ஷோரூமுக்கு புது பல்சர் பைக்கை வாங்க தான் எல்லாரும் வர போறாங்க!! விற்பனை சூடுப்பிடிக்க போகுது!

பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto), இந்தியாவின் முன்னணி 2-வீலர் நிறுவனங்களுள் ஒன்று. பஜாஜ் நிறுவனத்தில் இருந்து பல்வேறு விதமான 2-வீலர்கள் விற்பனை செய்யப்பட்டாலும் பல்சர் பைக்குகள் தான் பஜாஜ் ஆட்டோவின் அடையாளமாக விளங்குகின்றன. இதன் காரணமாக, குறிப்பிட்ட கால இடைவெளியில் புது, புது பல்சர் பைக்குகளை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அறிமுகம் செய்கிறது. இந்த வகையில், பல்சர் என்160 பைக்கில் புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், பல்சர் 125, 150 மற்றும் 220எஃப் பைக்குகளிலும் புது அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளன.

முதலில், பல்சர் என்160 பைக்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வேரியண்ட்டை பற்றி பார்த்துவிடுவோம். மார்க்கெட்டில், கடந்த சில வருடங்களில் அறிமுகம் செய்யப்பட்ட மாடர்னான பல்சர் பைக்குகளுள் ஒன்று என்160 ஆகும். இத்தகைய பைக்கில் புதிய வேரியண்ட் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதி உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

bajaj pulsar bikes upgrades

ப்ளூடூத் மூலமாக உங்களது மொபைல் போனை பைக்குடன் இணைக்க முடியும். இதன் வாயிலாக, பயணம் செய்ய வேண்டிய திசையை ஹேண்டில்பாருக்கு மத்தியில் வழங்கப்படும் திரையில் காணலாம். இதன் மூலமாக, என்160 பைக்கை அன்றாட தேவைகளுக்கு சவுகரியமாக பயன்படுத்த முடியும் என பஜாஜ் நிறுவனம் நம்புகிறது.

இந்த ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதி உடன் சேர்த்து பல்சர் என்160 பைக்கின் கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர்களும் மாற்றப்பட்டுள்ளன. மேலும், புதிய பல்சர் என்160 பைக்கில் 33மிமீ-இல் தங்க நிறத்தில் யுஎஸ்டி ஃபோர்க்குகள் கிடைக்கும். இவற்றுடன், மழை, சாலை மற்றும் ஆஃப்-ரோடு என 3 விதமான ஏபிஎஸ் மோட்களை புதிய பல்சர் என்160 பைக்கில் பெறலாம். இதில், சாலை மோட் ஆனது தினசரி பயன்பாட்டிற்கும், நெடுஞ்சாலையில் செல்வதற்கும் ஏற்றதாக இருக்கும்.

bajaj pulsar bikes upgrades

மழை மோட் ஆனது மழைக்காலத்திற்கு ஏற்றதாக இருக்கும் என்பதால், இந்த மோடில் ஈரமான சாலைகளில் பயமில்லாமல் பைக்கை கொண்டு செல்லலாம். ஆஃப்-ரோடு மோட் ஆனது இன்னும் மோசமாக பள்ளம்/ மேடு, சகதி நிறைந்த பகுதிகளுக்கு பைக்கை கொண்டு செல்வதற்கு ஏற்றது. இந்த வசதிகள் அடங்கிய புதிய பல்சர் என்160 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,39,693 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பல்சர் என்160 பைக்கின் அனைத்து வேரியண்ட்களிலும் 164.82சிசி ஆயில்-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 8,750 ஆர்பிஎம்-இல் 11.7 கிலோவாட்ஸ் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த பல்சர் பைக்கில் இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்படுகின்றன. மேலும், பயணிகளின் கூடுதல் பாதுகாப்பிற்கு ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் கருவியும் இடம்பெறுகிறது.

bajaj pulsar bikes upgrades

பல்சர் 125, பல்சர் 150 மற்றும் பல்சர் 220எஃப் பைக்குகளில் கொண்டுவரப்பட்டுள்ள அப்டேட்கள் என்று பார்த்தால், பல்சர் என்160 பைக்கை போலவே இந்த பல்சர் பைக்குகளிலும் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதி புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், யுஎஸ்பி சார்ஜர் மற்றும் புதிய கிராஃபிக்ஸும் பல்சர் 125, 150 மற்றும் 220எஃப் பைக்குகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஆனால், பல்சர் 125 பைக்கில் இந்த புதிய அப்டேட்கள் கார்பன் ஃபைபர் சிங்கிள் சீட் வேரியண்ட்டிலும், பல்சர் 150 பைக்கில் சிங்கிள் டிஸ்க் பிரேக் வேரியண்ட்டிலும் மட்டும் வழங்கப்பட்டுள்ளன. பல்சர் 220எஃப் பைக்கில் இந்த அப்டேட்கள் அனைத்து வேரியண்ட்களிலும் கிடைக்கும். புதிய அப்டேட்களை பெற்ற பல்சர் 125 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.92,883, பல்சர் 150 பைக்கின் விலை ரூ.1,13,696 மற்றும் பல்சர் 220எஃப் பைக்கின் விலை ரூ.1,41,024 ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மார்க்கெட்டில் அவ்வப்போது அப்டேட் செய்யப்படும் பைக்குகள் என்றால் அது பஜாஜ் பல்சர் பைக்குகள் தான். குறைந்தது, பல்சர் பைக்குகளில் வழங்கப்படும் கிராஃபிக்ஸ் ஸ்டிக்கரை ஆவது அடிக்கடி மாற்றுவதை பஜாஜ் நிறுவனம் மறப்பதில்லை. இதன் விளைவாக, பல்சர் பைக்குகளின் விற்பனை எப்போதும் சிறப்பாகவே உள்ளது. இதன்படி, தற்போது வழங்கப்பட்டுள்ள அப்டேட்களினால் இந்த பல்சர் பைக்குகளின் விற்பனையும் அதிகரிக்கும் என்பது உறுதி.

More from DriveSpark

Article Published On: Friday, June 14, 2024, 21:25 [IST]
English summary
Bajaj pulsar bikes upgrades for 2024 new features price all details here
மேலும்... #bajaj auto #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X