இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
பஜாஜ் நிறுவனம் இன்றைய இளைஞர்களை கவர்வதற்காக பல்சர் 400 என்ற பைக்கை களம் இறக்கப் போவதாக தகவல் வெளியான நிலையில், இது குறித்து அதிகாரப்பூர்வ டீசர் ஒன்றை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி குறைந்த விலையில் 400 சிசி திறன் கொண்ட பல்சர் பைக் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
400 சிசிக்கு குறைவான என்ஜின் செக்மெண்டில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தான் நீண்ட காலமாக அதிகம் செலுத்தி வருகிறது. இந்நிறுவனத்தின் 350 சிசி இன்ஜின் கொண்ட வாகனங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் அதிகம் ஈர்க்கப்பட்டு சிறப்பாக விற்பனையாகி வரும் பைக்காக இருக்கிறது. ஆனால் ராயல் என்ஃபீல்டு தனித்துவமான பைக்காக உள்ளது.

இந்நிலையில் இன்றைய இளைஞர்கள் மத்தியில் ராயல் என்ஃபீல்டுக்கு மாற்றாக வேறு அம்சங்கள் நிறைந்த பைக்குகள் வேண்டுமென்ற மனநிலை இருந்தது. இந்த மனநிலைக்கு ஏற்ப பல வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது 400 சிசி செக்மெண்டில் பல்வேறு புதிய பைக் உள்ளார்கள். ஹார்லிடேவிட்சன் முதல் டிரையம்ப் வரை பல்வேறு பெரிய நிறுவனங்கள் கூட இந்த செக்மெண்டில் தான் குறி வைத்து இருக்கிறார்கள்.
இந்நிலையில் பஜாஜ் நிறுவனமும் தனது பல்சர் பைக்கில் பெரிய இன்ஜின் கொண்ட பைக்கை களம் இறக்க முடிவு செய்துள்ளது. இதன்படி பஜாஜ் பல்சர்400 பைக்கை விரைவில் அந்நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப் போகிறது. வரும் மே மாதம் 3ம் தேதி இதன் அதிகாரப்பூர்வ அறிமுகம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இதற்கான டீசர் ஒன்றை நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் அந்நிறுவனம் பல்சர்400 பைக்கை வெளியிடப் போவதை உறுதி செய்துள்ளது.

இந்த டீசரில் பார்க்கும்போது பஜாஜ் பல்சர் என்எஸ் 250 பைக்கில் இருந்து இந்த பைக்கில் முக்கியமாக மாற்றமாக இருக்கும் பின்பக்க டயர் இடம்பெற்றுள்ளது. இது வேகமாக சுற்றும் படி இருக்கிறது. மேலும் இந்த பைக் வேகத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட பைக் என்பதால் டீசர் முழுவதும் சாலைகளில் வேகமாக நீல நிறக் கோடுகள் செல்லும்படி உருவாக்கியுள்ளார்கள்.
