாக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த அப்டேட்களினால் பல்சர் 220எஃப் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2,500 அதிகரிக்கப்பட்டுள்ளது. மற்றப்படி, பைக்கின் என்ஜின் சிஸ்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. பல்சர் 220எஃப் பைக்கில் பொருத்தப்படும் 220சிசி ஏர்/ஆயில்-கூல்டு என்ஜின் அதிகப்பட்சமாக 20.4 எச்பி மற்றும் 18.5 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

pulsar 220f in new avatar

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பல்சர் 220எஃப் பைக்கின் தோற்றத்தை மெருக்கேற்றி இருப்பதுடன், பைக்கில் புதியதாக சில வசதிகளையும் பஜாஜ் சேர்த்திருப்பது அருமையான விஷயம் ஆகும். குறிப்பாக, மொபைல் போன் சார்ஜிங் வசதி கொடுக்கப்பட்டுள்ளதினால் பயணத்தின் போது மொபைல் போனை பயன்படுத்திக் கொண்டே சார்ஜ் செய்துக் கொள்ளலாம். புதிய தோற்றத்தில் பல்சர் 220எஃப் பைக்கை கீழேயுள்ள வீடியோவில் காணலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, April 27, 2024, 8:00 [IST]
English summary
Bajaj pulsar 220f in new avatar at dealership showroom check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X