தீபாவளிக்குள்ள விற்பனைக்கு வந்திடும்போலையே.. யாருமே எதிர்பார்க்கல திடீர்னு வெளியீடு செஞ்சுட்டாங்க!

பஜாஜ் (Bajaj) நிறுவனம் இந்தியாவின் 125 சிசி (125CC) பிரிவை அலங்கரிக்கும் விதமாக புதிய பல்சர் என்125 (Pulsar N125) பைக் மாடலை நாட்டில் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்தியாவில் 125 சிசி திறன் கொண்ட டூ-வீலர் மாடல்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த சூழலை தங்களுக்கு சாதமாக்கிக் கொள்ளும் பொருட்டே பஜாஜ் இந்த புதுமுக 125 சிசி பைக்கை நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வர உள்ளது. இந்த நிலையிலேயே தற்போது அப்பைக்கை அதிகாரப்பூர்வ வெளியீடு செய்திருக்கின்றது.

ஓர் வீடியோ வாயிலாகவே இந்த பைக்கை அது வெளிக்காட்டி இருக்கின்றது. பஜாஜ் நிறுவனம் இந்தியாவில் சமீபத்திலேயே ஃப்ரீடம் 125 (Freedom 125) பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இது ஓர் சிஎன்ஜி பைக் மாடல் ஆகும். இதுவே உலகின் முதல் சிஎன்ஜி பைக் மாடல் ஆகும்.

Bajaj pulsar n125 unveiled in india

இந்த நிலையிலேயே அடுத்ததாக புதிய பல்சர் என்125 பைக்கை விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் அது களமிறங்கி இருக்கின்றது. தற்போது விற்பனையில் இருக்கும் மற்ற பல்சர் பைக்குகளிடம் இருந்து பலமடங்கு மாறுபட்ட தோற்றத்தில் காட்சியளிக்கின்றது. அந்தவகையில், முற்றிலும் தனித்துவமான மற்றும் முக்கோண வடிவிலான ஹெட்லைட் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இத்துடன், மிகவும் கட்டுமஸ்தான தோற்றத்திலேயே இந்த பைக் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. தொடர்ந்து, இந்த பைக்கிற்கு ஸ்டைலிஷான மற்றும் ஸ்போர்ட்டி லுக்கை வழங்கும் விதமாக இரண்டு துண்டு அமைப்புடைய இருக்கை, கூர்மையான லுக் கொண்ட இருக்கையின் பின் பக்கம் ஆகியவற்றையும் புதிய பல்சர் 125 கொண்டிருக்கின்றது.

Bajaj pulsar n125 unveiled

மேலும், இந்த பைக்கை பன்முக நிற தேர்வுகளிலும் விற்பனைக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே தற்போது பஜாஜ் வெளியிட்டு இருக்கும் வீடியோ காட்சிகள் அமைந்திருக்கின்றன. இதுமட்டுமில்லைங்க, இந்த பைக்கில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் சிலவும் எதிர்பார்க்கப்படுகின்றன. ப்ளூடூத் இணைப்பு, முழு டிஜிட்டல் கன்சோல், அலாய் வீல் மற்றும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளிட்டவை இந்த பைக்கில் எதிர்பார்க்கப்படுகின்றன.

இதேபோல், சிறந்த ரைடிங் அனுபவத்திற்காக ஆர்எஸ்யூ டெலிஸ்கோபிக் ஃபோர்க் (முன் பக்கத்தில்), மோனோஷாக் (பின் பக்கத்தில்) வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் திருப்பத்தை வெளிக்காட்டும் விதமாக ஹாலோஜன் இன்டிகேட்டர்கள், ஒற்றை துண்டு அமைப்புடைய பில்லியன் கிராப் ரெயில் மற்றும் டயர் ஹக்கர்கள் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

மேலும், இதில் 125 சிசி ஏற் கூல்டு சிங்கிள் சிலிண்டர் எஞ்சினே எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 11.8 பிஎச்பி ஆற்றலையும், 11 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதே எஞ்சினே நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகளிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

இந்த பைக் தீபாவளிக்குள் விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ வார்த்தைகளும் வெளியாகவில்லை என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த பைக் விற்பனைக்கு வரும்பட்சத்தில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர், டிவிஎஸ் ரைடர் 125 ஆகியவற்றிற்கு போட்டியாக அமையும். இந்தியாவில் பஜாஜ் பல்சர் பைக்குகளுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அந்தவரிசையில் புதிய பல்சர் என்125 மாடலும் நல்ல வரவேற்பு பெறும் மாடலாக மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சற்றே தனித்துவமான தோற்றம் மற்றும் அணிகலன்களைக் கொண்ட பைக்காக புதிய பல்சர் என்125 தயாராகி இருக்கின்றது. இதற்கு இந்தியர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே அந்த பைக் மிகவும் ஸ்டைலிஷாக உள்ளது. ஆகையால், விற்பனையில் மிகப் பெரிய வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, October 17, 2024, 21:57 [IST]
English summary
Bajaj pulsar n125 unveiled explore the latest features and specifications
மேலும்... #bajaj auto #bajaj pulsar #india #diwali
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+