இந்த டீசர் பார்க்க கண்களை கவரும் நிலையில் இருக்கிறது. இந்த பஜாஜ் பல்சர் 400 பைக் இதுவரை உள்ள பல்சர் பைக்குகளிலேயே பெரிய பல்சர் பைக் கருதப்படுகிறது. இதில் ஏகப்பட்ட அம்சங்கள் உள்ளே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் இன்ஜினை பொருத்தவரை டோமினார் 400 பைக்கில் உள்ள அதே 373சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே இன்ஜின் தான் பஜாஜ் நிறுவனம் தயாரிக்கும் கேடிஎம் 390 அட்வெஞ்ச்சர் மற்றும் ஆர்சி 390 ஆகிய பைக்குகளிலும் பொருத்தப்பட்டுள்ளது. டோமினாரில் பொருத்தப்பட்ட இன்ஜினற்கும் கேடிஎம்-ல் பொருத்தப்பட்ட இன்ஜினியிருக்கும் பவர் மற்றும் டார்க்கில் வித்தியாசம் இருக்கிறது. டோமினார் இன்ஜினை பொருத்தவரை 40பிஎஸ் பவரும் 35 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 43.5 பிஎஸ் பவரையும் 37 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த இன்ஜின் பல்சர் 400க்கு வரும்போது மேலும் இது மாடிஃபிகேஷன் செய்யப்பட்டு வேறுவிதமான பவர் மற்றும் டார்க் திறனுடன் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக்கில் நிச்சயம் ஸ்லீப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் ஆகிய அம்சங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.குவிக் ஸ்விஃப்டர் ஆப்ஷன் டாப் வேரியன்டில் மட்டும் விற்பனைக்கு வர வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
இந்த பைக்கின் சேஸிஸை பொருத்தவரை பஜாஜ் பல்சர் என்எஸ் 200 பைக்கில் உள்ள அதே தான் இதிலும் வழங்கப்படுகிறது. இந்த சேஸிஸ் ஏற்கனவே அதிக திறன் கொண்ட இன்ஜினை தாங்கும் அளவிற்கு தான் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான சோதனையும் செய்யப்பட்டுள்ளதால், இதே இந்த பல்சர் 400 பைக்கிலும் பயன்படுத்துகிறார்கள்.
இந்த பஜாஜ் பல்சர் 400 பைக்கில் யுஎஸ்டி முன்பக்க ஃபோர்க், மோனோ ஷாக் பின்பக்க சஸ்பென்ஷன் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. இரண்டு வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்படுகிறது. மேலும் டூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பைக்கில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்படும் எனவும், இது ப்ளூடூத் கனெக்டி விட்டியுடன் ஓட்டுநர்கள் தங்கள் செல்போனை கனெக்ட் செய்யும் வகையில் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பஜாஜ் பல்சர் 400 பைக்கின் மிக முக்கியமான அம்சமே இதன் விலை தான். இந்த பைக் அறிமுகமாகும் போது குறிப்பிட்ட காலத்திற்கு இதன் விலை குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பஜாஜ் நிறுவனம் ஏற்கனவே இதை டொமினாரை விட குறைவான விலையில் தான் விற்பனைக்கு கொண்டு வரப் போவதாக தெரிவித்திருந்தது.
நாம் எதிர்பார்க்கும் படி ரூபாய் 2 லட்சத்திற்கும் குறைவான விலையில் இந்த பைக் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அந்நிறுவனம் பல்சரின் விற்பனையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. போட்டி நிறுவனங்களின் வாகனங்களின் விலையை ஒப்பிடும் போது குறைவாக இருக்க வேண்டும் என இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
பஜாஜ் நிறுவனம் தனது டோமினார் பைக்கை ரூபாய் 2.31 லட்சம் என்ற விலையில் விற்பனை செய்து வருகிறது. அதைவிட குறைவான விலையில் தான் இந்த பைக்கை விற்பனைக்கு கொண்டு வரும் என்பதால் ரூபாய் 2 லட்சத்துக்கும் குறைவான விலையில் விற்பனைக்கு வர வாய்ப்பு உள்ளது. இருந்தாலும் சில நேரங்களில் ரூபாய் 2 -2.10 லட்சம் என்ற விலையில் கூட விற்பனைக்கு வரலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பல்சர் 400 பைக் 400 சிசி செக்மென்ட்டில் விற்பனைக்கு வரும் நிலையில், இது நேரடியாக ராயல் என்ஃபீல்டின் விற்பனையை பாதிக்க வாய்ப்புள்ளது. என்னதான் இரண்டு பைக்கிலும் வேறு வேறு செக்மெண்ட்களாக இருந்தாலும், வாடிக்கையாளர்கள் மனநிலை ராயல்என்ஃபீல்டு பைக்கில் இல்லாத அம்சங்கள் இதில் இருந்தால் இதை வாங்கலாம் என்று தோன்ற வாய்ப்புள்ளது. இதனால் இந்த பைக் விற்பனைக்கு வரும்போது மக்களுக்கு பிடித்திருந்தால் நிச்சயம் ராயல்என்ஃபீல்டுக்கு சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications









