பொல்லாதவன் படம் ரிலீஸ் ஆகாத நாடுகளில் கூட விற்பனையில் பல்சர் பைக்!! மேட்-இன்-இந்தியா பைக்கை நம்பி வாங்குறாங்க!
பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனத்தின் பல்சர் பைக் ஒன்று இந்தியாவை தாண்டி வெளிநாட்டு மார்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அப்படி எந்த மாதிரியான பல்சர் பைக்கை வெளிநாட்டில் பஜாஜ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது என்பதையும், அந்த பல்சர் பைக்கை பற்றியும் விரிவாக இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவின் 4வது பெரிய 2-வீலர் நிறுவனமாக விளங்கும் பஜாஜ் ஆட்டோவுக்கு அடையாளமே அதன் பல்சர் பைக்குகள் தான் என்றால், அது மிகையில்லை. ஏனெனில், பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தை பற்றி தெரியாதவர்களுக்கு கூட பல்சர் பைக்குகளை பற்றி தெரிந்துள்ளது. இதன் காரணமாகவே, புது புது பல்சர் பைக்குகளை அவ்வப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்வதை பஜாஜ் நிறுவனம் மறப்பதில்லை.

அதேபோல், பல்சர் பைக்குகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் பஜாஜ் நிறுவனம் தவறாமல் அப்டேட் செய்துவிடுகிறது. இந்த வகையில், இந்தியாவில் சில வருடங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட பல்சர் என்160 பைக் சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்டது. இந்த நிலையில், பல்சர் என்160 பைக்கை லத்தீன் அமெரிக்க நாட்டு சந்தையில் பஜாஜ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
அர்ஜெண்டினா, கொலம்பியா, பிரேசில், மெக்சிகோ என மொத்தம் 33 நாடுகள் லத்தீன் அமெரிக்க நாடுகளாக அழைக்கப்படுகின்றன. குறிப்பாக, மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகள் லத்தீன் அமெரிக்க நாடுகள் எனப்படுகின்றன. பஜாஜ் ஆட்டோ நிறுவனத்துக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்தமாகவே லத்தீன் அமெரிக்க சந்தைகள் உலகளவில் பெரிய மற்றும் முக்கியமான ஆட்டோமொபைல் சந்தையாகும்.

இத்தகைய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பல்சர் என்160 பைக்கிற்கும், நம் இந்தியாவில் விற்பனையில் உள்ள பல்சர் என்160 பைக்கிற்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் உள்ளன. குறிப்பாக, நம் இந்தியாவில் கிடைக்காத நிறத்தில் பல்சர் என்160 பைக்கை லத்தீன் அமெரிக்காவில் பஜாஜ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
அங்கு ஷோரூம் ஒன்றில் இருந்து வெளியாகி உள்ள வீடியோவில், பல்சர் என்160 பைக்குகள் சில்வர் உடன் காக்கி பச்சை மற்றும் சில்வர் உடன் நேவி ப்ளூ நிறங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை காணலாம். இந்த நிறங்களில் இந்தியாவில் பல்சர் என்160 பைக் விற்பனை செய்யப்படுவது இல்லை. அதேபோல், பைக்கை சுற்றிலும் ஒட்டப்படும் ஸ்டிக்கர்களையும் லத்தீன் அமெரிக்க மக்களின் இரசனைக்கு ஏற்ப பஜாஜ் நிறுவனம் ஒட்டியுள்ளதை காண முடிகிறது.

குறிப்பாக, பின் சக்கரத்துக்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள 'என்160' ஸ்டிக்கர் இந்தியாவில் விற்கப்படும் என்160 பைக்கில் வழங்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காக்கி பச்சை நிறத்தில் இருக்கும் என்160 பைக்கில் சக்கரங்களின் ரிம்களிலும் மஞ்சள் நிறத்தை காண முடிகிறது. பைக்கின் என்ஜினை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பேனலில் வழங்கப்பட்டுள்ள கார்ட் உண்மையில் சூப்பராக உள்ளது.
தொழிற்நுட்ப அம்சங்களை பொறுத்தவரையில், இந்தியாவில் ப்ளூடூத் இணைப்பு வசதியை கொண்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை பல்சர் என்160 பைக்கில் வழங்கப்படுகிறது. ஆனால், இது லத்தீன் அமெரிக்க சந்தையில் வழங்கப்படவில்லை. மற்றப்படி, இந்தியாவில் பொருத்தப்படும் அதே 164.82சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் தான் லத்தீன் அமெரிக்க மார்க்கெட்டிலும் பல்சர் என்160 பைக்கில் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில், விற்பனை செய்யும் 2-வீலர்களுக்கு இணையான எண்ணிக்கையில் வெளிநாடுகளுக்கும் 2-வீலர்களை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த வகையில், லத்தீன் அமெரிக்க சந்தையும் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்துக்கு முக்கியமான வெளிநாட்டு சந்தைகளுள் ஒன்றாகும். ஆனால், செயல்திறன்மிக்க பைக்குகளை விரும்பும் லத்தீன் அமெரிக்க மக்கள் இத்தகைய 160சிசி பைக்கை எந்த அளவிற்கு ஏற்றுக் கொள்வார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









